Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
Diwali 2022 Horoscope: தீபாவளியில் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படப் போகுது...
ஜோதிடத்தின் படி, தீபாவளி மிகவும் முக்கியமான பண்டிகையாகும். இப்போது 12 ராசிகளுக்கான தீபாவளி ராசிபலன்களைக் காண்போம். உங்கள் ராசிக்கு எப்படி என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்று தீபாவளி. தீப ஒளித் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகையானது பல காரணங்களுக்காக கொண்டாடப்பட்டு வருவதாக புராணங்கள் கூறுகின்றன. அதில் 14 வருட வனவாசம் முடிந்து ராமர் அயோத்திக்கு திரும்பியதை கொண்டாடும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இது தவிர வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாகவும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி நாளில் மக்கள் வீட்டை விளக்குகளால் அலங்கரித்து, பட்டாசுகளை வெடித்து, லட்சுமி தேவியை வணங்கி கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது 2022 அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தின் படி, தீபாவளி மிகவும் முக்கியமான பண்டிகையாகும். இப்போது 12 ராசிகளுக்கான தீபாவளி ராசிபலன்களைக் காண்போம். உங்கள் ராசிக்கு எப்படி என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
இந்த தீபாவளியில் உங்கள் ராசியில் சில மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே மேஷ ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். கர்ப்பிணிகள் அதிக மன அழுத்தம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த தீபாவளிக்கு நல்ல போனஸ், பதவி உயர்வு போன்றவற்றை பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் பொறுப்புக்கள் அதிகரிக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் பாசத்தைப் பெறுவீர்கள்.

ரிஷபம்
இந்த தீபாவளி பண்டிகையில் ரிஷப ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் ரகசியங்களை பகிர்ந்து கொண்டவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். தீபாவளி நாளில் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இருப்பினும், நீண்ட நாட்களாக உங்களுக்கு வரவேண்டிய பணம் தீபாவளி நாளில் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் நீங்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் தீபாவளி நாளில் தங்களின் நடத்தையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக பெண்களுடன் பேசும் போது, வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும். இந்த தீபாவளி உங்களுக்கு நன்றாக இருப்பதும், இல்லாததும் உங்கள் நடத்தையைப் பொறுத்து தான் உள்ளது. பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதிக வேலைப்பளுவின் காரணமாக உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முடியாமல் போகும்.

கடகம்
இந்த தீபாவளி கடக ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நற்செய்திகளைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். இருப்பினும், குடும்பத்தினர்களுக்காக நேரத்தை ஒதுக்குவீர்கள். உங்கள் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், பணப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் இருந்து நற்செய்தியைப் பெறுவீர்கள் மற்றும் அவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். இந்த தீபாவளி நாளில் லட்சுமி தேவியை வழிபட்டால், நீக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், பணப் பற்றாக்குறையை உணர விடமாட்டாள். இந்த தீபாவளி அன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பரிசு ஒன்று கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் இந்த தீபாவளியில் குறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் கனவு விரைவில் நனவாகும். இந்த தீபாவளியில் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். இருப்பினும் கவலைப்பட வேண்டாம். லட்சுமி தேவியை வழிபட்டால், அவரின் ஆசி எப்போதும் உங்களுக்கு இருக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. லட்சுமி தேவியின் சிறப்பு அருள் இந்த தீபாவளியில் துலாம் ராசிக்காரர்களுக்கு உண்டு. துலாம் ராசியில் பல கிரகங்கள் ஒன்றிணைவதால் சில பிரச்சனைகள் வரலாம். இருப்பினும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நம்புங்கள். ஏனெனில் அவர் தான் கெட்ட காலங்களிலும் உங்களுடன் இருப்பார்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். இந்த தீபாவளியில் லட்சுமி தேவியின் ஆசியால் உங்கள் நிதி நிலை மேம்படும். குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பீர்கள். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களையும் பெறுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களும் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேலை காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை கவனிக்காமல் இருந்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு தீங்கு நேரிடும். வேலையை மாற்ற நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், விரைவில் ஒரு நல்ல முடிவை எடுங்கள். ஏனெனில் இக்காலம் உங்களுக்கு பொற்காலம். யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உங்கள் துணையுடனான உறவு மோசமடைய வாய்ப்புள்ளது. முடிந்தவரை, பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவார்கள். தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவீர்கள். பணப்பிரச்சனைகள் குறையும் மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சிரமப்படுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களின் மனதைப் புண்படும் படி ஏதாவது செய்தால், அதன் விளைவுகளை இந்த தீபாவளியில் சந்திக்க நேரிடும். உங்கள் துணையை அவமதிக்காதீர்கள். மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. ஆனால் தேவையில்லாத செலவுகளால் சில நேரங்களில் பணத்தை இழக்க வேண்டியிருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த தீபாவளியில் வாழ்க்கைத் துணையின் ஆதரவையும், அன்பையும் பெற்று, மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த தீபாவளி பண்டிகை ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும். மேலும் இந்நாளில் சில புதிய மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வீட்டிற்கு வாங்கலாம். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வெளியிடங்களில் உணவுகளை உண்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











