இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...

ஒவ்வொரு நாளும் கிரக நிலைகளின் அமைப்பைப் பொறுத்து, ஒவ்வொரு ராசிக்காரர்களின் பலனும் வேறுபடும். அதிலும் சமீபத்தில் குரு பெயர்ச்சிக்கு பின் பல மாற்றங்களை ஒவ்வொருவரும் சந்தித்திருப்பீர்கள்.

ஒவ்வொரு நாளும் கிரக நிலைகளின் அமைப்பைப் பொறுத்து, ஒவ்வொரு ராசிக்காரர்களின் பலனும் வேறுபடும். அதிலும் சமீபத்தில் குரு பெயர்ச்சிக்கு பின் பல மாற்றங்களை ஒவ்வொருவரும் சந்தித்திருப்பீர்கள்.

Daily Horoscope For 7th December 2019 Saturday In Tamil

இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது, யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் மற்றும் அதிர்ஷ்ட நேரம் போன்றவற்றை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும். நிதி நிலைமைகள் மேம்பட வாய்ப்புள்ளது. புதிய வருமானத்திற்கான ஆதாரத்தைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், இன்று உங்களுக்கு அற்புதமான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று சட்ட விஷயத்தில் வெற்றியைப் பெறுவீர்கள். மத பணிகளில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் விசித்திரமான சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடும். இன்று உங்களின் நடத்தை மற்றும் கோபத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருங்கள். இல்லாவிட்டால், அது உங்களை மற்றவர்களிடம் மிகவும் மோசமானவராக வெளிக்காட்டும். திருமணமானவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் துணையின் அன்பு மற்றும் ஆதரவுடன், எந்த ஒரு பாதகமான சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வர்த்தகர்களுக்கு இன்று நல்ல லாபம் கிட்டும். முதலீடு செய்வதற்கு இன்று சிறந்த நாள். ஆனால் சரியான ஆலோசனைக்கு பின்னரே முதலீடு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இன்று பயணம் செய்வதற்கு நல்ல நாள் அல்ல.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 18

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1.15 மணி முதல் இரவு 7.20 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று உங்களின் பிடிவாதமான மற்றும் கோபமான குணத்தால் பெரிய பிரச்சனையில் சிக்கக்கூடும். இதைத் தவிர்க்க உங்கள் நடத்தையை மாற்ற வேண்டும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவீர்கள். வர்த்தகர்களுக்கு இன்று நல்ல நாள். மாலையில் நீங்கள் நண்பர்களுடன் சிறிது நேரத்தை சந்தோஷமாக செலவிடுவீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 22

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. மோசமான உடல் ஆரோக்கியம் படிப்பில் இடையூறை ஏற்படுத்தும். குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும். பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இன்று அவர்களை எதிர்த்து எந்த விஷயத்தை செய்தாலும், அதில் தோல்வியையே சந்திப்பீர்கள். பொருளாதார முன்னிலையில் இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். தம்பதிகளுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பெரிய வெற்றிக்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்வதற்கான உங்களின் கனவு விரைவில் நனவாகும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 34

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.20 மணி முதல் இரவு 9.05 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று சிந்தனையுடன் செயல்பட வேண்டும். குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். அன்பானவர்களிடம் இருந்து முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடுவீர்கள். தம்பதிகளுக்கு இன்றைய தினம் சற்று கடினமாக இருக்கும். உங்களின் வாழ்க்கையைத் துணையை சிறப்பாக நடத்துவதன் மூலம் பெரிய பிரச்சனையைத் தவிர்க்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெளிரிய மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று உங்களின் வார்த்தைகளில் கவனம் செலுத்துவீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், கடும் விமர்சனங்களை எதிர்கொள்வீர்கள். இன்று நீண்ட காலத்திற்கு பிறகு மன அமைதியைப் பெறுவீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். காதல், நட்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான பிணைப்பு அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத்துணைடன் சேர்ந்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இன்று உங்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள். இன்று உங்களின் புகழும் நற்பெயரும் அதிகரிக்கும். சந்தோஷமாகவும், மன வலிமையுடனும் இருப்பீர்கள். திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். நிதி விஷயங்களில் நீங்களாக முடிவெடுக்க வேண்டும். தொழில் தொடங்க நினைத்தால், கூட்டாளிகளைத் தவிர்க்கவும். இன்று ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்காது. உடன் பணி புரிபவர்களுடன் வேடிக்கையான நேரத்தை செலவிடலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை மிகவும் ரொமான்டிக்கான மனநிலையில் இருப்பார்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 22

அதிர்ஷ்ட நேரம் : காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியத்துடன் இருந்தால் தீங்கு ஏற்படும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையேயான காதல் அப்படியே இருக்கும். மாணவர்களுக்கு இன்று நல்ல நாள் அல்ல. படிப்பில் கவனம் செலுத்துவது சற்று கடினமாக இருக்கலாம். குடும்பத்தில் அமைதி இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையைக் காண்பீர்கள். இன்று எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க புனிதமான நாளாகும். உங்களின் புத்திசாலித்தனத்தால் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் : காலை 8.20 மணி முதல் மதியம் 3 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று வேலை தொடர்பான பிரச்சனைகள் விலகும். திருமண வாழ்க்கையில் எதிர்மறையான கருத்துக்களைப் பெறக்கூடும் என்பதால் வாழ்க்கைத் துணையிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள். காதல் வாழ்க்கையில் கூட கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உங்கள் துணையின் கோபத்தால், உங்கள் இருவருக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்படும். நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 19

அதிர்ஷ்ட நேரம் : மாலை 6.20 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுன் உணர்ச்சி ரீதியான இணைப்பு அதிகரிக்கும் மற்றும் இருவருக்குள்ளும் ஒரு நல்ல பரஸ்பர பிணைப்பு ஏற்படும். காதல் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் கசப்பு ஏற்படாமல் இருக்க, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நாளின் இரண்டாம் பாகத்தில், வீட்டின் சூழல் சற்று மோசமடையக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விஷயம் உங்கள் கையை மீறிச் செல்லும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 8.15 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இன்று நீங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முடியாது. உங்களின் நிதி நிலைமையை வலுப்படுத்த புதிய திட்டத்தை உருவாக்கலாம். இன்று வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நாள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு வேலை கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் தவறான புரிதல்களால் பதற்றம் அதிகரிக்கும். இன்று ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று உங்களின் நிதி சிக்கல்கள் முடிவடைந்துவிடும் மற்றும் பழைய கடன்களை திருப்பி செலுத்துவீர்கள். இன்று உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களை நுழைய விடாதீர்கள். நல்லதே நினைத்தால், அனைத்தும் நல்லதாக நடக்கும். நாளின் இரண்டாம் பாகத்தில், நண்பர்களுடன் வெளியே செல்லும் திட்டம் இருக்கலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் பெரிய கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 31

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.20 மணி முதல் மதியம் 12 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, December 7, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion