For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (09.06.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நல்லது…

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 09 ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 09 ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 9th June 2021 Wednesday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களின் செயல்திறனால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மிகவும் திருப்தி அடைவார்கள். அவர்களின் வழிகாட்டுதலையும் பெறுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்வோர் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். இன்று நீங்கள் நல்ல நிதி லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளது. விரைவில் உங்கள் வணிகத்தில் ஒரு புதிய திருப்பம் வரலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு வாக்குறுதியை அளித்திருந்தால், அதை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று வணிகர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். எந்தவொரு பழைய சட்ட விஷயத்திலும் நிவாரணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பைப் பெறலாம். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், உங்கள் கருத்து வேறுபாடு சமாதானப்படுத்தப்படலாம். இருப்பினும், குடும்பத்துடன் தொடர்புடைய முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க முயற்சிக்க வேண்டும். பணத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும். வரவிற்கு ஏற்ப செலவு செய்தால் நல்லது. மற்றவர்களின் பேச்சை கேட்டு உங்கள் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு சிறுநீரக சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சினை இருந்தால், இன்று எந்தவிதமான கவனக்குறைவும் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மிதுனம்

மிதுனம்

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வியாபாரிகள், எந்தவொரு புதிய வேலையையும் தொடங்க விரும்பினால், முழுமையாக விசாரித்து செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுத்தால் விரைவில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதற்கு கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அரசு ஊழியர்கள், வேலையை அலட்சியப்படுத்த வேண்டாம். வீட்டின் சூழ்நிலை அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வேலையுடன், உங்கள் குடும்பத்திற்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கவும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். இந்த பரவலான உலகளாவிய தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:30 மணி முதல் மாலை 3:40 மணி வரை

கடகம்

கடகம்

இன்று உங்கள் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தும்படி, கோபத்தில் எதையும் செய்ய வேண்டாம். வேலை முன்னணியில், மாற்று வேலை பற்றி யோசித்தால், உங்கள் நலம் விரும்பிகள் மற்றும் அனுபவமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற வேண்டும். அரசு வேலைக்கு முயற்சிப்போருக்கு இன்று சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசினால், வீட்டின் பெரியவர்களை மதிக்கவும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று இடுப்பு அல்லது முதுகு தொடர்பான பிரச்சனை இருக்கலாம். கனமான பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 12:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை

சிம்மம்

சிம்மம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. உடற்சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகள் இருக்கலாம். உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. உங்கள் நிலையை வலுப்படுத்த விரும்பினால், உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனையை முறையாக பின்பற்றுங்கள். வர்த்தகர்கள் இன்று கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். விரைவில் லாபம் ஈட்ட ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறலாம். திருமண வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைத் தீர்க்க நல்ல வாய்ப்பை இன்று பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையைப் புரிந்து கொள்ள முயற்சித்தால் நல்லது. உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். இருப்பினும், அதிகமாக செலவிட வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:15 மணி முதல் இரவு 9:20 மணி வரை

கன்னி

கன்னி

வேலையைப் பற்றிப் பேசும்போது, உத்தியோகஸ்தர்களின் அர்ப்பணிப்பால் அலுவலகத்தில் முதலாளி மிகவும் ஈர்க்கப்படுவார். இன்று உங்கள் முன்னேற்றத்தின் அறிகுறிகளையும் பெறுவீர்கள். வேலை தேடுவோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. நீங்கள் ஒரு நல்ல நிறுவனத்திடமிருந்து ஒரு நேர்காணலைப் பெறலாம். வணிகர்களுக்கு இலாப நிலைமை மேம்படும். குறிப்பாக நீங்கள் ஒரு சில்லறை வணிகராக இருந்தால், நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியே செல்லலாம். இருப்பினும், வீட்டிற்கு வெளியே செல்லும் போது தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் 10:15 மணி வரை

துலாம்

துலாம்

வேலை முன்னணியில் நீங்கள் கலக்க வேண்டிய நாள். உத்தியோகஸ்தர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று நீங்கள் முன்னேற ஒரு நல்ல வாய்ப்பைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வர்த்தகர்கள் பணத்தின் அடிப்படையில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இன்று ஒரு பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டின் சூழல் சில காலமாக பதற்றமாக இருந்திருந்தால், இன்று சில முன்னேற்றங்களைக் காணலாம். வீட்டின் பெரியவர்களுடனான உறவில் சிறந்த நல்லிணக்கம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், அதிகப்படியான கோபத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:20 மணி முதல் மாலை 3 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. நீங்கள் சில பெரிய சவால்களை எதிர்கொள்ளக்கூடும். எனவே, தைரியத்துடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டிய நாள். போக்குவரத்து தொடர்பான பணிபுரிவோர் சட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவும் பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது, வாழ்க்கைத் துணையுடன் பிளவு ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். பணத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும். இன்று நீங்கள் எந்த பெரிய நிதி பரிவர்த்தனையும் செய்யாவிட்டால் நல்லது. உடல்நிலையைப் பொறுத்தவரை, சில நாள்பட்ட நோய்கள் தோன்றக்கூடும். இதன் காரணமாக உங்கள் பிரச்சனைகள் இன்று அதிகரிக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மதியம் 12:55 மணி வரை

தனுசு

தனுசு

உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்கவும். உயர் அதிகாரிகளின் ஆலோசனையை புறக்கணிக்காதீர்கள். அனைவருடனும் இணைந்து பணியாற்றுங்கள். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இன்று சில பெரிய வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் திட்டங்களிலும் சில மாற்றங்களைச் செய்யலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று சேமிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் இன்று சில பதற்றம் சாத்தியமாகும். உடல்நலம் பற்றிப் பேசினால், உங்களுக்கு ஏற்கனவே இருந்த சிக்கல் இன்று அதிகரித்து காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

மகரம்

மகரம்

இன்று அலுவலகத்தில் உங்கள் மரியாதை சற்று அதிகரிக்கும். உயர் பதவியையும் பெறலாம். வணிகர்களுக்கு இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் பணி பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி போன்றவற்றுடன் தொடர்புடையது என்றால் இன்று நீங்கள் கலவையான முடிவுகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உடன்பிறப்புடனான உறவில் கசப்பு இருக்கலாம். இன்று சண்டைகள் அல்லது வாதங்களிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் உறவில் ஒரு பெரிய பிளவு ஏற்படலாம். திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இல்லாதிருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள, துணைக்கு போதுமான நேரத்தை கொடுக்க வேண்டும். உடல்நலம் பற்றி பேசுகையில், உங்கள் வழக்கத்தை ஒழுங்கமைக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை

கும்பம்

கும்பம்

உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கும். புதிய பொறுப்புகளுடன், முன்னேற்றத்திற்கான வழிகள் உங்களுக்காகத் திறக்கும். குறிப்பாக நீங்கள் வங்கித் துறையுடன் தொடர்புடையவராக இருந்தால், உங்கள் கடின உழைப்பின் நல்ல முடிவுகளைப் பெறலாம். வர்த்தகர்கள் இன்று விவாதங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கூட்டு வியாபாரம் செய்வோர், கூட்டாளருடன் பிரிவு சாத்தியமாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் சாத்தியமாகும். உங்கள் நிதி முயற்சிகள் வெற்றிபெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். உள்நாட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9:05 மணி வரை

மீனம்

மீனம்

பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு எதுவும் சரியாக இருக்காது. உங்கள் நிதி நிலை மோசமடைய வாய்ப்பு உள்ளது. பணத்தைப் பொறுத்தவரை மிகவும் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில மாற்றங்களைக் காணலாம். அத்தகைய சூழ்நிலையில், அவரின் மனதை அறிய முயற்சிக்க வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இன்று நீங்கள் நேரத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். இன்று எந்த வேலையும் முழுமையடையாமல் விட வேண்டாம். ஆடை வியாபாரிகள் இன்று நல்ல லாபம் ஈட்ட முடியும். நீங்கள் ஒரு பெரிய ஆர்டரைப் பெற வாய்ப்புள்ளது. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், உங்கள் மருந்துகளை சரியான நேரத்திற்கு உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:50 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 9th June 2021 Wednesday In Tamil

Check out the daily horoscope for 9th june 2021 wednesday in tamil. Read on.
Story first published: Tuesday, June 8, 2021, 21:33 [IST]
Desktop Bottom Promotion