For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு நாள் முழுக்க சந்தோஷத்தை அனுபவிக்க போற ராசிக்காரங்க யார் தெரியுமா?

இன்றைக்கு சித்திரை மாதம் முழு நிலவு நாளில் முழுசா சந்தோஷத்தை அனுபவிக்கப் போற சந்தோஷமான ராசிக்காரங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கீங்களா? இன்றைய ராசிபலனை படிங்க உங்க கேள்விக்கு விடை தெரியும்.

|

இன்றைக்கு சித்திரை மாதம் முழு நிலவு நாளில் முழுசா சந்தோஷத்தை அனுபவிக்கப் போற சந்தோஷமான ராசிக்காரங்க யாருன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கீங்களா? இன்றைய ராசிபலனை படிங்க உங்க கேள்விக்கு விடை தெரியும். யாருக்கு பணம் வரும், யாருக்கு செலவு அதிகரிக்கும் என்றும் பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு யாருக்கு என்ன பலன் என்று தெரிஞ்சுக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு வெளியில இருந்து வரவேண்டிய பணம் உங்க கைக்கு வந்து சேரும். கூடவே கொடுத்த கடன் பாக்கியும் இன்னிக்கு வசூலாகும். எதிரிங்க தொல்லை இருக்காது. கவர்மெண்ட் கிட்டயிருந்து எதிர்பாத்திட்டு இருந்த உதவி இன்னிக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு. இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். குடும்பத்தோட ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு ரொம்ப அற்புதமா இருக்கும். லவ் பண்றவங்க இன்னிக்கு காதலை தைரியமாக சொல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு எதிர்பாக்காத பணவரத்து வந்து சேரும்கிறதுனால உங்களோட சேமிப்பு கூடும். கூடப்பொறந்தவங்க மூலமா நல்லது நடந்துடும். உத்தியோகத்துல இருக்குறவங்களை நம்பி புது பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. குடும்பத்துலயும் சந்தோஷமான சம்பவங்களும் நடந்துடும். இன்னிக்கு உங்களோட கடன் பிரச்சனையும் தீர்ந்துடும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல இருக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்கிட்டா உங்களுக்கு நல்லது நடக்கும். குடும்ப உறுப்பினர்களோட சப்போர்ட்டும் இன்னிக்கு உங்களுக்கு கிடைச்சிடும். சுப காரிய முயற்சிங்களுக்கும் உரிய பலன்கள் கிடைக்கும். சமூக வலைதளங்கள் மூலமா ஃப்ரண்டஸுங்க கிட்ட சாட் பண்ணும்போது எச்சரிக்கையோட இருங்க. சொந்தக்காரங்க வழியில எதிர்பாத்த உதவி கிடைக்கும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல் அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:00 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூடுதல் எச்சரிக்கையோட இருந்தீங்கன்னா, தேவையில்லாத பிரச்சனைகள் வராம தவிர்த்திடலாம். அதோடு வருமானமும் கூடுதலா வரும். இருந்தாலும் குடும்பத்துல வரவுக்கு ஏத்த செலவும் பின்னாடியே வரும். பிசினஸ்ல இருந்து வந்த மந்த நிலை இன்னிக்கு சரியாகிடும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

அதிர்ஷ்ட எண் : 48

சாதகமான நேரம் : இரவு 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு உங்களோட முயற்சிங்களுக்கு வெற்றி கிடைச்சிடும். வீட்டுக்கு தேவையான புது சாமான்களை வாங்குவீங்க. சிலருக்கு வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும் கொஞ்சம் எச்சரிக்கையோட இருக்குறது நல்லது. ஃப்ரண்ட்ஸுங்க மூலமா சுபச் செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:25 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்களால உதவி கிடைக்கும். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு ப்ரமோஷன் கிடைக்கலாம். பிசினஸ்ல இருந்து வந்த பிரச்சனைகள் இன்னிக்கு காணாம போயி சாயங்காலத்துக்கு மேல லாபம் வர வாய்ப்பிருக்கு. பணப்பற்றாக்குறையால குடும்பத்துலயும் சங்கடம் உண்டாகலாம். இன்னிக்க ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டலைன்னா மருந்து மாத்திரைன்னு செலவழிக்க வேண்டியிருக்கும் கவனம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 23

சாதகமான நேரம் : காலை 9:40 முதல் மாலை 5:30 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல இது வரைக்கும் தொல்லை கொடுத்து வந்த எதிரிங்களோட தொல்லை குறையும். பண வரத்தும் இன்னிக்கு ரொம்ப சிறப்பா இருக்கும். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்க அனுசரனையா நடந்துக்குவாங்க. சொந்தக்காரங்க கூட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். அதனால குடும்பத்துலயும் மகிழ்ச்சி உண்டாகும். இன்னிக்கு புதுசா ஃப்ரண்ட்ஸுங்க அறிமுகம் ஆவாங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் இரவு 7:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல வியாபாரம் பெருகி லாபம் கூடும். குடும்பத்துல இருந்து வந்த பிரச்சனைகளும் இன்னிக்கு முடிவுக்கு வந்துடும். கூடப்பொறந்தவங்க கிட்ட ஒத்துமை இல்லாம மனஸ்தாபம் வரலாம். இன்னிக்கு பண வரத்து நார்மலா இருந்தாலும், தண்டச்செலவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. சிக்கனமா செலவழிக்க பாருங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல பாதிப்பு வர வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 35

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 4:25 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு உங்களோட கடன் பிரச்சனை முடிவுக்கு வரலாம். பிசினஸ்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் ஏற்பட்டு லாபம் கூடும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால உங்க முகத்துல மகிழ்ச்சி தாண்டவமாடும். அதனால எந்த வேலையையும் ரொம்பவே உற்சாகமா செஞ்சி முடிப்பீங்க. கூடுதலா வர்ற பணத்தை மிச்சம் பிடிக்குற வழியை பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசி நேயர்களே, இன்னிக்கு புதுசா சொத்து பத்து வாங்குறது சம்பந்தமான பேச்சுவார்த்தை வெற்றிகரமா முடியும். பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். நீங்க நினைச்ச காரியம் ரொம்ப சுலபமா வெற்றிகரமா முடியும். உத்தியோகத்துல புது வாய்ப்புங்க தேடி வரும். குடும்பத்துலயும் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : மாலை 3:55 முதல் இரவு 7:15 மணிவரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் பண்றதுனால நிறைய நல்லதுங்க நடக்கலாம். சொந்தக்காரங்க மூலமா உங்களுக்கு உதவி, ஒத்தாசை கிடைக்கும். பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல்ல இழுபறி நிலை ஏற்படலாம். அதோட காரியத்தடையும் வரலாம். இன்னிக்கு குடும்பத்துல வாக்குவாதம் பண்ணாம விட்டுக்கொடுத்து போனா பிரச்சனை வராம அவாய்ட் பண்ணலாம். அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : மாலை 5:55 முதல் இரவு 8:15 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் நடக்குறதுனால, வெளியூர் பிரயாணம் பண்றதால அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். வீட்டுல உள்ளவங்க கிட்ட பேசும்போது கவனமாவும் எச்சரிக்கையோடும் பேசுனா பிரச்சனை வராது. மத்தவங்க விஷயத்தல மூக்கை நுழைக்காம ஒதுங்க இருக்க பாருங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கைமாத்து, கடன்னு வாங்கி குடுக்காதீங்க. கூடுமானவரை வீட்டை விட்டு வெளிய போகாம இருக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : மாலை 5:55 முதல் இரவு 8:15 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 6th May 2020 Wednesday In Tamil

Check out the daily horoscope for 6th may 2020 wednesday in tamil. Read on...
Story first published: Tuesday, May 5, 2020, 19:26 [IST]
Desktop Bottom Promotion