For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி 2019: தன திரயோதசி நாளில் அவதரித்த தன்வந்திரி - விரதமும் பலன்களும்

|

துலாமாதம் எனப்படும் ஐப்பசியில் தங்கள் நோய்களைப் போக்க புனித தீர்த்தக்கட்டங்களுக்குச் சென்று புனித நீராடுவது மரபு. அதோடு அங்குள்ள தெய்வங்களையும் தரிசனம் செய்கிறோம். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்பாக வரும் தேய்பிறை திரயோதசி அன்று தன்வந்தரி பகவானைக் குறித்து விரதமிருந்து முறையாக வழிபட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழவே வட இந்தியாவில் தன்தேரஸ் என்னும் விழா ஏற்பட்டு தன்வந்திரி திரயோதசி விரதம் கடைபிடிக்கப்பட்டது. இந்த ஆண்டு தன்வந்திரி பூஜை செய்ய நல்ல நேரம் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை காலை 6.25 மணி முதல் 8.48 மணிவரை. அன்றைய தினம் திரயோதசி திதி இரவு 7.08 மணிக்கு தொடங்கி அக்டோபர் 26 ஆம் தேதி பிற்பகல் 3.46 மணி வரைக்கும் உள்ளது.

இந்த உலகின் ஆதி மருத்துவக் கடவுளாக ஸ்ரீதன்வந்திரி பகவானைப் போற்றிப் புகழ்கின்றன புராணங்கள். கல்விக்கு சரஸ்வதிதேவி, செல்வத்துக்கு லட்சுமிதேவி, வீரத்துக்கு பார்வதிதேவி, ஞானத்துக்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி, பகை அகல துர்காதேவி, காரிய வெற்றிக்கு ஆஞ்சநேயர் என்று சொல்லப்படுகிற வரிசையில் நோய் தீர்க்கும் கடவுளாக, மாமருத்துவராக நம்மால் வணங்கப்படுபவர் ஸ்ரீதன்வந்திரி பகவான்.

Diwali

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் தேய்பிறை திரயோதசி நாளில் தன்வந்திரி திரயோதசி விரதம் மக்களுக்கான ஆயுட்காலம் பற்றிக் குறிப்பிட்டு நினைவூட்டவே அனுசரிக்கப்படுகிறது. தன்தேரஸ் என்று வடமாநிலங்களில் கோலாகல விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் கதையைப் படித்து அவரை முறைப்படி வழிபட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயற்ற வாழ்வு

நோயற்ற வாழ்வு

இன்றைக்கு வாயில் நுழையாத பெயர்களில் நோய்கள் ஏற்பட்டு வாட்டி வதைக்கின்றன. தன திரயோதசி இறந்தவரை வழிபடும் விரதமல்ல. உயிருடன் இருப்பவர்களது ஆயுளை நீட்டிக்க வழிபாடு செய்யும் விரதம். உடல் நலம் காக்கவும், வாழ்நாளில் நோய் தாக்கம் ஏற்படாமல் இருக்கவும் ஆயுட்காலம் முழுவதும் இப்பூமியில் நீடித்திருக்கவும் விஷ்ணு புராணத்தில் ஒரு விரத வழிபாடு கூறப்பட்டிருக்கிறது.

MOST READ: உலக மனநல தினம் 2019: மனநல பாதிப்புக்குக் காரணமான கிரகங்கள் - பரிகாரங்கள்

தன்வந்திரி அவதாரம்

தன்வந்திரி அவதாரம்

பாற்கடல் கடையப்பட்டபோது வெளியானவர் தன்வந்திரி என்கிறது பாகவதம். பாற்கடலில் இருந்து அவதரிக்கும்போது அமிர்த கலசத்தோடு வந்தவர் தன்வந்திரி பகவான். அதன் பின் அந்த அமிர்தம் ஒரு அகப்பையால் தேவர்கள் அனைவரும் விநியோகம் செய்யப்பட்டது. எனவே தீபாவளியின்போது கரண்டி, கலசம் போன்ற சில பாத்திரங்களை வாங்கி இல்லத்தில் சேர்ப்பது வட இந்தியர்களின் வழக்கம்.

தீபாவளி லேகியம்

தீபாவளி லேகியம்

தீபாவளி தினத்தில் எப்படி எண்ணெயில் லட்சுமி, சீயக்காயில் சரஸ்வதி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கவுரி, மலர்களில் மோகினி, தண்ணீரில் கங்கை, இனிப்பு பலகாரத்தில் அமிர்தம், புத்தாடையில் மகாவிஷ்ணு ஆகியோர் உறைவதாகச் சொல்கிறோமோ, அதுபோல் தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து சாப்பிடும் போது ஸ்ரீதன்வந்திரி பகவானை மனபூர்வமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

தீராத நோய்கள் தீரும்

தீராத நோய்கள் தீரும்

எந்த ஒரு தீராத நோய்க்கும், உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு, அவரது பிரசாதத்தைப் பெற்று உண்டால், நிவாரணம் பெறலாம் என்பது நம்பிக்கை. தன்வந்திரியின் மந்திரத்தை ஜபம் செய்வதால் தைரியம் ஏற்பட்டு பாபம், வியாதி, விஷம், கிரஹ தோஷங்கள் இவை அனைத்தும் நீங்குகின்றன. இந்த ஆண்டு தன்வந்திரி பூஜை செய்ய நல்ல நேரம் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை காலை 6.25 மணி முதல் 8.48 மணிவரை. அன்றைய தினம் திரயோதசி திதி இரவு 7.08 மணிக்கு தொடங்கி அக்டோபர் 26 ஆம் தேதி பிற்பகல் 3.46 மணி வரைக்கும் உள்ளது.

தன திரயோதசி விரதம்

தன திரயோதசி விரதம்

தன திரயோதசி நாளில் அதிகாலையில் எழுந்து மஞ்சள்தூள், துளசி இட்ட நீரில் குளித்துவிட்டு அன்று முழுவதும் விரதம் இருந்து தன்வந்திரி வரலாறு அவரை பற்றிய துதிகளை படிக்க வேண்டும். மாலைப் பொழுது சாயும் முன் நீர்நிலை தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தன்வந்திரியையும் எம தர்மராஜனையும் வழிபடுவார்கள். விளைநிலத்தில் சிறிது உழுத பிறகு மண் எடுத்துப் பசும்பாலில் கலந்து இலவம் பஞ்சு மரக் குச்சியைக் கொண்டு மறுபடியும் கலக்கித் தங்கள் உடல்மேல் தெளித்துக்கொள்வார்கள். இந்த விரத நாளன்று வஸ்திர தானம் செய்தாலும் எமனை குறித்து துதிக்கப்படுகிற எமாஷ்டக துதி படிப்பதாலும் மரணங்கள் துர்மரணங்களில் இருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளை பெற முடியும் என நம்பப்படுகிறது.

MOST READ: பிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா?... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...

தன்வந்திரி பகவான்

தன்வந்திரி பகவான்

தன திரயோதசி தினத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் விக்கிரகத்துக்கு அன்றைய தினத்தில் விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். தீபாவளி தினத்தன்று தன்வந்திரி பகவானை தரிசித்து அவரது ஆசிகளைப் பெற வேண்டும். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீதன்வந்திரி பகவான் சுமார் ஏழடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். தீபாவளி தினத்தில் நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம் இவை கலந்து லேகியமாக தயாரித்து தன்வந்திரி பகவானுக்கு நிவேதிக்கப்பட்ட விசேஷ மருந்து, தீபாவளியன்று ஆலயத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாகத் தரப்படுகிறது. இதை நீர், தேன், பாலில் கலந்து உட்கொண்டால் சரீரம் பலம் பெறும். பித்தம், வாதம், சிலேத்துமம் போன்ற முத்தோஷங்களைப் போக்கும் கண்கண்ட மருந்தாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: diwali
English summary

Dhanvantari Trayodashi 2019 Date During Diwali

2019 Dhanvantari Trayodashi,Dhanvantari Trayodashi is observed two days before Diwali Puja. As name suggests it is observed during Trayodashi Tithi of Krishna Paksha. The day is celebrated as the birth anniversary of Lord Dhanvantari, the teacher and the father of Ayurveda.
Story first published: Saturday, October 19, 2019, 12:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more