For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னிக்கு இந்த ராசிக்காரங்க நாக்குல தான் சனி இருக்கு... ஜாக்கிரதையா பேசுங்க...

நாம் ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய வேண்டுமென்று நினைப்போம். இதற்காக பலர் காலையில் எழுந்ததும் தங்கள் ராசிக்கான பலன் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம். கிரக நிலைகளின் படி, இன்று எந்த ர

|

நாம் ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய வேண்டுமென்று நினைப்போம். இதற்காக பலர் காலையில் எழுந்ததும் தங்கள் ராசிக்கான பலன் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம். கிரக நிலைகளின் படி, இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது, யார் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நிறம் மற்றும் அதிர்ஷ்ட நேரம் போன்றவற்றை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று நீங்கள் எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுக்க வேண்டும். பண விஷயங்களில் ஜாக்கிரதையாக இருங்கள். இன்று புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள் மற்றும் அவர்களுடன் சிறப்பான நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் எழக்கூடும். அமைதியாக இருந்தால், பிரச்சனை தீவிரமாவதைத் தடுக்கலாம். காதல் ஜோடிகளுக்கு இந்நாள் சாதாரணமாக இருக்கும். இன்று ஒரு நல்ல சந்திப்பைக் கொண்டிருப்பீர்கள். மேலும் இன்று நல்ல ஆரோக்கியத்துடன், அதிக ஆற்றலை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருங்கள். கடந்த சில நாட்களாக கடினமாக உழைத்தும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை என்று இன்று வருத்தம் கொள்வீர்கள். இதனால் எரிச்சல் கொள்வீர்கள். இருப்பினும் அலுவலகத்தில் சீரான முறையில் நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உங்கள் வேலையை இழக்க நேரிடும். வர்த்தகர்களுக்கு இன்று சாதாரணமாக இருக்கும். இன்று எந்த ஒரு பெரிய லாபமும் கிட்டாது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் மற்றும் அவர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் இன்று குறையக்கூடும். எனவே அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். நிதி விஷயங்களில் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். ஆனால் நண்பர்களுக்காக அதிக செலவு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 31

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று சண்டை சச்சரவுகளைத் தவிர்த்திடுங்கள். முதலில் அனைவரிடமும் மரியாதையுடன் பேசுங்கள். முக்கியமாக வாழ்க்கை துணையுடன் பேசும் போது கவனமாக பேசுங்கள். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும். இன்று யாரிடமும் பணத்தை கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். இன்று எதிலும் தோல்வியை சந்திப்பீர்கள். இருப்பினும் அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, முன்னோக்கி நகருங்கள். செய்யும் செலவை கவனியுங்கள். வர்த்தகர்கள் இன்று எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 31

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12.45 மணி முதல் இரவு 10.30 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய சிறப்பான செயல்திறனுக்காக பதவி உயர்வு கிடைக்கலாம். உங்களது தினத்தை முன்கூட்டியே திட்டமிட்டால், நீங்கள் நிறைய பலனைப் பெறுவீர்கள். முக்கியமாக அனைத்து வேலைகளையும் முழுமையாக முடிக்க உதவும். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். இன்று, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து ஸ்பெஷலான பரிசு ஒன்றைப் பெறுவீர்கள். இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 42

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்களின் ரொமான்டிக் வாழ்க்கையில் எதிர்பார்த்தது கிடைக்கும். உங்கள் துணையின் முழு அன்பையும் உணர்வீர்கள். இன்று அவர்களுடனான சந்திப்பு ஸ்பெஷலான ஒன்றாக இருக்கும். திருமணமானவர்கள், தங்களின் வாழ்க்கை துணையுடன் நாளை முழுமையாக அனுபவிப்பார்கள். நிதி முன்னிலையில், உங்கள் வருமானம் அனைத்து வழிகளிலும் அதிகரிக்கும். இன்று நீங்கள் எதை அவசரமாக செய்தாலும் இழப்பையே சந்திக்கக்கூடும். இன்று அலுவலகத்தில் நீங்கள் நிலுவையில் வைத்திருந்த பணிகளை முடிப்பதில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலையுடன் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12.05 மணி முதல் இரவு 10.30 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். ஆனால் தைரியமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டால், எளிதில் சமாளிக்க முடியும். இன்றைய தினம் வர்த்தகர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். முக்கியமான ஆவணங்களை தவறான இடத்தில் வைத்து விட்டதால், பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். இன்று உங்களுக்கு நேரம் சரியில்லாததால், முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் எதிர்பார்த்த முடிவுகளை எதிர்பார்க்கலாம். காதல் வாழ்க்கையில் உங்களின் துணையைப் புரிந்து நடந்தால் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இன்று நீங்கள் சற்று சோர்வாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 25

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அலுவலக வேலை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் இதுவரை உங்களிடம் மறைந்திருந்த திறமையைக் கண்டு உடன் பணபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆச்சரியப்படுவார்கள். இப்படியே நீங்கள் அலுவலகத்தில் செயல்பட்டால், விரைவில் உயர் பதவியைப் பெறுவீர்கள். வர்த்தகர்களுக்கு இன்று லாபம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இன்று நீங்ள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு சந்தோஷமாக இருப்பீர்கள். உங்கள் சிந்தனை நேர்மறையாக இருந்தால், உங்களின் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் எல்லாவற்றையும் எளிதாக நிர்வகிக்க முடியும். திருமண வாழ்க்கை இணக்கமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 30

அதிர்ஷ்ட நேரம் : காலை 7.35 மணி முதல் மாலை 6 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று மனைவியுடனான வாக்குவாதத்தால் மன இறுக்கத்துடன் இருப்பீர்கள். எவ்வளவு தான் சண்டை போட்டாலும், உங்கள் இருவராலும் நீண்ட நேரம் பிரிந்திருக்க முடியாது. மாலையில், வீட்டிற்கு செல்லும் போது உங்கள் மனைவிக்கு நல்ல பரிசை வாங்கி செல்லுங்கள். அன்பால் எதையும் வெல்லலாம் என்பதை மறவாதீர்கள். இன்று உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். வர்த்தகர்களுக்கு இன்று சிறிய நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மற்றும் அவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு இன்று முக்கியமான நாள். கடினமாக உழைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 30

அதிர்ஷ்ட நேரம் : காலை 6.30 மணி முதல் மாலை 4 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்றைய நாள் உங்களுக்கு நன்றாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள். நிதி நிலைமையில் இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும். இன்று குடும்பத்தில் சந்தோஷமும், அமைதியும் நிலவும். சகோதரர்களிடையே இருந்து வந்த வாக்குவாதங்கள் முடிவுக்கு வந்து, மீண்டும் இணைவர்.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ நிறம்

அதிர்ஷ்ட எண் : 34

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

இன்றைய தினமும் அமைதியாக இருக்க வேண்டுமானால், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். அலுவலகத்தில், இன்று மிகவும் பிஸியாக இருப்பீர்கள். இன்று அலுவலகத்தில் புதிய வேலை கொடுக்கப்படலாம். உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே செய்யும் வேலையை முன்பே திட்டமிட்டு செய்வது நல்லது. நேர்மறையான அணுகுமுறையை வைத்திருங்கள். இதனால் நிச்சயம் வெற்றி கிட்டும். இன்று உங்களுக்கு திடீரென்று ஒரு பெரிய செலவு வரக்கூடும். மாணவர்கள் இன்று நற்செய்தியைப் பெறுவர். உயர் கல்விக்கு நீங்கள் முயற்சித்தால், அதற்கு இன்று வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 15

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12.45 மணி முதல் மாலை 6 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று அலுவலகத்தில் புத்திசாலித்தனதுடன் வேலை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் அனைத்து முக்கிய பணிகளையும் தடையின்றி முடிப்பீர்கள். உங்களுக்கு புதிய வேலை வேண்டுமானால், பெரியோர்களின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுங்கள். பணத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் வருமானத்தை அதிகரிக்க புதிய மற்றும் வேறுபட்ட வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும். எந்தவொரு பெரிய நிதி பரிவர்த்தனைகளையும் செய்ய நாள் நல்லதல்ல. உங்கள் மனைவியுடனான தகராறுகள் உங்களிடையே பதற்றத்தை அதிகரிக்கும். இன்று உங்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான நெருக்கம் அதிகரிக்கும் மற்றும் பெற்றொரின் பாசம் மற்றும் ஆதரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று நிதி நிலைமை மேம்படும். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இருந்து பண உதவியைப் பெறலாம். மனைவியுடனான உறவு நன்றாக இருக்கும். இன்று உங்களின் ரொமான்டிக் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். தொழிலதிபர்கள் எதிராளியிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 25

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 5th December 2019 Thursday

Check out the daily horoscope for 5th december 2019 thursday. Read on...
Story first published: Wednesday, December 4, 2019, 22:42 [IST]
Desktop Bottom Promotion