Latest Updates
-
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்!
இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் தீபாவளிக்கு முன்னாடியே தூக்கி போடுங்க.. இல்ல பணப்பிரச்சனை அதிகமா வரும்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்வோம். பொதுவாக லட்சுமி தேவி உடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் வசிக்கமாட்டார். அந்த வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை இருக்கும்.
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் அனைவரும் பண்டிகை காலங்களில் வீட்டை சுத்தம் செய்வோம். அப்படி தான் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் வீட்டை சுத்தம் செய்வோம். பொதுவாக லட்சுமி தேவி உடைந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் வசிக்கமாட்டார். அந்த வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறை இருக்கும்.

நீங்கள் தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்கிறீர்கள் என்றால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால், அதை உடனே அப்புறப்படுத்துங்கள். அபசகுணமான பொருட்கள் நிறைந்த வீட்டில் லட்சுமி தேவி தங்குவதில்லை. ஆகவே உங்கள் வீட்டில் பணப்பிரச்சனை வரக்கூடாது, வீட்டில் சந்தோஷமும், செல்வமும் நிறைந்திருக்க வேண்டுமென நினைத்தால், பின்வரும் பொருட்களை உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.

உடைந்த கடிகாரங்கள்
வீட்டில் உடைந்த கடிகாரங்கள் இருப்பது அபசகுணமாக கூறப்படுகிறது. பொதுவாக கடிகாரம் சந்தோஷம் மற்றும் முன்னேற்றத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. வீட்டில் உடைந்த கடிகாரம் இருந்தால், அதை இந்த தீபாவாளி பண்டிகைக்கு முன்பே தூக்க எறிந்துவிடுங்கள்.

உடைந்த நாற்காலி
வீட்டில் உடைந்த டேபிள், நாற்காலி போன்றவை இருந்தால், அதை உடனே அப்புறப்படுத்துங்கள். வீட்டில் இருக்கும் நாற்காலிகள், மேஜைகள் போன்றவை நல்ல நிலையில் இருக்க வேண்டும். மோசான நிலையில் அல்லது உடைந்த நிலையில் இருக்கும் நாற்காலிகள், மேஜைகள் வீட்டில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

உடைந்த பாத்திரங்கள்
வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்கள் உடைந்த நிலையில் இருக்கக்கூடாது. ஒருவேளை உங்கள் வீட்டில் உடைந்த பாத்திரங்கள் இருப்பின், இந்த தீபாவளி வருவதற்கு முன்பே தூக்கி எறிந்துவிடுங்கள். ஏனெனில் உடைந்த பாத்திரங்களை வைத்திருப்பது அபசகுணமாக கருதப்படுகிறது.

உடைந்த சிலைகள்
உங்கள் வீட்டில் உள்ள சிலைகள் ஏதேனும் உடைந்திருப்பின், அதை தூக்கி எறியுங்கள். ஏனெனில் அம்மாதிரியான சிலைகளை வீட்டில் வைத்திருப்பது, துரதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். ஆகவே வீட்டில் உடைந்த தெய்வ சிலைகள் இருந்தால், அதை கோவிலில் வைத்துவிட்டு, வீட்டில் புதிய தெய்வ சிலைகளை வாங்கி வையுங்கள்.

உடைந்த கண்ணாடிகள்
உடைந்த கண்ணாடிகள் வீட்டில் இருப்பது மிகவும் அபசகுணமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டின் ஜன்னல், பல்ப் அல்லது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவை லேசாக உடைந்திருந்தால், அதை தீபாவளி பண்டிகைக்கு முன்பே அப்புறப்படுத்துங்கள். உடைந்த கண்ணாடிகள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும்.

பழுதான மின்சார பொருட்கள்
உங்கள் வீட்டில் உள்ள மின்சார பொருட்கள் ஏதேனும் பழுதடைந்திருந்தால், அதை உடனே பழுது பாருங்கள். இல்லாவிட்டால் அதை தூக்கி எறியுங்கள். பழுதான மின்சார பொருட்களை தீபாவளி அன்று வீட்டில் வைத்திருப்பது, துரதிர்ஷ்டத்தின் அறிகுறி மற்றும் இது வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

காலணிகள்
உங்களிடம் மிகவும் பழைய, கிழிந்த மற்றும் நீண்ட காலமாக நீங்கள் பயன்படுத்தாத காலணிகள் இருந்தால், தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும் போது, அவற்றை தூக்கி எறிய மறந்துவிடாதீர்கள். கிழிந்த காலணிகள் வீட்டில் இருப்பது, வீட்டில் எதிர்மறை ஆற்றலையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும். எனவே இதை உடனே அப்புறப்படுத்துங்கள்.



Click it and Unblock the Notifications