சுக்கிர தசையால் யாருக்கெல்லாம் பண மழை பொழியும் தெரியுமா?

சுக்கிரன் அருள் நிறைந்த வெள்ளிக்கிழமை. வைகாசி பௌர்ணமி தினம். இந்தமுழு நிலவு நாளில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்கும் யாருக்கெல்லாம் சந்தோஷம் அதிகரிக்கும், யாருக்கு பண வரவு வரும், யாருக்கெல்லாம் சுப செலவுகள் என்று யோசிக்கிறீர்களா?

சுக்கிரன் அருள் நிறைந்த வெள்ளிக்கிழமை. வைகாசி பௌர்ணமி தினம். இந்தமுழு நிலவு நாளில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்கும் யாருக்கெல்லாம் சந்தோஷம் அதிகரிக்கும், யாருக்கு பண வரவு வரும், யாருக்கெல்லாம் சுப செலவுகள் என்று யோசிக்கிறீர்களா? இன்றைய ராசி பலன்களை படிங்க. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களில் யாருக்கெல்லாம் சுக்கிரனின் அருளும் சந்திரனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, தேவையில்லாத விஷயங்களை பேசி பிரச்சனையில மாட்டிக்க வேணாம். அதுக்கு நீங்க மவுன விரதம் இருக்குறது நல்லது. எந்த விஷயத்துலயும் நிதானமா நடந்துக்கோங்க. பிரயாணத்தின் போது நோய் தொற்று பரவாம இருக்க எச்சரிக்கையா இருக்குறது நல்லது. மத்தவங்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்காதீங்க. இன்னிக்கு நீஙக ரொம்ப மனக்குழப்பத்தோடவே இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடிடும். அதனால உற்சாகமும் கூடும். சிலருக்கு புது வீடு கட்டுற யோகம் உண்டாகும். மனைவி வழியில நல்லது நடக்குறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். பிசினஸ்ல இருந்து வந்த மறைமுக எதிரிங்களோட எதிர்ப்புகளும் குறையலாம். எந்த வேலையையும் சிறப்பா செஞ்சி முடிப்பீங்க. புது வண்டி வாகனம் வாங்குற யோகமும் இருக்கு. உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : மாலை 5:25 முதல் இரவு 9:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு பூர்வீக சொத்து பத்துனால நல்லது நடக்கும். அதனால வீட்டுத் தேவைகளும் பூர்த்தியாகும். கூடவே கடன்களும் குறையும். குடும்பத்துலயும் ஒத்துமை கூடும். வீட்டுல சுபகாரிய முயற்சிகள்ல முன்னேற்றம் உண்டாகும். இன்னிக்கு பணவரத்து சிறப்பா இருக்கும். அதனால உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் நல்லா இருக்கும். இன்னிக்கு மனசளவுல ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு பிசினஸ்ல நல்ல முன்னேற்றமும் வியாபாரம் பெருகி கொழுத்த லாபமும் கிடைக்கும். குடும்பத்துல சொந்தக்காரங்க வர்றதுனால மகிழ்ச்சி ஏற்படும். இருந்தாலும் அவங்க கிட்ட பேசும்போது எச்சரிக்கையோட பழகுறது அவசியம். உத்தியோகத்துல சில பேருக்கு சீனியர் அதிகாரிங்களால நெருக்கடிகள் உண்டாகலாம். சிலருக்கு எதிர்பாத்த உதவி கிடைக்குறதுல தடங்கல் ஏற்படும் கவலைப்படாதீங்க மதியத்திற்கு மேல சரியாகிடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு சொந்தத் தொழில் பண்றவங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொந்தக்காரங்க கூட பாசமும் நேசமும் கூடிடும். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்களால வீண் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருங்க. சொந்தக்காரங்க மூலமா எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்கும். குடும்பத்துலயும் எதிர்பாக்காத வீண் செலவுகள் வந்துடும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களை அனுசரிச்சி நடந்துகிட்டா உங்களுக்கு நல்ல அனுகூலம் கிடைக்கும். வருமானம் கூடுறதுக்கான சந்தர்ப்பம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளும் கைகூடும். கூடப்பொறந்தவங்க மூலமா நல்லது நடந்துடும். உத்தியோகத்துல இருக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி நடந்துக்கோங்க. சொந்தக்காரங்க மூலமா சுபச் செய்திகள் உங்க காதுக்கு வந்துடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:30 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனையில கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோட நடந்துக்குறது நல்லது. புது பிசினஸ் ஆரம்பிக்குற முயற்சிக்கு ஃப்ரண்ட்ஸுங்களோட சப்போர்ட் கிடைக்கும். வெளியூர் பிரயாணத்துனால நல்லது நடந்துடும். இன்னிக்கு உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்குறதுல கால தாமதம் உண்டாகலாம். இருந்தாலும் மதியத்துக்கு மேல திடீர் பண வரத்து இருக்கும். இன்னிக்கு எந்த வேலையையும் ஈடுபாடு இல்லாமலேயே செய்வீங்க. குடும்பத்துலயும் சின்னச்சின்ன பிரச்சனைகள் முளைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் மாலை 6:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் போறதுனால உங்களுக்கு அனுகூலம் உண்டாகும். கவர்மெண்ட் மூலமா எதிர்பாத்த உதவி கிடைக்குறதுல கால தாமதம் உண்டாகலாம். சமூகத்துல பெரிய மனுஷங்களோட சப்போர்ட் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் கூட தேவையில்லாத விஷயத்துக்கு வீண் வாக்குவாதம் பண்ணாம தன்மையா பேசி பழகுறது நல்லது. இன்னிக்கு மனசுல சின்னதா குழப்பம் வந்து போகும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களை அனுசரிச்சி நடந்துகிட்டா வியாபாரம் பெருகி நல்ல லாபமும் கிடைக்கும். உத்தியோகத்துல வேலைச்சுமை கூடுதலா இருந்தாலும் கூட வேலை பாக்குறவங்க ஒத்தாசையோட வேலையை சுலபமா முடிப்பீங்க. குடும்பத்துல பிள்ளைங்களால தண்டச்செலவுங்க வந்துடும். ஹெல்த் கண்டிஷன்ல சின்னதா பிரச்சனைகள் முளைக்கலாம். எச்சரிக்கையா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 1:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு பிசினஸ் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையில உங்களுக்கு வெற்றி கிடைக்கும். திடீர் பண வரத்துக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்துல எதிர்பாத்த இன்க்ரிமெண்ட்டும், ப்ரமோஷனும் கிடைக்கும். உங்க பிரச்சனையை தீக்குறதுக்கு கூடப்பொறந்தவங்க சப்போர்ட்டா இருப்பாங்க. மனசுக்கு உற்சாகம் கொடுக்குற மாதிரியான நல்ல செய்தி உங்களை தேடி வரும். இதனால ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:30 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு பிசினஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் கிடைக்கும். கூடவே லாபமும் கூடும். முக்கிய வி.ஐ.பி.க்களோட அறிமுகமும் கிடைக்கும். கல்யாணம், சுபகாரிய பேச்சுவார்த்தையில இருந்து வந்த முட்டுக்கட்டைகள் ஒதுங்கிடும். பிள்ளைங்களும் இன்னிக்கு உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. ரொம்ப நாளா வராம இருந்த பழைய பாக்கிகள் இன்னிக்கு வசூலாகும். பண வரவு தாராளமா இருக்கும் செலவுகளை சிக்கனமாக செலவு பண்ணுங்க.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 3

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:30 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு பிசினஸ்ல பணியாட்கள் ஒத்துழைப்பு கொடுக்குறதுனால, வியாபாரம் பெருகிடும். மதியத்துக்கு மேல வருமானம் கூடும். இதனால பழைய கடனை பைசல் பண்ணுவீங்க. பணத்தை எண்ணி எண்ணி செலவழிச்சா பணப்பிரச்சனை ஓரளவு குறையும். பண விஷயத்துல மூணாவது நபரை நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்காதீங்க. இன்னிக்கு எந்த விஷயத்துலயும் ரொம்பவே கவனத்தோட நடந்துக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் காலை 8:45 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, June 5, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion