For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொன்னும் புதனும் சேர்ந்து அதிஷ்டம் கொட்டப்போற ராசி எதுனு தெரியுமா? இதுதான்...

By Mahibala
|
21-08-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள்.

horoscope

இன்றைக்கு வரலட்சுமி நோன்பு. அதனால் அதிர்ஷ்டம் யாருக்கு. நஷ்டத்தில் யார் இருப்பார் என்பது தான் மிக முக்கியம். அப்படி எந்தெந்த ராசிக்கு செல்வத்தை அள்ளிக் கொடுப்பார் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்களிடம் நெருக்கமாக இருந்தவர்களால் பல இன்னல்கள் அடைந்திருப்பீர்கள். அதன்மூலம் இருந்து வந்த துன்பங்கள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். உடல் நிலையைப் பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் பல புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். அரசு அதிகாரிகளுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

MOST READ: புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா?

ரிஷபம்

ரிஷபம்

மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது, அதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எதையும் செய்ய வேண்டும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட பணிகளில் கொஞ்சம் முன்னேற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு அலைச்சல்கள் இருக்கும். ஆனாலும் உங்களுடைய பணிகளுக்கான ஆதரவுகள் பெருகும். தொழில் சம்பந்தமாக புதிய முதலீடுக்ள போடுவதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பணி சம்பந்தப்பட்ட விவகாரங்களைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

இதுவரையில் நிலுவையில் இருந்து வந்த வழக்குகளில் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். புதிய வீடு கட்டுவதற்கோ அல்லது மனைகள் வாங்குவதற்கான முயற்சிகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளரின் அறிமுகத்தினால் லாபங்கள் அதிகரிக்கும். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உங்களுக்கு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் உங்கள் கைக்குக் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஆகும். பெற்றோர்களுடைய விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செய்யும் பணிகளை விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

MOST READ: தாடி வளர்க்கணுமா? எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்?... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...

கன்னி

கன்னி

நீண்ட நாட்களாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்த செயல்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்களும் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வீர்கள். நீங்கள் விரும்பிய இட மாற்றங்களால் பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

தொழிலில் தொடர்நது இருந்து வருகின்ற சில இன்னல்களைக் கடந்து வெற்றியை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள். பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அலைச்சல்கள் இருந்தாலும் இறுதியில் நல்ல லாபமே கிடைக்கும். மனதுக்குள் வித்தியாசமான எண்ணங்கள் வந்து தோன்றும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைந்தாலும் நிறைய பாராட்டுக்கள் வெளியிடங்களில் இருந்து வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம்அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

போட்டித் தேர்வுகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதிகாரம் சார்ந்த பதவிகளில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பெற்றோருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். தொழிலில் புதிய புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

தொழில் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் உங்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பெற்றாவது தொழிலை அபிவிருத்தி செய்கின்ற பொழுது, சிந்தித்து முடிவு எடுங்கள். நிர்வாகம் சம்பந்தப்பட்ட செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். அடுத்தவர்களைப் பற்றி புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

எந்த செயல்களைச் செய்தாலும் பதட்டம் ஏதும் இல்லாமல் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிக்கவும். பயணங்களின் போது, உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தாய்வழியிலான உறவினர்களிடம் உங்களுக்கு உதவி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

எந்த காரியமாக இருந்தாலும் அதை செய்வதற்கு முன் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றியை நோக்கிச் செல்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பாராத பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் லாபம் உண்டாகும். வாடிக்கையாளர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

MOST READ: நைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா? இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...

மீனம்

மீனம்

வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். நெருங்கிய நபர்களின் மூலமாக தேவையற்ற வீண் அலைச்சல்கள் உண்டாகும். இணையதளங்கள் சம்பந்தப்பட்ட முதலீடுகளில் லாபங்கள் உண்டாகும். எதிர்பாலின மக்கள் இனத்தவர்களால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும். எடுத்த காரியத்தை நீங்கள் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகின்ற எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For August 21st 2019 Wednesday

Each horoscope article on the Boldsky astrology section will cover all aspects of your life, right from career, personal life, finances, health to even travel and education. While the daily horoscopes will provide you with all the information you need to know ahead of your day. It will also help you take business or job-related decisions. see your Daily Horoscope For 21st 2019 wednesday
Story first published: Wednesday, August 21, 2019, 6:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more