For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (07.05.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளைத் தவிர்த்திடவும்…

இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 07 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 7th May 2021 Friday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு கடினமான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, இன்று வேலைகளில் சில நடுவில் சிக்கிக்கொள்ளக்கூடும். அதிக பணிச்சுமை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. வணிகத்துடன் தொடர்புடையவர்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து எந்த ஒப்பந்தத்தையும் செய்ய வேண்டும். விரைவான லாபத்தை ஈட்ட வணிக முடிவுகளை அவசரமாக எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். நாளின் இரண்டாம் பாகத்தில் வாழ்க்கைத் துணையிடமிருந்து நற்செய்தியை பெறுவதன் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். பொருளாதார முன்னணியில், இன்றைய நாள் கலக்கப்படும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல்நிலையைப் பொறுத்தவரை, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முன்ப சரியாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் குறைபாடுகளை அவர்கள் சரிசெய்தால், அவற்றை கவனமாகக் கேட்க வேண்டும். கோபத்தால் வேலை பாதிக்கக்கூடும். இன்று சிறு வணிகர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். இன்று எதிர்பார்த்த முடிவுகளைப் பெறலாம். நிதி நல்ல நிலையில் இருக்கும். இன்று எந்த நிதி பரிவர்த்தனையையும் செய்யலாம். நீங்கள் மகிழ்ச்சிக்காகவும் அதிக பணத்தை செலவிடலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். வீட்டு உறுப்பினருடன் கருத்தியல் வேறுபாடுகள் சாத்தியமாகும். சண்டையால் வீட்டின் அமைதி பாதிக்கும். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று சாதாரணமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்தால், எல்லா பணிகளையும் மெதுவாக செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். அலட்சியமாக இருந்தால், வரும் நாட்களில் அழுத்தம் கணிசமாக அதிகரிக்கக்கூடும். உயர் அதிகாரிகள் முன்பு உங்கள் பெயர் கெட வாய்ப்புள்ளது. வணிகத்தில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். புது வேலையை செய்ய இன்று உகந்த நாள் அல்ல. குடும்ப வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது, வீட்டு உறுப்பினரின் உடல்நிலை குறித்த கவலை அதிகரிக்கக்கூடும். அதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். பொருளாதார முன்னணியில், இன்று விலை உயர்ந்ததாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, அதிகரிக்கும் உடல் எடையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

கடகம்

கடகம்

வணிகர்கள் சட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு கவனக்குறைவும் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வேலைக்கு ஆபத்து ஏற்படலாம். இன்று பணத்தின் அடிப்படையில் விலையுயர்ந்ததாக இருக்கும். இன்று நீங்கள் பழைய கடனை செலுத்த வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இன்று அவர்களுடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல்நலம் பற்றி பேசினால், உங்களுக்கு இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை

சிம்மம்

சிம்மம்

நீங்கள் ஏதேனும் விலைமதிப்பற்ற பொருளை வாங்க நினைத்தால், இன்று அதற்கு சாதகமான நாள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டு பெரியவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சிறு விவாதம் இருக்கலாம். வேலையைப் பற்றி பேசுகையில், அலுவலகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் இன்று முடிவடையும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியும். வர்த்தகர்கள் இன்று பயணத்தைத் தவிர்த்திடவும். உடல்நிலையைப் பொறுத்தவரை, உயர் இரத்த அழுத்த நோயாளிகள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி

கன்னி

வணிகர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகிறது. குறிப்பாக போக்குவரத்தில் பணிபுரிவோர் நல்ல வெற்றியைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இன்று பெரிய நேர்மறையான மாற்றம் ஏற்படக்கூடும். மேலும், உங்கள் வாழ்க்கை புதிய திசையில் நகரும். பண வரவு நல்ல நிலையில் இருக்கும். இன்று எந்த பிரச்சனையும் இருக்காது. தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நேரம் வரும்போது உங்கள் பிரச்சனை தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, தினமும் யோகா மற்றும் தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 28

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை

துலாம்

துலாம்

வணிகர்கள் இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். எனவே பொறுமையுடன் வேலை செய்ய அறிவுறுத்தப்படுகிறீர்கள். விரைவில் நிலைமை மேம்படும். அலுவலகத்தில் முதலாளி உங்களிடம் ஒரு கடினமான பணியை ஒப்படைக்கக்கூடும். இந்த வேலையை முழு உற்சாகத்துடன் முடிக்க முயற்சிக்கவும். கடின உழைப்பின் பலனை விரைவில் முன்னேற்றத்தைப் பெறலாம். பணம் நல்ல நிலையில் இருக்கும். சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். பழைய கடனிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, அலட்சியம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். காலையில் சில நல்ல செய்திகளைப் பெறுவதன் மூலம் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று அன்புக்குரியவர்களுடன் மிகவும் வேடிக்கையாக நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். அவர்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலையைப் பொறுத்தவரை, உங்கள் முயற்சியில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. நிதி தட்டுப்பாடு காரணமாக தடைப்பட்ட வேலை இன்று முடிக்கப்படலாம். வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், சிறந்ததை வழங்க முயற்சியுங்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, வானிலை மாற்றத்தால் உங்கள் ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

தனுசு

தனுசு

அலுவலகத்தில், உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அலுவலக அரசியலிலும் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியர்களில் சிலர் உங்கள் பெயரை முதலாளியின் முன்பு கெடுக்க முயற்சிக்கலாம் அல்லது முக்கியமான சில வேலைகளுக்கு இடையூறு செய்ய முயற்சிக்கலாம். வர்த்தகர்கள் நல்ல பொருளாதார நன்மையைப் பெற முடியும். உங்கள் கடின உழைப்பு வெற்றியை பெற்று தரும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வாழ்க்கைத் துணையை மரியாதையுடன் நடத்த முயற்சி செய்யுங்கள். அற்ப விஷயங்களுக்காக கோபப்படும் உங்கள் பழக்கம் குடும்பத்தில் பதற்றத்தை அதிகரிக்கக்கூடும். பண வரவு நன்றாக இருக்கும். பெரிய செலவு செய்ய நினைத்தால் இன்று அதைத் தவிர்க்க வேண்டும். உடல்நலம் பற்றி பேசும்போது, அதிகப்படியான மன அழுத்தத்தையும் கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

மகரம்

மகரம்

இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களது அனைத்து பணிகளையும் மிக வேகமாக முடித்திடவும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இன்று உங்கள் முக்கியமான பணிகள் சில சரியான நேரத்தில் முடிக்கப்படும். மேலும், உங்கள் செயல்திறனில் முதலாளி திருப்தி அடைவார். ஆன்லைன் வர்த்தகர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கப்போகிறது. இன்று பெரிதும் பயனடையலாம். உங்கள் வணிகமும் வளரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்பும் ஒற்றுமையும் வீட்டு உறுப்பினர்களிடையே நிறைந்திருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நேரத்தை செலவிடுவீர்கள். பிறருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால், அதனை தவற விட வேண்டாம். பொருளாதார முன்னணியில், இன்று நன்றாக இருக்கும். பணம் தொடர்பான எந்த பிரச்சனையும் இருக்காது. உடல்நிலையைப் பொறுத்தவரை, வெளி உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்கவும். மேலும், சூடான பானங்களை அடிக்கடி பருகவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:55 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்

கும்பம்

வர்த்தகர்கள் தங்கள் பங்குகளை அதிகரிக்க விரும்பினால் கவனமாக முடிவெடுக்க வேண்டும். அவசர முடிவுகள் உங்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தும். கூட்டு வியாபாரம் செய்வோர் இந்த நேரத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் தவிர்க்க வேண்டும். ஊழியர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். உங்கள் பணிகள் அனைத்தும் சீராக முடிவடையும். பணத்தைப் பொறுத்தவரை, இன்று கலங்க வாய்ப்புள்ளது. வரவிற்கு ஏற்ப செலவு செய்தால் உங்களுக்கு நல்லது. கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும். வீட்டு சூழல் இன்று சரியாக இருக்காது. உடன்பிறப்புடன் பிரிவினை ஏற்படலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் அன்புக்குரியவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று தொண்டை புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:10 மணி முதல் மாலை 3:50 மணி வரை

மீனம்

மீனம்

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. சோம்பலாக உணரலாம். உங்கள் மனம் படிப்பில் சற்று குறைவாக இருக்கும். இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, அதை சரியாக பயன்படுத்த முயற்சிக்கவும். முட்டாள்தனமான விஷயங்களிலிருந்து விலகி, படிப்பில் கவனம் செலுத்துங்கள். பணம் நல்ல நிலையில் இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கலந்துரையாடுவதைத் தவிர்க்கவும். அரசு வேலைகளில் பணிபுரிவோருக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கப்போகிறது. உங்கள் முக்கியமான பணிகளை கவனமாக முடிக்க முயற்சிக்கவும். கவனக்குறைவு உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். வர்த்தகர்கள் நிதி ரீதியாக பயனடையலாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பீர்கள். உடல்நிலையைப் பொறுத்தவரை, குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 11 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 7th May 2021 Friday In Tamil

Check out the daily horoscope for 7th may 2021 friday in tamil. Read on.
Story first published: Thursday, May 6, 2021, 18:14 [IST]
Desktop Bottom Promotion