Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
லட்சுமி பூஜையின் போது செல்வம் பெருக ஒவ்வொரு ராசிக்காரரும் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
லட்சுமி தேவியின் ஆசியைப் பெற விரும்பினால், தீபாவளியன்று செய்யும் லட்சுமி பூஜையன்று உங்கள் ராசிக்கேற்ற லட்சுமி மந்திரங்களை சொல்லி லட்சுமி தேவியை வழிபடுங்கள். கீழே ஒவ்வொரு ராசிக்குமான லட்சுமி மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
தீப ஒளித் திருவிழாவான தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. இந்த தீபாவளி பண்டிகையின் போது லட்சுமி பூஜை செய்வார்கள். ஏனெனில் தீபாவளி பண்டிகையானது லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வதாக கருதப்படுகிறார். லட்சுமி தேவியின் அருளைப் பெற்றிருந்தால், செல்வ செழிப்போடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். எனவே தான் ஒவ்வொருவரும் லட்சுமி தேவியின் ஆசியைப் பெறுவதற்கான வழிகளை அறிந்து, அவற்றை பின்பற்ற முயற்சிக்கிறார்கள்.

நீங்களும் லட்சுமி தேவியின் ஆசியைப் பெற விரும்பினால், தீபாவளியன்று செய்யும் லட்சுமி பூஜையன்று உங்கள் ராசிக்கேற்ற லட்சுமி மந்திரங்களை சொல்லி லட்சுமி தேவியை வழிபடுங்கள். கீழே ஒவ்வொரு ராசிக்குமான லட்சுமி மந்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்கள் ராசிக்கு ஏற்றதை அறிந்து, அவற்றை லட்சுமி பூஜையன்று சொல்லி, லட்சுமி தேவியை மகிழ்வித்து, அவரின் அருளைப் பெறுங்கள்.

மேஷம்
"ஓம் க்லோ ஶ்ரீம் அன்னம் மஹாநாம் மே தேவநாதிபத்யே மமர்ஷ் பிரதாபய ஸ்வாஹா ஸ்ரீம் க்லோம் ஓம்"
மேஷ ராசிக்காரங்கள் இந்த மந்திரத்தைச் சொல்லி லட்சுமி தேவியை வழிபடுவது நல்லது. இது பணம் தொடர்பான பிரச்சனைகளைப் போக்க உதவி புரியும்.

ரிஷபம்
"ஸ்ரீ ஹ்ரீம் க்லீம் ஸ்ரீ சித்தலக்ஷ்மியை நமஹ"
ரிஷப ராசிக்காரர்கள் இந்த லட்சுமி மந்திரத்தை பாராயணம் செய்வதன் மூலம், கடன் பிரச்சனைகள் மற்றும் பிற நிதி பிரச்சனைகள் நீங்கும்.

மிதுனம்
"ஐம் ஹ்ரீம் ஶ்ரீ ஜ்யேஷ்டலக்ஷ்மி ஸ்வயம்புவே ஹீம் ஜ்யேஷ்தாயை நமஹ"
மிதுன ராசிக்காரர்கள் இந்த லட்சுமி மந்திரத்தை சொல்வதன் மூலம் வருமானம் அதிகரித்து, பணப் பிரச்சனைகள் நீங்கும்.

கடகம்
"ஓம் ஹ்ரீம் லக்ஷ்மாய நமஹ பரமலாக்ஷவஸ்தாய ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா"
கடக ராசிக்காரர்கள் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம், பணம் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
"ஓம் ஹ்ரீம் க்ரீம் மைம் நமஹ சதோவிதானந்த் விக்ரஹாயே ஹ்ரீம் க்ரீம் ஸ்வாஹா"
சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற வேண்டுமானால், இந்த மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். இதனால் லட்சுமி தேவியின் ஆசியால் செல்வம் பெருகும்.

கன்னி
"ஐம் ஹ்ரீம் ஸ்ரீ ஜ்யேஷ்டலக்ஷ்மி ஸ்வயம்புவே ஹீம் ஜ்யேஷ்தாயை நமஹ"
கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த மந்திரத்தை சொல்லி லட்சுமியை தேவியை வழிபடுவதன் மூலம், பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

துலாம்
"ஓம் ஶ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஶ்ரீம் சித்தலக்ஷ்ம்யை நமஹ"
துலாம் ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம், வாழ்வில் மகிழ்ச்சியும், வளரும் பெருகும்.

விருச்சிகம்
" ஓம் க்லோம் ஸ்ரீம் அன்னம் மஹன்னம் மே தேவன்னாதிபதியே மாமன்னம் ப்ரதாபய ஸ்வாஹா ஸ்ரீ க்லீம் ஓம்"
விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த மந்திரத்தை சொல்லி லட்சுமி தேவியை வழிபட்டால், லட்சுமி தேவியின் பரிபூர்ண அருளைப் பெறலாம்.

தனுசு
"ஓம் ஹ்ரீம் ஜயாயை நமஹ அஜித்தமவஸ்திதாயை ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா"
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம், லட்சுமி தேவியின் அருளால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

மகரம்
"ஓம் ஹ்ரீம் மாயாயை நமஹ மோஹலக்ஷவஸ்திதாயை ஶ்ரீம் ஶ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா"
மகர ராசிக்காரர்கள் இந்த மந்திரத்தை லட்சுமி தேவியை மனதார நினைத்து சொல்வதனால், விரைவில் வருமானத்தில் அதிகரிப்பைக் காணலாம்.

கும்பம்
"ஓம் ஹிரீம் மாயாயே நமஹ மோஹலக்ஷவஸ்தாயை ஶ்ரீம் ஸ்ரீம் ஹிரீம் ஸ்வாஹா"
கும்ப ராசிக்காரர்கள் இந்த மந்திரத்தை லட்சுமி தேவியை மனதில் நினைத்து சொல்வதன் மூலம், லட்சுமி தேவியின் சிறப்பான அருள் கிடைக்கும்.

மீனம்
"ஓம் ஹிரீம் ஜயயே நமஹ அஜிதாதமவஸ்தாயை ஹிரீம் ஸ்ரீம் ஸ்வாஹா"
மீன ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற நினைத்தால், இந்த லட்சுமி மந்திரத்தை சொல்லி தேவியை வழிபடுவதன் மூலம், நிதி பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.



Click it and Unblock the Notifications