For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்னி வெயிலில் கூட ரொம்ப கூலா இருக்கப் போற ராசிக்காரங்க யார் தெரியுமா?

கத்திரி வெயில் பட்டையை கிளப்புது, கொரோனா ஒரு பக்கம் பீதியை கிளப்புது வீட்டோட இருந்தாலும் தானா தேடி வம்பு வரும் சிலருக்கு. இன்றைக்கு பண வருமானம் எப்படி விரைய செலவு வருமா சந்தோஷம் வருமா?

|

கத்திரி வெயில் பட்டையை கிளப்புது, கொரோனா ஒரு பக்கம் பீதியை கிளப்புது வீட்டோட இருந்தாலும் தானா தேடி வம்பு வரும் சிலருக்கு. இன்றைக்கு பண வருமானம் எப்படி விரைய செலவு வருமா சந்தோஷம் வருமா? சங்கடம் வருமா என்று யோசிக்கிறீங்களா? இந்த அக்னி வெயிலிலும் சிலர் ரொம்ப கூலா இருப்பாங்க. எந்த ராசிக்காரங்களுக்கு எப்படி இருக்கும்னு இன்றைய ராசிபலனை படிங்க. மேஷம் முதல் மீனம் வரை உங்களுக்கு எப்படி இருக்கும்னு பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு வெளியலிருந்து வரவேண்டிய பணம் உங்க கைக்கு வந்து சேரும். பிசினஸ்ல போட்டி பொறாமை குறைஞ்சி கணிசமா லாபம் கூடும். பிள்ளைங்களும் பொறப்பா நடந்துக்குவாங்க. பண வரத்தும் இன்னிக்கு தாராளமா இருக்கம். வீட்டுல சுபச் செலவுங்களும் ஏற்படக்கூடும். இன்னிக்கு நீங்க தொட்ட காரியம் எல்லாமே வெற்றிகரமா முடியும். அக்னி வெயில் கூட இன்னைக்கு உங்களை கூலா வச்சிருக்கும் அந்த அளவுக்கு ரொம்ப நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்துல சொந்தக்காரங்க வர்றதுனால சுபச் செலவுங்களும் அதிகமா இருக்கும். பிசினஸ்ல வியாபாரம் கொஞ்சம் மந்த கதியில தான் இருக்கும். இன்னிக்கு நீங்க ஹெல்த் கண்டிஷன்ல் அக்கறை எடுத்துக்குறது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 13

சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க உங்களோட தேவை என்னன்னு தெரிஞ்சிகிட்டு உதவி, ஒத்தாசை பண்ணுவாங்க. பிசினஸ்லயும் இன்னிக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். வண்டி வாகனத்துனால செலவுங்க வரலாம், கவனமா இருக்க பாருங்க. பணத்தை சிக்கனமா செலவழிச்சா, சேமிக்க வழி பிறக்கும். உத்தியோகத்துல அநாவசிய பிரச்சனைங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசி நேயர்களே, இன்னிக்கு உங்களோட தைரியமும் தன்னம்பிக்கையும் கூடிடும். சுபகாரியம் சம்பந்தமான பேச்சுவார்த்தைங்க நல்லவிதமா முடியும். பிசினஸ்ல இருந்து வந்த பிரச்சனைங்களும் காணாம போகும். உத்தியோகத்துல செய்யுற வேலையை புதுப்பொலிவோட, ரொம்ப உற்சாகத்தோட செய்வீங்க.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களே, இன்னிக்கு வேலை விஷயமா வெளியூர் பிரயாணம் பண்றதுனால நன்மைகள் உண்டாகும். அதோட எதிர்பாத்த உதவியும் ரொம்ப சுலபமா கிடைச்சிடும். குடும்பத்துலயும் சுபகாரிய பேச்சு வார்த்தைங்க கைகூடி வரும். இது வரைக்கும் இருந்து வந்த பிரச்சனைங்களும் காணாம போயி மனசுல நிம்மதி உண்டாகும். எந்த பிரச்சினையையும் ரொம்ப கூலா ஹேண்டில் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு சமூகத்துல உங்களோட மதிப்பும் மரியாதையும் கூடிடும். வருமானமும் ரெட்டிப்பா கூடிடும். உத்தியோகத்துல சில பேத்துக்கு உழைப்பு, தகுதிக்கேத்த ப்ரமோஷனும், இன்க்ரிமெண்ட்டும் கிடைக்க வாய்ப்பிருக்கு. கூடப்பொறந்தவங்களோட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்ப அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க கடன் பிரச்சனை ஓரளவுக்கு குறைய வாய்ப்பிருக்கு. உத்தியோகத்துலயும் எதிர்பாத்த ப்ரமோஷன் கிடைக்க சான்ஸ் இருக்கு. பிசினஸ்ல வேலையாட்களால வீண் பிரச்சனைங்க வரலாம். கொஞ்சம் தன்மையா நடந்தா லாபம் கிடைக்கும். குடும்பத்துல நிம்மதியில்லாத சூழ்நிலை உருவாக வாய்ப்பிருக்கு. கொஞ்சம் அனுசரிச்சி நடக்க பாருங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு டல்லா தான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களால நல்லது நடக்கும். மனைவி மூலமா பண வரத்துக்கு யோகம் இருக்கு. அதனால சேமிக்குறதுக்கும் வழி பிறக்கும். பிள்ளைங்க மூலமா சுபச் செய்திங்க தேடி வரும். பிசினஸ் விஷயமா வெளியூர் பிரயாணம் போறதுனால நல்லது நடக்கும். இன்னிக்கு நீங்க ரொம்பவே உற்சாகத்தோடயும் சுறுசுறுப்போடவும் இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 8:20 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு கல்யாணம் சுபகாரிய முயற்சிங்கள்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பழைய கடன் பாக்கிகளும் கறையும். வீட்டுக்கு தேவையான புது சாமான்களை வாங்குவீங்க. உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களுக்கு சக ஊழியர்கள் ஒத்தாசையா இருப்பாங்க. பிள்ளைங்களால மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கு வந்து சேரும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும்.உங்க மைண்டும் ரொம்ப கூலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசி நேயர்களே, இன்னிக்கு பண வரத்து சுமார் தான். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல, வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தா நல்லா யோசிச்சி முடிவெடுத்து போறது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் கிட்ட தேவையில்லாத பிரச்சனை ஏற்பட்டு மனஸ்தாபம் உண்டாகலாம். கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. இல்லேன்னா மருந்து மாத்திரைன்னு செலவழிக்க நேரும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 44

சாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, உத்தியோகத்துல கூடுதல் எச்சரிக்கையா இருக்க வேண்டியது அவசியம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்திட்டா நல்லது. இல்லேன்னா உங்க மன அமைதி கெட்டுடும். பிசினஸ்ல பெரிய தொகை எதுவும் இன்வெஸ்ட் பண்ணாம அமைதியா இருக்க பாருங்க. எதுலயும் நிதான போக்கோட இருக்க வேண்டியது அவசியம். இன்னிக்கு நீங்க செய்ய நினைக்குற வேலையும் இழுபறியாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெருன்

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசி நேயர்களே, இன்னிக்கு உங்க கடன் பிரச்சனைங்க தீரும். வீட்டுக்கு தேவையான புது சாமான்களையும் வாங்குவீங்க. லவ் பண்றவங்களுக்கு இனிமையான நினைவுகள்அதிகரிக்கலாம். குடும்பத்துலயும் சந்தோஷம் கூடிடும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடும். உங்க திறமை பளிச்சிடும். புது வாய்ப்புகளும் தேடி வரும். பிசினஸ்லயும் நல்ல அறுவடை கிடைக்கும். ரொம்ப சந்தோஷமான நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 5th May 2020 Tuesday In Tamil

Check out the daily horoscope for 5th may 2020 tuesday in tamil. Read on...
Story first published: Monday, May 4, 2020, 19:02 [IST]
Desktop Bottom Promotion