For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுள் ஆரோக்கியம் சொல்லும் எட்டாம் இடம் - மரணத்தை வெல்ல பரிகாரங்கள்!

|

மனிதனுக்கு மரணமும், பிறப்புக்குரிய அனைத்து வேலைபாடுகளும் இந்த எட்டாம் பாவத்தில்தான் காண முடிகிறது. எட்டாம் இடத்தைக் கொண்டு ஆயுள் மட்டும் கணிக்கப்படுவதில்லை. ஒருவரின் ஆயுள் எப்போது எப்படி முடியும் என்று கணிக்கலாம். மரணம் சம்பவிக்கும் விதம், அரசால் ஏற்படும் உயிர் சேதம் கொலை செய்தல், கொலை செய்யப்படுதல், கொடூர விபத்து, போன்றவை குறித்தும் இந்த இடம் சொல்கிறது. தன்வந்திரி ஜெயந்தி, தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஆயுள் ஸ்தானம் பற்றியும் பரிகாரம் பற்றியும் பார்க்கலாம்.

ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாம் இடத்தைக் கொண்டு ஆயுளைப் பற்றி கூறும் அதே நேரத்தில் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்தையும் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தின் மூலம் மாரகத்தை பற்றியும் கூற முடியும். எட்டாம் வீடு என்பது மாங்கல்யாதானம். பெண்களுக்கு எட்டாம் வீடு கணவனின் ஆயுளை நிர்ணயிக்கும் வீடாக அமைகிறது.

Diwali

மனித ஆயுளை ஆறு வகையாக பிரிக்கிறார்கள். சிசுவுக்கு மரணம் தாயின் வயிற்றில் ஏற்படுகிறது. பாலாரிஷ்டம் என்பது 6 வயது வரை வாழ்வது. அற்ப ஆயுள் என்பது 6 வயது முதல் 40 வரை வாழ்ந்து மரணமடைதல். மத்திம ஆயுள் எனில் 40 வயதுக்கு மேல் நிகழ்வது 60 வயது வரை வாழ்வது. 60 வயதுக்கு மேல் வாழ்பவர்களுக்கு தீர்க்க ஆயுள் 90 வயதுக்கு மேல் வாழ்பவர்களுக்கு பரிபூரண ஆயுள். ஒருவரின் ஆயுள் எப்போது முடியும் என்பதை சொல்லும் இடம்தான் ஜாதகத்தில் எட்டாம் வீடு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜாதகத்தில் எட்டாம் இடம்

ஜாதகத்தில் எட்டாம் இடம்

எட்டாம் வீடு ஆயுள் ஸ்தானம் மட்டுமல்ல அவமானம். கண்டம். மரணம். இயற்கையான மரணம். கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம். தடை உயில். கெட்ட செயல். தானாக தொலைந்து போதல். வரதட்சணை. சீர். மாங்கல்யம். ஆபரேஷன். கசாப்பு கடைகள். மலக் கழிவிடம். கர்பப்பை, இறப்பு, உருவாக்கத்திறன் உறுப்புகளுக்கு, ஒரு தனிநபரின் உண்மைகள், மறைபொருள் ஆய்வும், மரபு, ஈட்டப்பெறாத வருமானம், இரகசிய இடம், இறப்பு சுற்றியுள்ள வாழ்க்கை. பங்காளி குடும்பம் அமைப்பின் செல்வாக்கை காட்டுகிறது. விபத்துகள், தீ அல்லது தற்கொலை, துன்பம், கொடுமை, கலவரத்தை, கவலைகள், அவமானம், தாமதம், மனவருத்தம், ஏமாற்றம், இழப்பு, இடையூறு, திருட்டு மற்றும் கொள்ளை, மக்கள் பணத்தை அல்லது சொத்துக்களை பயன்படுத்துவது அல்லது தவறாக கையாள்கிறது. வரி, அபராதம், மருந்துகள், தண்டனை நடவடிக்கைகளை இங்கு காணப்படுகின்றன. மனைவி வரதட்சணை, மாமியார் வழி இலாபம், இடுப்பு, விந்து, வெளிப்புற பிறப்புறுப்பு, அந்நிய நாடுகளில் நிதி உறவுகள், மேயர் போன்றவைகளையும் குறிக்கிறது.

கடன் கஷ்டம்

கடன் கஷ்டம்

லக்னத்தில் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், தீர்க்கமான ஆயுள் உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும். இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றால், வறுமை வியாதிகள் வரும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும். எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டில் அமர்ந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். கணவன் அல்லது மனைவியை பிரிந்து வாழ்வார்கள். எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால் கேடுகள் குறையும்.

ஒற்றுமை பிரச்சனை

ஒற்றுமை பிரச்சனை

எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால் உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும். எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால் பாதிப்புகள் குறையும். எட்டாம் அதிபதி நான்கில் இருந்தால் அம்மா உடன் உறவு பாதிக்கும். தாய்பாசமே கிடைக்காது. நான்காம் அதிபதியுடன் எட்டாம் அதிபதி சேர்ந்தால் சுகங்கள் பாதிக்கும். சுப கிரகம் பார்வை கிடைத்தால் சந்தோஷம் ஏற்படும்.

மன அமைதி பாதிக்கும்

மன அமைதி பாதிக்கும்

எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால் மன அமைதி போகும். சில மன நோயாளியாக கூட மாறுவார்கள். எட்டுக்கு அதிபதி ஐந்தாம் வீட்டு அதிபதியுடன் கூடி நின்றால் பிள்ளைகளால் தொல்லை வரும். சுப கிரகத்தின் பார்வை சங்கடங்களை நீக்கும். எட்டாம் அதிபதி ஆறில் இருந்தால் உடல் மெலிந்திருக்கும். புத்திர பாக்கியம் பாதிக்கும். எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டு அதிபதியுடன் இணைந்திருந்தால் ராஜயோகம் கிடைக்கும். செல்வம் புகழ் சேரும். நினைத்த காரியம் கைகூடும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால் பூரண ஆயுள் உண்டு. அதே நேரம் கணவன் மனைவி இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது. பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும் சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், பாதிப்புகள் குறையும். எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகரின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த அமைப்பு ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.

நோய்கள் பாதிப்புகள்

நோய்கள் பாதிப்புகள்

எட்டில் சூரியன் நின்றால் கண்களில் கோளாறு, நெஞ்சு அடைப்பு, வாயுதொல்லை, பின் தலையில் காயம் ஏற்படலாம். சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றால் தீர்க்க ஆயுள் பெறுவார். இல்லாவிட்டால் மத்திம ஆயுள்தான். எட்டாம் வீட்டில் சந்திரன் நின்றால், தாய் வழி பரம்பரை நோய்கள் வரும். கெட்ட நீரால் பல நோய்கள் வரும். நெஞ்சில் கபம் கட்டும். தீராத வயிற்றுவலி அவ்வப்போது ஏற்படும். சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்றால் தீர்க்க ஆயுள் உண்டு. இல்லையேல் அற்ப ஆயுள் கொண்டவராக இருப்பார்.

ரத்த சோகை

ரத்த சோகை

எட்டில் செவ்வாய் நின்றால் ரத்தசோகை, உடலில் ரத்த அளவு குறைதல், கணையம் பாதிப்பு ஏற்படலாம். இந்த ஜாதகர் போதைக்கு அடிமையாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எட்டாம் பாவத்தில் சனி நிற்பதோடு, அவர் நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு பரிபூரண ஆயுள் பலன் உண்டு. என்றாலும் கண் பார்வை மங்கும். சரீரத்தில் ஏதாவது தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். புதிய தொற்று நோய்கள் வரக்கூடும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும்.

சுவாசக்கோளாறு

சுவாசக்கோளாறு

எட்டில் புதன் நிற்பதை, மறைந்த புதன் நிறைந்த பலன் என்பார்கள். இந்த ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் உண்டு. இருந்தாலும் சுவாச கோளாறு, வாயுத்தொல்லை, கை கால் முடக்கவாதம் ஏற்படும். எட்டில் குரு நின்றால் நோயால் அவதிப்படுவார். குரு ஆட்சி, உச்ச நிலையில் இருந்தால் தீர்க்க ஆயுள் இருக்கும். எட்டாம் பாவத்தில் சுக்ரன் நின்றால் நெஞ்சில் கபம் சேரும். சுவாசக் கோளாறு, காசநோய் தாக்கும்.

விஷப்பூச்சி கடிக்கும்

விஷப்பூச்சி கடிக்கும்

எட்டாம் பாவத்தில் ராகு நின்றால் தனது உடல் மீது அக்கறை இல்லாதவராகவும் இருப்பார். விஷப்பூச்சி கடிப்பதால் உடல் பொலிவு குறையும். ராகுவை சுப கிரகம் பார்த்தால் மட்டுமே ஜாதகருக்கு தீர்க்க ஆயுள் உண்டு. இல்லாவிட்டால் மத்திம ஆயுள் மட்டுமே. உடலில் பலவிதமான நோய்களைக் கொண்டவராக இவர் திகழ்வார். எட்டில் கேது நின்று, அதன்மீது சுப கிரக பார்வை இருந்தால் ஜாதகர் நீண்ட ஆயுள் கொண்டவராக இருப்பார். சிறு வயதில் தொற்றிய நோய்கள் அவ்வப்போது வந்துபோகும். பருவகால மாற்றங்களில் வரக்கூடிய நோய்கள் தாக்கும்.

தன்வந்திரி வழிபாடு

தன்வந்திரி வழிபாடு

ஆயுள் அதிகரிக்கவும் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியமாக இருக்கவும் தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்படும் தன்வந்திரி ஜெயந்தி தினத்தில் ஆரோக்கிய கடவுள் தன்வந்திரி பகவானை வழிபடுவோம். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diwali National ayurveda day The 8th House in Astrology

The 8th House in Astrology house indicates whether the person will encounter a natural death or if it will be unnatural such as by accident, drowning, fire, suicide, or chronic disease or if the death will be slow, sudden or violent.
Story first published: Thursday, October 24, 2019, 13:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more