தந்தேராஸ் நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும் தெரியுமா?

தந்தேராஸ் நாளில் என்ன தான் ஒருவர் தங்களின் தேவை மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப பொருட்களை வாங்கினாலும், தங்களின் ராசிக்கேற்ப பொருட்களை வாங்கினால் இன்னும் நல்லது.

தனத்திரயோதசி நாள் தான் தந்தேராஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த தந்தேராஸ் நாளானது செல்வத்தின் பண்டிகையாக கூறப்படுகிறது. இந்நாளில் மாலை வேளையில் லட்சுமி தேவியின் ஆசியைப் பெற லட்சுமி பூஜையை செய்வது வழக்கம். மேலும் இந்நாளில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள், சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் போன்றவற்றை வாங்குவார்கள். அதோடு மாலை வேளையில் மக்கள் தங்கள் வீட்டு வாசலில் எம தீபத்தை ஏற்றுவார்கள். இந்த ஆண்டு தந்தேராஸ் தினமானது 2022 அக்டோபர் 23 ஆம் தேதி வருகிறது.

Dhanteras 2022: Things To Buy As Per Your Zodiac Sign In Tamil

இந்த தந்தேராஸ் நாளில் என்ன தான் ஒருவர் தங்களின் தேவை மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப பொருட்களை வாங்கினாலும், தங்களின் ராசிக்கேற்ப பொருட்களை வாங்கினால் இன்னும் நல்லது. இப்போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருட்களை வாங்குவது நல்லது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள், தங்கம், வெள்ளி மற்றும் கருவிகளை வாங்குவது நல்லது. மேலும் சொத்துக்கள் வாங்குவதும் மிகவும் நல்லது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், இந்த ராசிக்காரர்கள் வாசனை திரவியங்கள், தங்கம், வெள்ளி மற்றும் வைரம் போன்ற அழகு தொடர்பான பொருட்களை வாங்குவது நல்லது. இது தவிர வாகனம் மற்றும் சொத்துக்களையும் வாங்கலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால், இந்த ராசிக்காரர்கள் தங்கம் வாங்குவதும், அதில் முதலீடு செய்வதும் நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் இசைக்கருவிகள் மற்றும் ஆடைகளுடன் பித்தளை பொருட்களையும் வாங்கி வியாபாரம் செய்யலாம். இருப்பினும், உங்களின் பட்ஜெட் குறைவாக இருந்தால், பூஜைப் பொருட்களை வாங்கலாம்.

கடகம்

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். வியாபாரம் அல்லது சேவையில் இருப்பவர்கள், வெள்ளி மற்றும் தங்கம் வாங்குவது நல்லது. இது தவிர, இந்த ராசிக்காரர்கள் பொம்மைகள் வாங்கலாம் அல்லது முதலீடு செய்யலாம். இது நிலையான வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் வழிவகுக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். எனவே இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தந்தேராஸ் நாளில் தங்கத்தில் முதலீடு செய்யலாம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கலாம். இது இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

கன்னி

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தங்கம், வெள்ளி அல்லது பிற ஆபரணங்களை வாங்குவது நல்லது. மேலும் தந்தேராஸ் நாளில் தங்கத்தில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். கூடுதலாக, இவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் நிலத்தை வாங்கலாம்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் அழகு தொடர்பான பொருட்களை வாங்குவது நல்லது. அதாவது, இவர்கள் பெர்ஃயூம், மேக்கப் பொருட்கள், நகைகள் போன்றவற்றை வாங்கலாம். இது தவிர இவர்கள் வெள்ளியை வாங்குவதும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள். நிலத்தில் முதலீடு செய்வது நல்ல பலனைத் தரும். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதும் நல்லது.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் அதிபதி குரு. எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் மற்றும் நகைகளை வாங்குவது நல்லதாக கருதப்படுகிறது. இது தவிர இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் நிலத்தை வாங்குவதும் நல்லது.

மகரம்

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி. எனவே மகர ராசிக்காரர்கள் வெள்ளி மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கலாம். இது தவிர, இரும்பு, ஸ்டீல், எண்ணெய், கனிமங்கள் மற்றும் கருவிகளையும் வாங்கலாம்.

கும்பம்

கும்பம்

நீங்கள் கும்ப ராசியைச் சேர்ந்தவராக இருந்தால், தந்தேராஸ் நாளில் இரும்பு, ஸ்டீல், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது. கூடுதலாக, இந்நாளில் வங்கியில் நிலையான வைப்புத்தொகைக்கு செல்லலாம்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் தந்தேராஸ் நாளில் எந்த வகையான முதலீடுகளை செய்தாலும் சாதகமான பலன் கிடைக்கும். இது தவிர நகைகளை வாங்குவதும் நல்லது.

தந்தேராஸ் நாளில் உங்கள் தேவை, சௌகரியம் மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப எந்த பொருட்களையும் வாங்கலாம். இருப்பினும், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாங்குவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, October 13, 2022, 14:56 [IST]
Desktop Bottom Promotion