For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகையே கொலைகளால் நடுங்கவைத்த ஆபத்தான கொலைகார ஜோடிகள்... பலவீனமானவங்க படிக்காதீங்க...!

|

உலகம் தொடங்கிய காலம் முதலே நல்லவர்கள் இருப்பது போலவே கெட்டவர்களும் இருந்துதான் வருகின்றனர். சிலர் கெட்டவர்கள் என்பதையும் தாண்டி கொடூரமானவர்களாக மாறுகிறார்கள். கொடூரமானவர்களாக மாறும்போது அவர்கள் செய்யும் முதல் செயல் பிற உயிர்களை துன்புறுத்துவதுதான்.

வரலாற்றில் இப்படிப்பட்ட பல கொடூரர்கள் உள்ளனர் குறிப்பாக தம்பதிகளாக இணைந்து கொடூரமாக கொலை செய்து உலகையே நடுங்கச்செய்த சிலர் உள்ளனர். இல்லற வாழ்க்கையில் இணைந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டிய தம்பதிகள் ஏன் கொடூர கொலைகாரர்களாக மாறினார்கள் என்பது நம்முள் பல கேள்விகளை எழுப்பலாம். இந்த கேள்விகளுக்கான பதில்கள் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த பதிவில் உலகையே தங்கள் கொடூர செயல்களால் அதிரவைத்த தம்பதிகளை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்லா ஹோமோல்கா மற்றும் பால் பெர்னார்டோ

கார்லா ஹோமோல்கா மற்றும் பால் பெர்னார்டோ

கனடாவின் மிகவும் மோசமான இரட்டை கொலையாளிகள் இவர்கள். இந்த ஜோடி கார்லாவின் 15 வயது சகோதரி டம்மியை போதை மருந்து கொடுத்து, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றது. மேலும் இரண்டு டீனேஜ் சிறுமிகளையும் கடத்தி கொலை செய்தனர். இதில் மேலும் அதிர்ச்சியைத் தரும் விஷயம் என்னவெனில் பால் சிறையில் இருந்தாலும், கார்லா சுதந்திரமாக புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ரே மற்றும் பேயி கோப்லாண்ட்

ரே மற்றும் பேயி கோப்லாண்ட்

76 வயதான ரே மற்றும் 69 வயதான பேயி கோப்லாண்ட் ஆகியோர் 5 முதல் 12 பேர் கொலை செய்யப்பட்டதற்காக 1991 ல் குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர். 80 களில், தம்பதியினர் அருகிலுள்ள கால்நடை சந்தையில் இருந்து கால்நடைகளை வாங்குவதற்காக கடைக்காரர்களுக்கு போலி காசோலைகளை வழங்குவார்கள். கால்நடைகளை டெலிவிரி செய்ய வரும்போது, அவர்களைக் கொன்று உடல்களை புதைத்து விடுவார்கள்.

சார்லஸ் ஸ்டார்க்வெதர் மற்றும் கரில் ஆன் ஃபுகேட்

சார்லஸ் ஸ்டார்க்வெதர் மற்றும் கரில் ஆன் ஃபுகேட்

1950 களில், 19 வயதான சார்லஸ் ஸ்டார்க்வெதர் மற்றும் 14 வயதான கரில் ஆன் ஃபுகேட் ஆகியோர் மனித வேட்டையில் இறங்கினர். வெறும் 2 மாதங்களில் 11 பேரைக் கொன்றனர். அவர்கள் இறுதியில் பிடிபட்டனர், சார்லஸ் தூக்கிலிடப்பட்டார். கரில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு Natural Born Killers போன்று பல ஹாலிவுட் படங்கள் வெளிவந்தன.

MOST READ: தலைசுற்ற வைக்கும் பண்டைய உலகின் மோசமான பாலியல் வரலாற்று சம்பவங்கள்... அதிர்ச்சியாகாம படிங்க...!

 க்வென்டோலின் கிரஹாம் மற்றும் கேத்தரின் மே உட்

க்வென்டோலின் கிரஹாம் மற்றும் கேத்தரின் மே உட்

இந்த லெஸ்பியன் தம்பதியினர் செவிலியர்களாக பணிபுரிந்தனர், மேலும் 1987 ஆம் ஆண்டில் ஐந்து வயதான பெண்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் ஆல்பைன் மேனர் நர்சிங் ஹோமில் தங்கள் குற்றங்களைச் செய்தார்கள், மேலும் அவர்கள் MURDER வார்த்தையின் எழுத்துக்களை தங்கள் பெயரின் முதல் எழுத்தாக கொண்ட நோயாளிகளை கொலை செய்தனர். அவர்கள் பிடிபட்ட நேரத்தில், அவர்கள் 'MURDE' வரை 5 பேரை கொலை செய்திருந்தனர்.

பிரெட் அண்ட் ரோஸ் வெஸ்ட்

பிரெட் அண்ட் ரோஸ் வெஸ்ட்

இந்த ஆங்கில தம்பதியினர் சந்தேகமே வராத விதத்தில் இளம் பெண்களுக்கு லிஃப்ட் வழங்குவர், பின்னர் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறைபிடிப்பார்கள், அங்கே அவர்களைக் கொல்வதற்கு முன்பு அவர்களை பல நாட்கள் கொடூரமாக சித்திரவதை செய்வார்கள். 1967 மற்றும் 1987 க்கு இடையில், அவர்கள் குறைந்தது 12 கொலைகளைச் செய்தனர், மேலும் அவர்களது வீடு 'ஹவுஸ் ஆஃப் ஹாரர்ஸ்(House of Horrors)' என்று அழைக்கப்பட்டது.

இயன் பிராடி மற்றும் மைரா ஹிண்ட்லி

இயன் பிராடி மற்றும் மைரா ஹிண்ட்லி

ஜூலை 1963 மற்றும் அக்டோபர் 1965 க்கு இடையில், மான்செஸ்டர் பகுதியில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளை இயன் பிராடி மற்றும் மைரா ஹிண்ட்லி கொடூரமாக சித்திரவதை செய்து, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தனர். கொலை செய்யப்பட்டவர்களை அவர்கள் தாக்கும் முன் காரில் கவர்ந்திழுப்பார்கள் என்றும் இறுதியில் அவர்களின் உடல்களை அடக்கம் செய்வார்கள் என்றும் வாக்குமூலத்தில் கூறினார்கள். சோதனையில் அவர்கள் இருவரும் மனநோயாளிகள் என கண்டறியப்பட்டது.

MOST READ: இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜயோகத்துடன் பிறந்தவர்களாம்... உங்க நட்சத்திரம் என்ன?

ரேமண்ட் பெர்னாண்டஸ் மற்றும் மார்தா பெக்

ரேமண்ட் பெர்னாண்டஸ் மற்றும் மார்தா பெக்

1947 மற்றும் 1949 க்கு இடையில், ரேமண்ட் பெர்னாண்டஸ் மற்றும் மார்தா பெக் ஆகியோர் குறைந்தது 20 பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஒரு கான் ஆர்ட்டிஸ்ட் தம்பதியினர், தனிமையான பெண்களை குறிவைத்து, அவர்களைக் கொன்று, உடல்களை அவர்கள் வீட்டின் அடித்தளத்தில் புதைத்தனர்.

கரோல் எம். பண்டி மற்றும் டக் கிளார்க்

கரோல் எம். பண்டி மற்றும் டக் கிளார்க்

சன்செட் ஸ்ட்ரிப் கில்லர்ஸ்' என்றும் அழைக்கப்படும் இந்த ஜோடி விபச்சாரிகளையும் வீட்டை விட்டு ஓடிவந்தவர்களையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். பின்னர் அவர்கள் அவர்களைக் கொன்றுவிடுவார்கள், மேலும் டக் சில சமயங்களில் இறந்த உடல்களுடன் உடலுறவு கொள்வார். அவர்கள் உடல் உறுப்புகளில் சிலவற்றை தங்களின் வெற்றிக் கோப்பைகளாக வைத்திருந்தனர்.

சார்லின் மற்றும் ஜெரால்ட் கேலெகோ

சார்லின் மற்றும் ஜெரால்ட் கேலெகோ

1978 மற்றும் 1980 க்கு இடையில், சார்லின் மற்றும் ஜெரால்ட் கேலெகோ பல டீனேஜ் சிறுமிகளைக் கடத்திச் சென்று அடைத்து வைத்தனர். ஜெரால்ட் அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவார், பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவார்கள். ஒரு கடத்தலின் போது அவர்களைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் சாட்சி கூறியதன் மூலம் அவர்கள் பிடிபட்டனர்.

MOST READ: பெண்களை பாலியல்ரீதியாக அதிகம் தூண்டும் அவர்களின் இன்ப புள்ளிகள்...ஆண்கள் அவசியம் தெரிஞ்சிக்கோங்க...!

டேவிட் மற்றும் கேத்தரின் பிர்னி

டேவிட் மற்றும் கேத்தரின் பிர்னி

இந்த ஆஸ்திரேலிய கொலையாளி தம்பதியினர் டீனேஜ் சிறுமிகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். 1986 ஆம் ஆண்டில், அவர்கள் 4 பெண்களைக் கொன்றனர், மேலும் 5 பேரைக் கொல்ல முயன்றனர். பாதிக்கப்பட்ட 5 பேர் தப்பித்து காவல்துறையினரிடம் சென்றனர், அதன் பிறகு அவர்கள் பிடிபட்டனர். இந்த கொலை மூர்ஹவுஸ் கொலைகள் என்று அழைக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deadliest Serial Killer Couples In The History

Read to know about the history's most deadliest serial killer couples.
Story first published: Monday, May 17, 2021, 18:21 [IST]