Latest Updates
-
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்!
உங்க பர்ஸில் இது இருந்தா உடனே தூக்கிப் போடுங்க.. ஏன்னா இது பணத்தை சேரவிடாதாம்...
வாஸ்துப்படி ஒருவரது பர்ஸில் சில பொருட்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இப்பொருட்கள் பர்ஸில் இருந்தால், என்ன செய்தாலும் பணம் நீடிக்காது.
இவ்வுலகில் பிரச்சனையின்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பணம் மிகவும் முக்கியம். இந்த பணத்தை சம்பாதிக்க நாம் ஒவ்வொருவரும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி சம்பாதிக்கும் பணம் எப்போதும் நாம் பயன்படுத்தும் பர்ஸில் நிலைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஏனெனில் பணம் இருந்தால் நாம் விரும்பியதை வாங்கி மகிழலாம். உலகில் உள்ள ஒவ்வொருவருமே தங்களின் வாழ்க்கை செல்வம் நிறைந்து இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம்.

ஆனால் சிலர் சம்பாதிக்கும் பணம் அவர்களின் பர்ஸில் நிலைக்காது செலவாகும். வாஸ்துப்படி ஒருவரது பர்ஸில் சில பொருட்கள் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இப்பொருட்கள் பர்ஸில் இருந்தால், என்ன செய்தாலும் பணம் நீடிக்காது. அதோடு எப்போதும் பணப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். சிலரது பர்ஸில் பணத்தைத் தவிர வேறு சில பொருட்களும் இருக்கும். வாஸ்துப்படி பர்ஸில் தேவையற்ற பொருட்கள் இருந்தால், அது எப்போதும் பணப் பிரச்சனையை உண்டாக்கும். இப்போது வாஸ்து படி எந்தெந்த பொருட்களை பர்ஸில் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

பழைய பில்
பெரும்பாலானோர் தங்களின் பர்ஸில் கடைகளில் கொடுக்கப்படும் பில்களை பத்திரப்படுத்தி வைப்பார்கள். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, பர்ஸில் பழைய பில்களை சேமித்து வைப்பது அசுபமாக கருதப்படுகிறது. ஒருவர் தங்கள் பர்ஸில் நீண்ட நாட்களாக பழைய பில்களை வைத்திருந்தால், வாஸ்துப்படி பண இழப்பை உண்டாக்கும்.

கடவுளின் போட்டோ
பலர் கடவுளின் போட்டோவை தங்களுடன் வைத்திருப்பதை சுபமாக கருதலாம். ஆனால் கடவுளின் போட்டோவை பர்ஸில் வைத்திருக்காதீர்கள். அவ்வாறு வைத்திருந்தால், கடன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

இறந்தவர்களின் போட்டோக்கள்
இறந்தவர்களின் போட்டோக்களை எப்போதும் பர்ஸில் வைத்திருக்கக்கூடாது. ஆனால் பலர் இறந்தவர்களுடனான ஆழமான தொடர்பின் காரணமாக தங்களுடன் அவர்கள் எப்போதும் இருக்க வேண்டுமென்று தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி வைத்திருப்பது நல்லதல்ல. வாஸ்துப்படி, பர்ஸ் லட்சுமி தேவி குடியிருக்கும் இடமாக கருதப்படுகிறது. எனவே அவ்விடத்தில் இறந்தவர்களின் போட்டோவை வைப்பது வாஸ்து குறைபாடாகி, பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

சாவி
பலர் தங்கள் வீட்டு அல்லது வண்டி சாவியை தங்கள் பர்ஸில் வைத்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்வது மோசமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, பர்ஸில் எந்த வகையான உலோகப் பொருளையும் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து பண இழப்பிற்கு வழிவகுக்கும். எனவே இத்தவறை செய்யாதீர்கள்.

கிழிந்த நோட்டுகள்
பர்ஸில் எப்போதும் கிழிந்த நோட்டுகளையோ, அழுக்கான காகிதத்தையோ வைத்திருக்கக்கூடாது. பர்ஸை ஒருவர் எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அது லட்சுமி தேவி குடியிருக்கும் இடம். உங்கள் பர்ஸில் பணம் அதிகம் சேர வேண்டுமானால், ஸ்ரீ யந்திரத்தை பர்ஸில் வைத்துக் கொள்ளலாம். இது லட்சுமி தேவியின் வடிவமாகும். இது அதிக பணத்தை ஈர்க்கும் மற்றும் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.



Click it and Unblock the Notifications