Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இன்னைக்கு அதிர்ஷ்ட மழையில் நனையப் போகிற ராசிக்காரங்க யார் தெரியுமா?
இன்றைக்கு உங்களுக்கு எப்படி இருக்கும், பணம் வருமா? இல்லை தேவையில்லாத செலவு வருமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? நல்லதா ஏதாவது செய்தி தேடி வருமா என்று யோசிக்கிறீர்களா? இன்றைய ராசிபலனை படிங்க.
இன்றைக்கு உங்களுக்கு எப்படி இருக்கும், பணம் வருமா? இல்லை தேவையில்லாத செலவு வருமா? உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்? நல்லதா ஏதாவது செய்தி தேடி வருமா என்று யோசிக்கிறீர்களா? இன்றைய ராசிபலனை படிங்க. உங்களுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்ளலாம். சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் நாள் முழுவதும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். இன்றைய ராசி பலன் எத்தனை பேரின் மகிழ்ச்சியை அதிகரிக்கப் போகுது என்று பாருங்க. மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு யாருக்கு என்ன பலன் என்று தெரிஞ்சுக்கங்க.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ பொசிஷன் ரொம்ப அற்புதமா இருக்கும். வீட்டுத் தேவைகளும் இன்னிக்கு பூர்த்தியாகிடும். பிசினஸ்ல வியாபாரம் நல்லா நடந்து எதிர்பாத்த லாபம் கிடைக்கும். எதிர்பாத்துட்டு இருந்த உதவியும் தேடி வரும். இன்னிக்கு செய்யுற வேலையில புது தெம்பா உற்சாகமா ஃபீல் பண்ணி செய்வீங்க. பிள்ளைங்களும் பெத்தவங்களோட சொல் பேச்சை கேட்டு நடந்துக்குவாங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 09:00 முதல் காலை 11:00 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு ஃப்ரண்ட்ஸுங்களும் பக்க பலமா இருப்பாங்க. கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடிடும். உங்களோட கடன் பிரச்சனையும் இன்னிக்கு முடிவுக்கு வரும். குடும்பத்துலயும் சுபச் செலவுங்க வரலாம். வீட்டுல உங்க வேலைச் சுமையும் குறைஞ்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : பகல் 11:45 முதல் பிற்பகல் 12:30 மணிவரை

மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு குடும்ப உறுப்பினர்களோட சப்போர்ட் கிடைக்கும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரியால பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா நடந்துக்கோங்க. பிள்ளைங்களால இன்னிக்கு நிறைய நல்லது நடந்துடும். ஹெல்த் கண்டிஷனை பொறுத்த வரை ரொம்பவே மந்தமா டல்லா ஃபீல் பண்ணுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்
கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாக்காத திடீர் செலவுங்க வந்து இம்சை கொடுக்கும். வெளியூர் பிரயாணத்துனால அலைச்சல் இருந்தாலும் போன காரியம் நல்லவிதமா முடியும். குடும்ப உறுப்பினர்கள் கூட வாக்குவாதம் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா இருக்க பாருங்க. உத்தியோகத்துல வேலைச்சுமையும் கூடிடும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : இரவு 8:20 முதல் இரவு 10:20 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ் விஷயமா பெரிய மனுஷங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கும். நல்லவிதமா யூஸ் பண்ணிக்கிறது உங்க சாமர்த்தியம். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால சந்தோஷம் கூடிடும். கல்யாணம், சுபகாரிய பேச்சுவார்த்தையில நல்லவிதமா முடியும். குடும்பத்துல பெண்களுக்கு சந்தோஷம் கூடும். எடுக்குற முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 7:25 மணிவரை

கன்னி
கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு குடும்பத்துல இருக்குறவங்களை அனுசரிச்சி போறது நல்லது. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வெளியூர் பிரயாணம் பண்றதை மறந்துட்டு வீட்டுலயே இருக்குறது நல்லது. உத்தியோகத்துல எதிர்பாத்துட்டு இருந்த சலுகைகள் கிடைக்குறதுல கால தாமதம் உண்டாகலாம். பிள்ளைங்க மூலமா மருந்து மாத்திரைன்னு செலவு பண்ண நேரலாம். எச்சரிக்கையா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : மாலை 6:40 முதல் இரவு 7:30 மணிவரை

துலாம்
துலாம் ராசிக்காரங்களே, இன்னிக்கு சுபகாரிய பேச்சுவார்த்தை நல்லவிதமா கைகூடி வரும். உத்தியோகம் சம்பந்தமா ரொம்ப நாளைக்கு அப்புறமா வெளியூர் பிரயாணம் செல்ல வேண்டியதிருக்கும். கொஞ்சம் எச்சரிக்கையா நடந்துக்கோங்க. இன்னிக்கு பண வரவு ரொம்ப தாராளமா இருக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : பகல் 2:45 முதல் மாலை 6:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு சுப காரிய முயற்சிகள்ல சின்னதா தடை தாமதத்துக்கு பின்னாடி நல்ல விதமா முடியும். சுபச் செலவுங்களும் ஏற்படலாம். வீட்டுல சொந்தக்காரங்க அனுசரிச்சி நடந்துக்கிட்ட, எந்த பிரச்சனையும் இல்லாம நிம்மதியா இருக்கலாம். வியாபாரத்தில நல்லா நடந்து எதிர்பாத்த லாபமும் கிடைக்கும். செய்யுற வேலையில சின்னதா இடைஞ்சல் தடங்கல் வர வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 17
சாதகமான நேரம் : பகல் 12:00 முதல் மாலை 4:25 மணிவரை

தனுசு
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த இம்ப்ரூவ்மெண்ட் கிடைக்கும். அதனால லாபமும் பெருகிடும். வெளியில இருந்து வரவேண்டிய பாக்கித் தொகையும் திடீர்னு உங்க கைக்கு வந்து சேரும். கூடப்பொறந்தவங்க கூட ஒத்துமை கூடும். பிள்ளைங்க மூலமாவும் மனசுக்கு சந்தோஷமும் மகிழ்ச்சியும் கூடும். எதிர்பாக்காம திடீர் பண வரத்தும் இன்னிக்கு உண்டு.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

மகரம்
மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு மன நிம்மதிக்காக கோவிலுக்கு போயிட்டு வரலாம். இருந்தாலும் எச்சரிக்கையோட இருக்கணும். வீட்டுக்கு தேவையான புது சாமான்களையும் வாங்குற யோகம் இருக்கு. உத்தியோகத்துல வேலைச்சுமை குறையலாம். கூடப்பொறந்தவங்களால நல்லது நடக்கும். வீட்டுலயும் இன்னிக்கு மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற மாதிரியான தரமான சம்பவங்கள் நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : வயலட்
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : மாலை 3:55 முதல் இரவு 7:15 மணிவரை

கும்பம்
கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப அமோகமா இருக்கும். வீட்டுக்கு தேவையான சாமான்களையும் வாங்கிடுவீங்க. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வெளிய சுத்தாம வீட்டுலயே முடங்கி இருக்குறது நல்லது. இல்லேன்னா அநாவசியமா பிரச்சனைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. உத்தியோகத்துல சீனியர் அதிகாரியால கடும் நெருக்கடி வரலாம். கவனமா இருந்துக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : மாலை 3:55 முதல் மாலை 6 :25 மணிவரை

மீனம்
மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் விஷயத்துல ரொம்ப நிதானமா நடந்துக்குறது நல்லது. உத்தியோகத்துலயும் கூடுதல் எச்சரிக்கையோட இருக்குறது அவசியம். செய்யுற வேலையிலயும் சின்னச் சின்னதா தடங்கல், இடைஞ்சல்னு வரலாம், கவனமா இருந்துக்கோங்க. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னதா பாதிப்பு வரலாம். எச்சரிக்கையோட இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 03
சாதகமான நேரம் : மாலை 2:15 முதல் மாலை 4:15 மணிவரை



Click it and Unblock the Notifications