Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
இன்னைக்கு வெட்டிச்செலவு வரப்போகும் ராசிக்காரர் யார்? தெரிஞ்சிக்கங்க... ஜாக்கிரதையா இருங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
பொது நல காரியங்களில் ஆடுபடுகிறவர்கள் கொஞ்சமட அமைதி காப்பது நல்லது. புதிதாக ஏதேனும் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் பெரியோர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டுப் பெறுங்கள். வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, கவனமாக இருக்க வேண்டும். செய்யும் வேலைகளில் கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய பேச்சுத் திறமையினால் லாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்துக்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களுடைய ஆதரவினால் சுபிட்சங்கள் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத் திறமையினால் அனுகூலங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்
குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கவலையினால் மனதில் சோர்வு உண்டாகும். நண்பர்களுடன் வீண் விதாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கால்நடைகளிடம் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த இழுபறி நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கடகம்
பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். நினைவாற்றலில் மந்தத் தன்மை உண்டாகும் வாய்ப்பு உண்டாகும்.உடல் சோர்வின் காரணமாக பணியை கொஞ்சம் கால தாமதமாக செய்து முடிப்பீர்கள். சுப செய்திகளின் மூலமாக சுப விரயங்கள் ஏற்படும். தாய் மற்றும் தந்தை பற்றிய கவலைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

சிம்மம்
சமூக சேவை புரிகின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பயிணில் தேவையில்லாத அலைச்சல்கள் மற்றும் விரயச் செலவுகள் ஏற்படும். திருமண வரன்கள் உங்களுக்கு சாதகமானதாக வந்து அமையும். வாகன வசதிகள் மேம்படும். உங்களுடைய திறமைகளின் மூலமாக பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிாஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி அதிகரிக்கும். வேளாண் தொழிலில் எதிர்பார்த்ததை விடவும் அதிக லாபம் உண்டாகும். உங்களுடைய சிந்தனையின் போக்கினில் மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதர சகோரர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏதும் செய்யாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்
செய்கின்ற தொழிலில் புதிய புதிய வாய்ப்புகள் உண்டாகும். மகான்களுடைய தரிசனங்கள் மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தந்தையின் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்குள். எண்ணிய காரியங்களை முடிப்பதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பிறருடைய பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
பொதுகு் கூட்டங்களில் பேசும்போது உங்களுக்கு அமோகமான ஆதரவுகள் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளை தொழிலில் பரிசோதனை செய்து பார்ப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மகரம்
தொழிலில் உங்களுடைய திறமையினால் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவாகாரங்களில் சிறு சிறு தடைகள் மற்றும் தாமதங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடம் சற்று கவனத்துடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்
இசை சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மக்கள் தொடர்பு துறையில், உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களுடைய ஆதரவினால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தந்தையின் உடல் நலத்தில் கொஞசம் கவனம் செலுத்துங்கள். புதிய இலக்கினை நிர்ணயித்து பயணம் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
புதிய தொழில் முதலீடுகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு ஏற்படும். அரசாங்கப் பணிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையுமு். இறை வழிபாட்டினில் மனம் ஈடுபடும். உறவுகளிடம் அமைதிப் போக்கிளைக் கையாளுங்கள். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications