Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இன்றைக்கு இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப யோகமான நாளா இருக்கும்...
மங்களகரமான செவ்வாய்கிழமை நாளில் சில ராசிக்காரர்களுக்கு சில யோகங்கள் தேடி வரும் காரணம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் எற்படும் பலம்தான்.
மங்களகரமான செவ்வாய்கிழமை நாளில் சில ராசிக்காரர்களுக்கு சில யோகங்கள் தேடி வரும் காரணம் கிரகங்களின் சஞ்சாரத்தினால் எற்படும் பலம்தான். சந்திரன் இன்றைக்கு மகரம் ராசியில் சஞ்சரிப்பதால் மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திரஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்னிக்கு பிசினஸ்ல ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சா எதிர்பாத்த லாபம் வரும். அதோட புதிய முயற்சிகள் மூலமாவும் லாபம் கிடைக்கும். பிள்ளைங்க மூலமா மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற செய்திங்க வந்துடும். கல்யாணம், சுபகாரிய பேச்சவார்த்தைங்க நல்ல விதமா முடியும். பேங்க் பேலன்ஸும் கூடும். ஆடம்பர பொருட்களை வாங்குறதுல ஆர்வம் கூடும். செய்யுற வேலையை உற்சாகமா செய்வீங்க. குடும்பத்துலயும் எல்லோரும ஒத்துமையா இருப்பீங்க. இன்னிக்கு மனசுல நிம்மதி பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 27
அதிர்ஷ்ட நேரம் : இரவு 1.15 மணி - இரவு 7.45 மணி

ரிஷபம்
இன்னிக்கு புது பிசினஸ் தொடங்குற முயற்சியில ரொம்பவே எச்சரிக்கையோட இருக்குறது நல்லது. எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்குறதுல தாமதம் உண்டாகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை கூடும். வண்டி வாகனத்துனால தண்டச் செலவுங்க வந்துடும். பிள்ளைங்களால குடும்பத்துலயும் நிம்மதி இல்லாத நிலை இருக்கும். கூடவே கடன் பிரச்சனையும் கலங்க வைக்கும். இருந்தாலும் உங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கி வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.20 மணி இரவு 7.45 மணி

மிதுனம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, வெளியிடங்கள்ல மத்தவங்க கிட்ட பேசம்போது கொஞ்சம் யோசிச்சி நிதானமா எச்சரிக்கையோட பேசுறது நல்லது. சுபகாரிய முயற்சிகளை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்குறது அவசியம். வெளியூர் பிரயாணம் பண்ணும்போது கவனமா இருக்க வேண்டியது கட்டாயம். மத்தவங்க பிரச்சனையில தேவையில்லாம மூக்கை நுழைக்காதீங்க. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண் : 15
அதிர்ஷ்ட நேரம் : இரவு 7.15 மணி - இரவு 10.20 மணி

கடகம்
இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களோட ஒத்துழைப்போட உங்க வேலையை செஞ்சி முடிப்பீங்க. வண்டி வாகனத்துல போகும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். மனைவி வழி சொந்தக்காரங்களால உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தையில சுமூகமான முடிவு கிடைக்கும். இன்னிக்கு தாராள தனவரத்து இருக்கும்கிறதுனால புது பொருட்களையும் வாங்கவீங்க. பார்ட்னர்ஷிப் பிசினஸ் பண்றவங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பிசினஸ்லயும் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடும்.
ராசியான நிறம் : பர்ப்பிள்
ராசியான எண் : 30
ராசியான நேரம் : காலை 10.00 பிற்பகல் 1.30 மணி

சிம்மம்
இன்னிக்கு உத்தியோகத்துல இதுவரைக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை ரொம்ப திருப்திகரமா இருக்கும். பிசினஸ்லயும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். முக்கியமான வி.ஐ.பி.க்களோட சப்போர்ட் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி பண்ணுனா வெற்றி கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்களால நல்லது நடக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.20 மணி இரவு 7.45 மணி

கன்னி
இன்னிக்கு பிசினஸ் முன்னேற்றத்துக்கா நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்களோட ஐடியாவால பிசினஸ்லயும் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்துலயும் புதுசா நட்பு வட்டம் உருவாகும். எதிர்பாத்த பேங்க் லோன் சுலபமா கிடைக்கும். பணத்தை சிக்கனமா செலவு பண்ணினா சேமிப்பு கூடும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துல சந்தோஷம் கூடும். கல்யாணம் சுபகாரிய முயற்சிகள்ல நல்ல சேதி வந்து சேரும்.
ராசியான நிறம் : பச்சை
ராசியான எண்: 21
ராசியான நேரம் : காலை 4.30 மணி - பிற்பகல் 1.30 மணி

துலாம்
இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களை அனுசரிச்சி நடந்துகிட்டா, நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். உங்க வாயை கண்ட்ரோல் பண்ணிட்டா வீட்டுல பிரச்சனை வராம அவாய்ட் பண்ணிடலாம். அதோட, குடும்பத்துல திடீர்னு தண்டச்செலவுங்க வந்து கையை கடிக்கும். பிசின்ஸ் சம்பந்தமா வெளியூர் போறதுனால அலைச்சல் இருந்தாலும், ஆதாயம் கிடைக்கும். பிள்ளைங்க மூலமா வீண் பிரச்சனை உருவாகலாம். கவனமா இருந்துக்கோங்க. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை தேவை.
அதிஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.15 மணி மாலை 6.45 மணி

விருச்சிகம்
இன்னிக்கு கல்யாணம், சுபகாரியம் சம்பந்தமான பேச்சு வார்த்தையில வெற்றி கிடைக்கும். பழைய ஃப்ர்ண்ட்ஸுங்களை சந்திச்சி பேசுறதுல ஆர்வம் கூடும். கூடப்பொறந்தவங்களால உதவி, ஒத்தாசை கிடைக்கும். உத்தியோகத்துல எதிர்பாத்த இன்க்ரிமெண்ட்டும் வந்து சேரும். பிள்ளைங்க படிப்புல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அதனால குடும்பத்துலயும் மகிழ்ச்சியான சூழ்நிலையே தவழும். இன்னிக்கு தொட்ட காரியம் துலங்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண் : 18
அதிர்ஷ்ட நேரம் : காலை 7.30 மணி - பிற்பகல் 3.40 மணி

தனுசு
இன்னிக்கு பிசினஸ்ல சின்னச் சின்னதா மாற்றங்களை செஞ்சா நீங்க எதிர்பாத்த லாபம் கிடைக்கும். புது பிசினஸ் பண்ற முயற்சிக்கு முட்டுக்கட்டைகள் விழலாம். குடும்பத்துலயும் எதிர்பாக்காத தண்டச்செலவுங்க வந்து விழும். அதோட பிள்ளைங்களாலயும் தேவையில்லாத பிரச்சனைங்க முளைக்கலாம். கவனமா இருக்க பாருங்க. ஃப்ரண்ட்ஸுங்களோட உதவியும் கிடைக்கும். சொந்தக்காரங்களால மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற செய்திகள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட நேரம் : 18
அதிர்ஷ்ட நேரம் : காலை 5.30 மணி - மாலை 6.30 மணி

மகரம்
இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். கூடப்பொறந்தவங்களோட சப்போர்ட் கிடைக்கும். பிள்ளைங்களோட படிப்புலயும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குறதுல ஆர்வம் காட்டுவீங்க. பிசினஸ் சம்பந்தமான வழக்குல உங்க பக்கம் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 19
அதிர்ஷ்ட நேரம் : காலை 7.20 மணி பிற்பகல் 1 மணி

கும்பம்
இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களை அனுசரிச்சி நடந்துகிட்டா உங்களுக்கு லாபம் வர வாய்ப்பிருக்கு. பணம் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனையில எச்சரிக்கையா இருந்தா பணம் கைவிட்டு போகாம காப்பாத்திக்கலாம். பணத்தை எண்ணி எண்ணி செலவழிச்சா கடன் வாங்காம தப்பிக்கலாம். இல்லேன்னா பணப்பிரச்சனையால குடும்பத்துலயும் நிம்மதி இல்லாம போகும். கூடப்பொறந்தவங்க மூலமா உதவிகள் வந்து சேரும். ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னதா பாதிப்பு உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 10
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5.20 மணி - இரவு 8 மணி

மீனம்
இன்னிக்கு உத்தியோகத்துல சில பேருக்கு எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃப்ர கிடைக்கும். குடும்பத்துலயும் சுபகாரிய செலவுகள் வந்து கையை கடிக்கும். சொந்தக்காரங்க கூட இருந்து வந்த மனஸ்தாபங்கள் மறையும். பிசினஸ்ல சின்னதா மாற்றம் செய்யுறதுனால நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும். அதனால மனசளவுல ரொம்பவே ப்ரீயா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 30
அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி - பிற்பகல் 3 மணி



Click it and Unblock the Notifications