Just In
- 6 min ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 3 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 3 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 5 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Automobiles
டீ பாய் வேலை செய்தவர் இன்று பெரும் செல்வந்தர்... சொகுசு கார்களுடன் செம வாழ்க்கை... எப்படி தெரியுமா?
- Finance
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- News
குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாம்.. ஆட்டுக்காக ஓநாய் அழுவுது.. எஸ் வி சேகர் கடும் தாக்கு
- Sports
தோனி எப்படிப்பட்டவர் தெரியுமா? அவரை போய் இப்படி பேசலாமா.. ரவி சாஸ்திரி ஆவேசம்!
- Movies
சிலர் என்னிடம் ஆபாசமாக பேசினர்.. தவறாக நடக்க முயன்றனர்.. விஜய் பட நடிகை பரபரப்பு!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Technology
அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான நாள் தெரியுமா?
தினசரி ராசிபலன் நமக்கு பல நல்ல தகவல்களைத் தருகிறது. உங்களின் பொருளாதார சூழ்நிலை, வணிகம், வேலை, ஆரோக்கியம் போன்றவை பற்றி தினசரி ராசிபலன்கள் மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இன்றைய தினம் உங்களின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்றைக்கு உங்களின் நிதி நிலைமை சீராக இருந்துவரும் என்பதால் பணப்பிரச்சினையைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டீர்கள். வீட்டுகடன் மற்றும் வாகன கடன் வாங்க திட்டமிட்டிருந்தால், இன்றைக்கு நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். பணியிடத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாகவே இருந்துவரும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் உங்களை தேடி வரும். ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை எதிர்பார்க்கலாம். வர்த்தகர்கள் புதிய வர்த்தக ஆர்டர்களை பெற வாய்ப்புண்டு. காதல் விஷயத்தில் உங்களக்கு ஏமாற்றமே மிஞ்சும். உங்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு வலுக்கக்கூடும். அதற்காக கவலைப்படாமல், சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருங்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 1
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்
இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அந்த மாற்றங்கள் நல்லவிதமாவே இருக்கும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் திட்டமிட்ட இலக்கை அடைய கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் அதிகரிக்கும் நாள். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கைத் துணையின் உறவு உங்களுக்கு இதமாகவும் இணக்கமாகவும் இருக்கும். பொறுப்புகளை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் குழந்தைகளும் இன்றைக்கு மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணியில் அதிக கவனம் செலுத்தி கடினமாக உழைப்பீர்கள். நிதிச் சிக்கல் இருந்தாலும், பணவரவு சீராக இருந்து வரும். எதிர்கால நலனை முன்னிறுத்தி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்வது நல்லது. உடல் ஆரோக்கியம் வழக்கம்போலவே சீராக இருந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

மிதுனம்
வெகுநாட்களாக வருமா வராதா என்று இழுபறியாக இருந்த பணம் இன்றைக்கு உக்ள் கைக்கு வந்து சேரும். புதிய சொத்தை வாங்கவோ விற்கவோ முயற்சிக்கலாம். பணியிடத்தில் நீங்கள் கவனமாக பணியாற்றவும். எதையும் நன்கு யோசித்து வார்த்தைகளை கவனமாக பிரயோகிக்கவும். உங்கள் உயரதிகார் உங்கள் தவறை சுட்டிக்காட்டினால், அவரிடம் வாக்குவாதம் செய்வதற்கு பதிலாக அவருடைய குற்றச்சாட்டில் உள்ள உண்மையை புரிந்துகொண்டு வேலையில் கவனம் செலுத்தினால், வெற்றி உங்கள் வசமாகும். உங்கள் தவறை மனமுவந்து ஒத்துக்கொள்ளுங்கள். அதீத நம்பிக்கையுடன் எதையும் செய்தால், பின்னர் அதற்காக வருத்தப்படவேண்டிய சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் காலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாலையில் நீங்கிவிடும். அதிக மனஉளைச்சல் காரணமாக உடல் நிலையில் சிறிய அளவுல் பாதிப்பு ஏற்பட்டு தலைவலி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 7:45 முதல் மாலை 4:30 மணிவரை

கடகம்
இன்றைக்கு உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். அயலாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். வழக்கு விவகாரங்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். இன்றைக்க உங்கள் மனநிலையை சீராக வைத்துக்கொண்டால், வாழ்க்கைத்துணையுடன் காராச்சார விவாதத்தையும், சண்டை ஏற்படுவதை தவிர்க்கலாம். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் கவனம் சிதறி வேலையில் நாட்டமில்லாமல் போகலாம். இதனால் வேலை கடுமையாக பாதிக்கக்கூடும். இதனால் உங்களுடைய மூத்த அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் நிதானமாகவும் அமைதியாகவும் இருப்பது நலம் பயக்கும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்காது. செலவுகள் கட்டுக்கடங்காமல் போய் கையிருப்பு கரையக்கூடும். காதல் விவகாரம் சுமாராகவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 9:30 மணிவரை

சிம்மம்
காதல் விவகாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடும். நீண்ட நாட்களாக வாழ்க்கைத் துணையை தேடுபவர்களுக்கு இன்றைக்கு சாதகமான செய்தி வந்து சேரும். காதலியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாம். புதிதாக திருமணமான தம்பதியருக்கு இனிய நாளாக அமையும். உங்கள் மனைவி உங்களிடம் அன்பை பொழிவார். பெற்றோர் உடல் நிலை சீராக இருந்துவரும். பொருளாதார நிலை சீரடைய வாய்ப்புண்டு. சிறிய வேலையும் உங்களுக்கு பெரிய அளவில் நன்மையை கொடுக்கும் என்பதால் பணியில் முழு கவனம் செலுத்தவும். வர்த்தகர்களுக்கு இனிய நாளாக அமையும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்துவந்த வேலை ஒன்று இன்றைக்கு உங்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : விடிகாலை 4:50 முதல் நண்பகல் 12:05 மணிவரை

கன்னி
பணியிடத்தில் நீங்கள் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். உங்கள் மூத்த அதிகாரி உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். உங்கள் வார்த்தைக்க மதிப்பளிப்பார். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பதோடு, நீங்கள் உற்சாகமுடன் பணியில் ஈடுபட உதவும். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் நீங்கிவிடும். இதனால் மனதில் அமைதி குடியேறும். இல்லறத் துணையுடன் உறவு பலப்படும். உங்கள் உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நிதி நிலைமை சீராக இருந்துவரும். அநாவசிய செலவுகளை தவிர்த்தால், சிரமத்தை தவிர்க்க முடியும். காதலர்களுக்கு இன்றைக்கு உகந்த நாள் அல்ல. உங்கள் காதல் விவகாரத்தில் மூன்றாவது நபரின் தலையீடு அதிகரிப்பதை தவிர்த்தால் பிரிவு ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் நலத்தில் அதிக எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : காலை 10:10 முதல் நண்பகல் 3:15 மணிவரை

துலாம்
இன்றைக்கு உங்கள் உடல் நிலை பின்னடைவு சந்திக்கும். ஒவ்வாமை காரணத்தால் உடல் உபாதை ஏற்பட்டு உடல் நலம் சீர்கெடும். எனவே உடல் நலனில் அதிக கவனம் செலுத்தவும். பயணத்தால் பயன் இருந்தால் மட்டுமே பயணம் செய்யவும். இல்லையென்றால் பயணத்தால் உடல் களைப்படைந்து உடல் ஆரோக்கியம் கெடும். எதிர்பார்த்த பணவரவு கைக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உங்களை ஏமாற்றமடையச் செய்யலாம். இதனால் உங்கள் பணத் தேவைக்கு கடன் வாங்க நேரிடும். உங்கள் நிதித் திட்டமிடலை முறையான வழியில் செய்தால் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் நிலைமை சீராக இல்லை. குடும்ப உறுப்புனர்களுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. பொறுமையாக இருந்து உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கவும். இதனால் உங்கள் மீது குடும்ப உறுப்பினர்களின் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்
பணியாளர்களுக்கு இன்றைக்கு வேலையில் இருந்த தடைகள் அகலும். பணியாளர்களால் முதலாளிகள் அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம். பணியாளர்கள் நிலுவை பணிகளை விரைந்து முடிக்கக்கூடும். காதலர்களுக்கு இன்றைக்கு இனிமையான நாளாக இருக்கும். இதுவரையில் காதல் வயப்படாமல் இருந்தால், உங்கள் திட்டத்தை இன்றைக்கு செயல்படுத்தலாம். திருமணமான தம்பதிகளுக்கு இன்றைக்கு இனிய நாளாக அமையக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் நெருக்கம் அதிகரிக்கக்கூடும். இன்றைக்கு இருவரும் சேர்ந்து முக்கிய முடிவுகளை எடுக்கலாம். மாணவர்களுக்கு இன்றைக்கு அருமையான நாளாக இருக்கும். சோம்பலை தவிர்த்து உரிய நேரத்தில் நன்கு படித்தால் பலன் கிடைக்கும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு
இன்றைக்கு நிதி நிலைமை உங்களை சலிப்படைய வைக்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்த தவறினால், பின்பு அவை உங்கள் பட்ஜெட்டை பதம் பார்க்கும். அவசரப்பட்டு செய்யும் செலவினங்களால், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மோதல் ஏற்படும் சூழல் ஏற்படும். வருங்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் செய்யும் செலவுகளால் எதிர்காலத் திட்டங்கள் பாதிப்படையும். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதம் முற்றி வீட்டின் நிம்மதி குறையும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் நிதானப்போக்கை கடைபிடிக்கவேண்டியது அவசியம். பணியிடத்தில் மற்றவர்களை குறை சொல்வதை தவிர்த்தால் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம். மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்க முன்பு உங்கள் தவறுகளை திருத்திக் கொள்வது நல்லது. உடல் நலனை காக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 11:05 மணிவரை

மகரம்
நீங்கள் இன்று குழப்பமான மனநிலையுடனே காணப்படுவீர்கள். உங்கள் நெருக்கமானவர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலமாக தகுந்த ஆலோசனைகளை பெற முடியும். பணியிடத்தில் வேலை தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க நினைத்தால், அனுபவசாலியின் அறிவுரையை கேட்டு நடந்தால் நன்மை விளையும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். குடும்ப உறப்பினர்களிடையே உறவு பலப்படும். உங்கள் பெற்றோரின் ஆசீர்வாதம் உங்களுக்கு துணை நிற்கும். உங்கள் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கி, இருவருக்குமிடையே உறவு பலப்பட்டு அன்பு மேலோங்கும். இருவருக்கும் மறக்க முடியாத நாளாக இன்றைக்கு அமையும். குழந்தையின் செயல் உங்களை மகிழ்ச்சியூட்டும். பொருளாதாரா நிலைமை சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : காலை 7:30 முதல் நண்பகல் 2:00 மணிவரை

கும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் முக்கிய சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். இதனால், வீட்டில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். வெகுநாட்களுக்கு பிறகு உங்கள் வீட்டில் ஆனந்தமும் அமைதியான சூழலும் ஏற்படக்கூடும். பொருளாதார நிலைமை வலுப்பெறும். இன்றைக்கு உங்கள் நிதித் திட்டமிடல் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நீண்டகாலமாக இருந்துவந்த பணப்பிரச்சனை முடிவுக்கு வரும். உங்கள் மனைவியுடன் உறவு பலப்படும். இல்லற வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பீர்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உரிய நேரத்தில் அவர்கள் உங்களக்கு உதவ முன்வரலாம். காதலர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 35
சாதகமான நேரம் : விடிகாலை 5:05 முதல் பிற்பகல் 3:40 மணிவரை

மீனம்
இன்றைக்கு உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தினால், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் சிக்கலை தவிர்க்கலாம். இல்லையென்றால் வருத்தப்பட வேண்டியதிருக்கும். மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்கவும். குறிப்பாக வாகனத்தில் மித வேகம் பின்பற்றினால், விபத்து அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம். பணியிடத்தில் வேலைப்பளு உங்கள் நிம்மதியை கெடுக்கும். மனதை ஒருநிலைப்படுத்தி, வேலையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். வேலையில் கவனம் சிதறினால், உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வியாபாரிகளுக்கு இன்றைக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஒவ்வொரு நாளும் நிலைமை மாறிக்கொண்டே இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். நம்பிக்கையை கைவிடவேண்டாம். பொருளாதார நிலைமை சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை