For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (04.05.2021): இன்று இந்த ராசிக்காரர்களின் அலுவலகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும்…

இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 04 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 04 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 4th May 2021 Tuesday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று நீங்கள் பிறருக்கு உதவலாம் அல்லது உங்களுக்கு எவரேனும் உதவலாம். அதுமட்டுமின்றி, இன்றைய தினம் வெற்றி உங்கள் பக்கம் இருக்கப்போகிறது. அலுவலகத்தில் புதிய திட்டங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டம் உங்களை வாழ்வின் முன்னேற்ற பாதையில் உங்களை அழைத்து செல்லும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இன்று உங்கள் பழைய நண்பரை சந்திக்கலாம். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பொழுதை செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

ரிஷபம்

ரிஷபம்

வயதில் இளையவர்களுடன் பழகுவது உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கும். இன்றைய தினத்தின் முடிவில் குடும்பத்தினரால் வருத்தப்படுத்தக்கூடும். எந்த பிரச்சனையாக இருந்தாலும், பேசி தீர்ப்பது நல்லது. இன்று கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நேர்மறையான விளைவுகளை சந்திக்கலாம். நிதி ரீதியாக இன்று நீங்கள் நிலையானவராக இருப்பீர்கள். ஆனால் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்கள் ஆதரவளிப்பார்கள். இன்று உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றிட முடியும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு சிறிது நேரம் கொடுங்கள். அலுவலகத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது புத்திசாலித்தனமாக செயல்பட்டு அவற்றை தீர்க்க முயற்சிக்கவும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

மிதுனம்

மிதுனம்

வளர்ச்சிக்கான புதிய யோசனைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று புதிதாக சில நபர்களை சந்திப்பீர்கள். அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் இன்று கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து இன்று ஒரு அழகான செய்தியை பெறலாம். அலுவலக வேலையை சரியான நேரத்தில் முடித்துவிட்டு சீக்கிரம் வீட்டிற்குச் செல்வது நல்லது. இன்று குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுவீர்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் இன்று நீங்கள் முடிக்க முடியும்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

கடகம்

குடும்ப உறவுகளுக்கு அதிக கவனம் செலுத்துங்கள். வீட்டின் சூழல் இன்று பதற்றமாக இருக்கும். ஆனால் நீங்கள் அதை நேர்த்தியாக தீர்க்க முடியும். உடல் உழைப்பு இன்று மிகவும் அவசியம். எனவே ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். கடினமாக உழைத்தால் நிச்சயம் நல்ல பலனைத் தரும். இன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே செல்லலாம். தொற்றுநோய் அபாயத்தால் கூடுதல் கவனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இன்று ஆனந்தமாக இருப்பீர்கள். சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். இதனால் எதிர்காலத்தில் நல்ல பயனை அடையலாம்.

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

சிம்மம்

இன்று அலுவலகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். எனவே, நீங்கள் சோர்வாக உணரலாம். இன்று பொறுமையுடன் உங்கள் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கவும். அன்புக்குரியவர்கள், இன்று உங்களுடன் அழகிய தருணத்தைப் பகிர்ந்து கொள்வார்கள். உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கும். எனவே உங்கள் வாழ்க்கையில் அமைதி நிலவும். இன்று நீங்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவுவீர்கள். உங்களுக்கு இன்று மூன்றாம் நபருடன் சிக்கல் இருக்கலாம். ஆனால், அதை சரியாக கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கன்னி

கன்னி

பயணம் செய்வதற்கு இன்று ஒரு நல்ல நாள். ஆனால் உடல்நலம் சரியில்லாவிட்டால் வீட்டிலேயே தங்கி ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது நல்லது. எதிர்பாராத திடீர் வருமானம் உங்கள் நிதி சிக்கல்களை போக்கிடும். உங்களது கடினமாக உழைப்பிற்கேற்ற அற்புதமான முடிவுகளை நீங்கள் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் செலவிட இன்று ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் துணையிடம் அன்பைக் காட்டும்போது மிகவும் விவேகத்துடன் இருப்பீர்கள். இது உங்களுக்கு பெரும் நிம்மதியை தரும்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

துலாம்

அன்புக்குரியவர்களுக்கு இன்று பரிசு வாங்க நினைத்தால் எந்த தயக்கமும் வேண்டாம். அவர்கள் அதை நிச்சயமாக விரும்புவார்கள். எல்லையற்ற ஆற்றலும் உற்சாகமும் உங்களைச் சூழ்ந்திருக்கும். எனவே, இன்று அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் இன்று சிறு விவாதங்கள் இருக்கலாம். வாழ்க்கைத் துணையால் இன்று குழப்பமடையக்கூடும். அது உங்களை எரிச்சலடையச் செய்யலாம். ஆனால் அமைதியாக இருந்து நிலைமையைக் கையாளவும். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளை செயல்படுத்த இன்று சிறந்த நாள். இதற்கு துணையும் உங்களை ஆதரவளிப்பார். இன்று நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். மிக விரைவில் நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

விருச்சிகம்

விருச்சிகம்

பணிபுரிவோர் இன்று உங்களது இலக்குகளை சுலபமாக அடைய முடியும். முதலீடு என்று வரும்போது சரியான ஆலோசனையைப் பெறுங்கள். இன்று நிலுவையில் உள்ள பணிகளை முடித்த பிறகு உங்களுக்கு கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரின் வருகை இருக்கக்கூடும். எனவே இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் அதை பொறுப்புடன் கொண்டாடுவதற்கான திட்டங்களை மேற்கொள்ளலாம். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் முடிந்தவரை உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

தனுசு

தனுசு

இன்று நீங்கள் புது வாய்ப்புகளைப் பெறுவீர்கள். எனவே, இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்கள் மனதை ஆன்மீக ரீதியில் அமைதி படுத்துங்கள். இது நாள் முழுவதும் ஓய்வெடுக்க உதவும். உங்களின் இனிமையான நடத்தை சுற்றியுள்ள அனைவரையும் ஈர்க்கும். இன்று நீங்கள் கணிசமான தொகையை செலவிடலாம். எனவே, புத்திசாலித்தனமாக செலவழித்து, அதில் பெரும்பகுதியை சேமிக்க வேண்டும். உங்களிடம் நேர்மையான குணத்தால் எதிரிகள் தானாக விலகுவர். நீங்கள் எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். நேர்மை மற்றும் அன்பு உங்கள் வாழ்க்கைத் துணையை மீண்டும் நேசிக்க வைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

மகரம்

மகரம்

அலுவலகத்தில் இன்று ஒருவருடன் மோதல் ஏற்படலாம். ஆனால் பொறுமையுடன் அதை புத்திசாலித்தனமாக கையாள முடியும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், தயவுசெய்து உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். நெரிசலான பேருந்தில் பயணம் செய்வதையோ அல்லது நெரிசலான இடங்களுக்குச் செல்வதையோ தவிர்க்கவும். நிதி சிக்கல்களை எளிதாக்கும் கணிசமான ஊதிய உயர்வைப் பெறலாம். உங்கள் வாழ்க்கையில் காதல் மலரும். அலுவலகத்திலிருந்து சீக்கிரம் புறப்பட்டு சென்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள். இன்று பேசுவதற்கு முன்பு சிந்தியுங்கள். இது பெரும்பாலான பிரச்சினைகளை தீர்க்கும்.

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

கும்பம்

உங்கள் பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக தீர்க்கவும். அமைதியான மனதுடன் பிரச்சனையை கையாண்டால் மட்டுமே அது சாத்தியமாகும். இன்று உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடல்நலம் இன்று சரியாக இருக்கும். இன்று பணம் தொடர்பான நல்ல பலன்களைப் பெறலாம். எனவே, இது உங்கள் நிதி சிக்கல்களை எளிதாக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். இது உங்கள் சுமையை குறைக்கும். உங்களை நேசிக்கும் மற்றும் ஆதரிக்கும் அற்புதமான வாழ்க்கைத் துணையை பெற்றுள்ளீர்கள். நிலைமை என்னவாக இருந்தாலும் உங்கள் கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டாம். நல்ல உணவும், உடற்பயிற்சியும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

மீனம்

நீங்கள் இன்று நல்ல நிதி சலுகைகளைப் பெறுவீர்கள். நேர்மறையாக சிந்தனையால் உங்கள் புத்துணர்ச்சியாக உணருவீர்கள். எண்ணங்கள் புத்துயிர் பெறும். இதனால் ஏராளமான வாய்ப்புகளைப் பெற்றிடலாம். கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று குடும்பத்தினருடன் அற்புதமான நேரத்தை செலவிடுவீர்கள். இதனால் நீங்கள் நன்றாக உணருவீர்கள். பணிச்சுமை இருந்தாலும், வேலையில் சிறந்த ஆற்றலை உணருவீர்கள். திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே அனைத்து பணிகளையும் முடிப்பீர்கள். உங்களின் கனிவான தன்மையால், உங்களின் உதவிக்காக பலர் உங்களைத் தேடுவார்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையைப் புறக்கணிக்காதீர்கள். அவர்களை மகிழ்விக்க அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 4th May 2021 Tuesday In Tamil

Check out the daily horoscope for 4th may 2021 tuesday in tamil. Read on.
Story first published: Monday, May 3, 2021, 18:49 [IST]
Desktop Bottom Promotion