Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
தீபாவளியில் இருந்து இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
வருகிற தீபாவளி பண்டிகையானது பலரது வாழ்வில் மிகவும் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எனவே இந்த ஆண்டின் தீபாவளி மிகவும் முக்கியமானது என்றே கூறலாம். ஏனெனில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
தீபத் திருநாளான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு அனைவரும் ஆவலாக உள்ளோம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது 2022 அக்டோபர் 24 ஆம் தேதி வருகிறது. வருகிற தீபாவளி பண்டிகையானது பலரது வாழ்வில் மிகவும் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. எனவே இந்த ஆண்டின் தீபாவளி மிகவும் முக்கியமானது என்றே கூறலாம். ஏனெனில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

எப்படியெனில் துலாம் ராசியில் சூரியன், சுக்கிரன் மற்றும் கேது பயணித்து வருகிறார்கள். மேலும் தீபாவளிக்கு முந்தைய தினம் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த கிரக நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். இதன் மூலம் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும். இப்போது 2022 ஆம் ஆண்டின் தீபாவளியில் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கவுள்ளது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த தீபாவளியில் இருந்து பிரகாசிக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முடிவுகள் கிடைக்கும். சில நற்செய்திகள் தேடி வரும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். தாம்பத்ய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் நிதி நிலை தீபாவளிக்கு பின் வலுவாகும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். முடங்கி கிடைக்கும் வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களின் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவழிப்பீர்கள். தாம்பத்ய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். வணிகர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உங்களுக்கு உதவ மற்றவர்கள் முன்வருவார்கள்.

சிம்மம்
தீபாவளிக்கு பின் புதன் துலாம் ராசிக்கு செல்வதால் சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாகும். குடும்பத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திடீர் பண வரவு கிடைக்கும். பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். நிலத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். மொத்தத்தில் எதிலும் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

விருச்சிகம்
தீபாவளியில் இருந்து விருச்சிக ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. ஏற்றுமதி இறக்குமதி வணிகம் செய்பவர்கள் நேரம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணிபுரிபவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு
தீபாவளிக்கு பின் புதன் துலாம் ராசிக்கு செல்வதால், தனுசு ராசிக்காரர்களின் பொருளாதார பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிக்கிய பணம் தீபாவளிக்கு பின் கைக்கு வந்து சேரும். வணிகர்களுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும். குடும்ப சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நற்பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. திடீரென்று கைக்கு பணம் வரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். வியாபாரிகளுக்கு லாபகரமாக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications