For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசக் குடும்பங்களின் மறைக்கப்பட்ட இருண்ட பக்கங்கள்...இப்படியெல்லாம இருந்தாங்க...!

|

இந்திய அரச குடும்பங்களுக்கென தனித்துவம் வாய்ந்த பாரம்பரியமும், சிறப்புகளும் இருக்கிறது. செல்வாக்கு வாய்ந்த அரச குடும்பங்களின் ஆடம்பரமும், செழுமையும் இன்றும் கூட தொடர்கிறது. அவர்கள் அரச பதவிகளை இழந்தாலும் அவர்களில் பலரும் தங்களின் இராஜ வாழ்க்கையை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

Dark Secrets Of Indian Royal Families

யாருக்குத்தான் இராஜ வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காது. அவர்களின் இராஜபோக வாழ்க்கையும், ஆடம்பரமும் அனைவரையும் அவர்கள் மீது பொறாமைக் கொள்ளச் செய்யும். ஆனால் அவர்களின் ஆடம்பரங்களுக்கு பின்னால் சில இருண்ட பக்கங்களும் இருக்கிறது. இந்திய அரசகுடும்பங்களில் சிலருக்கு பின்னால் இருந்த இருண்ட ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளவரசர் மன்வேந்திர சிங் கோஹில்

இளவரசர் மன்வேந்திர சிங் கோஹில்

தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஒரே இளவரசர் இவர்தான். துரதிர்ஷ்டவசமாக இவர் பின்னாளில் அவரின் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டார். தங்களின் குலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜுனாகரின் நவாப்

ஜுனாகரின் நவாப்

இவர் கிட்டதட்ட 800 நாய்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு நாயிற்கும் ஒரு தனிப்பட்ட உதவியாளரை நியமித்து இருந்தார். இவருக்கு பிடித்த இரண்டு நாய்கள் ஒன்றாக சேர்ந்த போது அதனை கொண்டாட அந்த காலக்கட்டத்திலேயே இலட்சங்களில் செலவு செய்தார்.

 பாட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர்

பாட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர்

செக்ஸில் அதிக ஆர்வம் உடைய மன்னராக இருந்த இவருக்கு 88 குழந்தைகளும், பல மனைவிகளும் இருந்தனர். வருடத்திற்கு ஒருமுறை இவர் அவர்கள் முன் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்வார், தான் இன்னும் ஆரோக்கியமாக இருப்பதை அவர்களுக்கு உணர்த்த அவர் இவ்வாறு செய்து வந்தார். மேலும் இவர் அந்தப்புரத்தில் 350 பெண்களை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

MOST READ: காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா?

ஹைதராபாத்தின் நிஜாம்

ஹைதராபாத்தின் நிஜாம்

இவரின் பாதுகாப்பற்ற பய உணர்வு ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரிய வந்தது. தனது செல்வத்தை அரசாங்கத்திடம் இழந்து விடுவோமோ என்று பயந்த இவர் தனது செல்வங்கள் அனைத்தையும் லாரிகளில் ஒழித்து வைத்தார். பின்னாளில் அவை கரையான்கள் மற்றும் அத்துப்பூச்சிகளால் பாதிக்கப்பட்டு யாருக்கும் பயன்படாமல் போனது.

ராணி அலமேலாமாவின் சாபம்

ராணி அலமேலாமாவின் சாபம்

வாடியார் வம்சம் மைசூர் சாம்ராஜ்யத்தை அதன் மன்னனைக் கொன்றதன் மூலம் கைப்பற்றியது. ஆனால் நடைபெற்ற போரில் ராணி தப்பித்தார் பின்னர் கைப்பற்றப்பட்டார். பிடிக்கப்பட்ட அவர் எதிர்காலத்தில் அந்த வம்சத்திற்கு வாரிசு இல்லாமல் போகட்டும் என்ற சாபத்தை வழங்கிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் அந்த வம்சத்தினை சேர்ந்தவர்கள் அவரின் சிலையை நிறுவி அவரை வழிபடத் தொடங்கினர். இன்றுவரை இந்த வழிமுறை இருந்து வருகிறது.

 பிகானேரின் ராயல் குடும்பம்

பிகானேரின் ராயல் குடும்பம்

இளவரசி ராஜ்யஸ்ரீ குமாரி அரச குடும்பத்தின் தற்போதைய வாரிசு. அவர் அர்ஜுனா விருது வென்றவர் மற்றும் முன்னாள் துப்பாக்கி சுடும் வீரர். ராஜஸ்தானில் பல தொண்டு அறக்கட்டளைகளுக்கு தலைமை தாங்கும் இவருக்கு பாரம்பரிய ஹோட்டல் மற்றும் செழிப்பான அரண்மனையான லால்கர் மஹால் உள்ளது.

MOST READ: பெண் வேடமிட்டு ஆணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்...!

அசோகா மன்னர்

அசோகா மன்னர்

இவர் இவருடைய கொடூர குணத்திற்காக புகழ் பெற்றவர். தனது 100 சகோதரர்களில் 99 சகோதரர்களை இராஜ்ஜியத்திற்காக கொன்ற வரலாற்றின் இரண்டாவது மன்னர் இவர் ஆவார். மீதமிருந்த ஒரு சகோதரனை இவர் துணை மன்னராக்கினார்.

புலி வேட்டை

புலி வேட்டை

இராஜகுடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு புலி வேட்டை என்பது மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்காக இருந்தது. நம் நாட்டின் புலிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு இந்திய அரசகுடும்பங்கள் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. திரிபுரா அரச கோட்டையில், 30 புலிகளின் தோல்களைப் பயன்படுத்தி செதுக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற கம்பளம் உள்ளது. அது இன்றும் இருக்கிறது.

முகலாய அரசகுடும்பம்

முகலாய அரசகுடும்பம்

இந்திய முகலாய குடும்பங்களில் இருந்த இளவரசிகள் ஒருநாளைக்கு பலமுறை தங்களின் உடைகளை மாற்றிக்கொள்வார்கள். ஒருமுறை அணிந்த ஆடையை மீண்டும் அணியமாட்டார்கள், அவர்கள் அந்த ஆடையை தங்களின் ஊழியர்களுக்கு வழங்கி வந்தார்கள்.

மிகப்பெரிய வைரம்

மிகப்பெரிய வைரம்

1940 களில் உலகின் பணக்கார இந்தியராக அறிவிக்கப்பட்ட ஹைதராபாத் மாநிலத்தின் கடைசி நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகான் சித்திக் ஆவார். அந்த நேரத்தில் அவர் 2 பில்லியன் டாலர்களை வைத்திருந்த ஒரு கோடீஸ்வரராக இருந்தார் (அந்த காலங்களில் அமெரிக்க பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 2%). ஜேக்கப் வைரம் என்னும் உலகின் மிகப்பெரிய வைரத்தை வாங்கினார். இதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் ஆகும். இதனை அவர் பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினார்.

MOST READ: இந்தியாவின் தேசிய கீதத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களும், சர்ச்சைகளும் என்னென்ன தெரியுமா?

மகாராஜா சவாய் மாதோ சிங் II

மகாராஜா சவாய் மாதோ சிங் II

ஜெய்ப்பூரின் கைவினைஞருக்கு இரண்டு பெரிய ஸ்டெர்லிங் வெள்ளிப் பாத்திரங்களை உருவாக்கும்படி அவர் உத்தரவிட்டார், இதனால் அவர் தன்னுடைய இங்கிலாந்து பயணத்தில் கங்கை நீருடன் பயணிக்க முடியும் என்று கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dark Secrets Of Indian Royal Families

Here are some dark secrets that Indian Royal Families didn't want the commoners to know.
Story first published: Tuesday, January 21, 2020, 12:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more