For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த காலத்தில் கரு உருவாகாமல் தடுக்க பெண்கள் யோனிக்குள் வைக்கப்பட்ட ஆபத்தான பொருட்கள் என்ன தெரியுமா?

|

பிறப்பு கட்டுப்பாடு என்பது தற்போதைய காலத்தில் மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே உடலுறவின் போதும், உடலுறவிற்கு பிறகும் குழந்தை உருவாகுவதை தடுக்க பல்வேறு வழிகள் உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் கருவுறாமல் இருப்பதும், பாதுகாப்பாக உடலுறவு கொள்வதும் அவ்வளவு சுலபமானதாக இல்லை.

கடந்த காலத்தில் பிறப்பு கட்டுப்பாடு என்பது முழுக்க முழுகக பெண்களின் கையில்தான் இருந்தது. வரலாற்றில் பல்வேறு பிறப்பு கட்டுப்பாடுகள் இருந்தது, ஆனால் அவை அனைத்தும் வலிமிகுந்ததாக இருந்தது. இந்த பதிவில் பண்டைய காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மோசமான பிறப்பு கட்டுப்பாட்டு முறைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதலை சாணம் மற்றும் தேன்

முதலை சாணம் மற்றும் தேன்

பண்டைய எகிப்தியர்கள் கருச்சிதைவு கடவுளுடன் தொடர்புடைய முதலைகள் மற்றும் அவற்றின் சாணம் விந்தணுக்களைக் கொல்லக்கூடும் என்று நம்பினர். மூலிகைகள் மற்றும் பருத்தியுடன் தேன் கலக்கப்பட்டு விந்தணுக்களின் நுழைவைத் தடுக்க ஒரு தடையை உருவாக்க பயன்படுத்தப்பட்டது.

மரநாயின் விதைப்பை

மரநாயின் விதைப்பை

இடைப்பட்ட காலங்களில் மரநாயின் விதைப்பதைகளை நகைகளாக அணிவது, கழுத்தில் மெடல் போல அணிவது கருத்தரிப்பை தடுக்கும் என்று மக்கள் நம்பினார்கள். இதற்கு பின்னால் மக்களின் நம்பிக்கை மட்டும்தான் உள்ளதே தவிர லாஜிக் எதுவும் இல்லை. ஆனால் இது இந்த நெக்லசின் பயன்பாட்டை இரட்டிப்பாக்கியது.

வெங்காய சாறு

வெங்காய சாறு

1400 களில், பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள பெண்கள் இந்த வாசனையான கலவையை வாய்வழி கருத்தடை மருந்தாக உட்கொள்வார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் சுவாசத்தின் துர்நாற்றம்தான் பிறப்புக் கட்டுப்பாடாக செயல்பட்டிருக்கலாம். அந்த துர்நாற்றத்துடன் உறவு கொள்வது என்பதே கடினமான ஒன்றுதான்.

MOST READ: யாராலும் கண்டுபிடிக்க முடியாத உலகின் மர்ம மனிதர்கள்...நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் உலக ரகசியங்கள்..

ப்ளாக்ஸ்மித் நீர் மற்றும் ஈயம்

ப்ளாக்ஸ்மித் நீர் மற்றும் ஈயம்

ஆசியாவிலும் கிரேக்கத்திலும் உள்ள பெண்கள் இந்த கலவையை ஒருவித குழந்தை எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தினார்கள். சிலர் தார் மற்றும் நிலக்கரியை கருத்தடுப்பு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். ஈயத்தை கருத்தடுப்பு பொருளாக பயன்படுத்துவது நிரந்தர குழந்தையின்மைக்கு வழிவகுக்கும். மேலும் இது நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு முறையாகும். சிலசமயம் இதனால் மரணம் கூட நிகழலாம்.

உலோக விரல்கள்

உலோக விரல்கள்

ஐரோப்பாவில் 1800 களில், பெண்கள் தங்கள் யோனிகளில் உலோக விரல்களைச் சொருகுவார்கள். இது ஒரு வகையான இடைத்திரையாக செயல்பட்டு கரு உருவாவதை தடுத்தது.

பன்றி குடல்

பன்றி குடல்

1600 மற்றும் 1700 களில் எந்த ரப்பர்களும் இல்லாமல், ஆண்கள் தெரிந்தோ தெரியாமலோ இதனை ஆணுறைகளாக பயன்படுத்தினர். அந்த காலக்கட்டத்தில் இவை விலை உயர்ந்தவையாக கருதப்பட்டது, பெரும்பாலும் கழுவப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டன.

MOST READ: தலைசுற்ற வைக்கும் பண்டைய இந்தியாவின் மோசமான செக்ஸ் விளையாட்டு... ஷாக் ஆகாம படிங்க...!

சோடா

சோடா

சோடாவால் கழுவுதல் கூட கருத்தடையாக பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?சோடாவின் பிசுபிசுப்புத் தன்மை பெண்களின் பிறப்புறுப்பிற்குள் இருக்கும் அனைத்து விந்தணுக்களையும் வெளியேற்றும் தன்மை கொண்டது. உடலுறவு முடிந்த பிறகு பெண்களின் பிறப்புறுப்பிற்குள் சோடா ஊற்றப்பட்டு வெளியேற்றப்படும்.

எலுமிச்சை

எலுமிச்சை

இந்த சிட்ரஸ் சாற்றை தேய்த்தல் முட்டையின் கருத்தரிப்பைத் தவிர்க்க உதவியது என்று அந்தக் கால பெண்கள் நம்பினர். மேலும் உடலுறவுக்கு பிறகு ஒரு சிறிய துண்டு எலுமிச்சை பழத்தை பெண்ணின் யோனிக்குள் வைப்பார்கள். இதிலிருக்கும் அமிலத்துவம் அனைத்து விந்தணுக்களையும் அழிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் இது முழுமையான பலனை அளிக்காததால் நாளடைவில் இந்த முறை நிராகரிக்கப்பட்டது.

மேலும் கீழும் குதிப்பது

மேலும் கீழும் குதிப்பது

ஒரு பொருளை வெளியே எடுக்க அதனை தொடர்ச்சியாக ஆட்டுவது என்பது காலம் காலமாக இருக்கும் முறையாகும். இதே முறையை பயன்படுத்தி யோனிக்குள் இருக்கும் விந்தணுக்களையும் வெளியேற்றலாம். புகழ்பெற்ற கிரேக்க சொரனஸ், ரிதம் முறையை உருவாக்கியதற்காக புகழப்படுகிறார். ஒரு பெண்ணின் சுழற்சியைச் சுற்றி உடலுறவைத் திட்டமிடுவது, உடலுறவுக்கு பிறகு குதிப்பதன் மூலம் யோனியில் இருக்கும்

விந்தணுக்களை வெளியேற்ற பரிந்துரைக்கப்படுகிறது. தும்மலும் அதே விளைவை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் ஆபாசப்படங்களுக்கு அடிமையாக இருக்கிறார் என்று அர்த்தம்... உஷாரா இருங்க

மிட்டாய் ரேப்பர்கள்

மிட்டாய் ரேப்பர்கள்

ஆஸ்திரேலியாவின் பதின்வயதினர் சாக்லேட் பேப்பர்களை கழற்றி ஆணுறுப்பை சுற்றி தற்காலிக ஆணுறைகளாக பயன்படுத்தினர். இதில் கொடுமை என்னவெனில் இதனை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினர். இது ஆபத்தான ஒரு முறையாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dangerous Birth Control Methods

Find out the shocking things that women used to have to use as birth control
Story first published: Thursday, May 7, 2020, 17:42 [IST]