இந்த 4 ராசிக்காரங்களுக்கு உடல் நலத்துல பிரச்சினை வரும் கவனம்...

இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா? சில ராசிக்காரங்க அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பாங்க. உங்க ராசி என்ன நீங்க இன்றைய ராசி பலனை படிச்சீங்கன்னா உங்க எல்லா கேள்விகளுக்கும் வி

இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் தெரியுமா? சில ராசிக்காரங்க அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பாங்க. உங்க ராசி என்ன நீங்க இன்றைய ராசி பலனை படிச்சீங்கன்னா உங்க எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்க இன்னைக்கு ரொம்ப டயர்டா ஃபீல் பண்ணுவீங்க. ஸ்டீரீட் உணவுகளை அவாய்ட் பண்ணுங்க. வேலை வேலைன்னு ஒரே வேலையா இருக்கும். அதுவே உங்களை டயர்ட் ஆக்கிடும். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க உங்க குடும்பத்தில இன்னைக்கு அமைதியாக இருக்கும். உங்க அன்பானவர்கள் மீது நீங்க ரொம்ப அக்கறையாக இருப்பீங்க. நீங்க அவங்க மேல அதிக கவனம் செலுத்துங்க. மாணவர்கள் படிப்புல அக்கறை செலுத்துங்க. உங்க பொருளாதார நிலைமை இன்னைக்கு நார்மலாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம் : மாலை 1.30 மணி முதல் இரவு 8.05 மணி

ரிஷபம்

ரிஷபம்

உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ரொம்ப நல்ல நாள். உங்க ஹார்ட் ஒர்க் பார்த்து சீனியர்ஸ் சந்தோஷப்படுவாங்க. பிசினஸ் பண்றவங்களுக்கு ரொம்ப நல்ல நாள் உங்க வீட்ல மகிழ்ச்சியும் சந்தோஷமும் அமைதியும் நிலவும். மிகப்பெரிய பிரச்சினைகளை நீங்க சால்வ் பண்ணுவீங்க. உங்க திருமண வாழ்க்கையில நீங்க அமைதியாக இருங்க கோபப்படாதீங்க. உங்க நிதி நிலைமை இன்னைக்கு நல்லா இருக்கும். உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. மழைக்கால நோய்கள் வாட்டி எடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.05 மணி முதல் 6.15 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னைக்கு உங்க வீட்ல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நன்மையும் தீமையும் கலந்த நாள் இது. கோபப்படாதீங்க. எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வீங்க. உங்க வேலையில நீங்க பெர்பெக்ட் ஆக இருப்பீங்க. வேலை செய்யிற இடத்தில ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க. சின்ன மிஸ்டேக் இருந்தா கூட அது பிரச்சினை ஏற்படுத்திடும். கிடைக்கிற வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கங்க. உங்க நிதி நிலைமை இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில இன்னைக்கு அக்கறையாக இருங்க இல்லாட்டி பிரச்சினை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 19

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5.20 மணி இரவு 11 மணி

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரங்களே, உங்களுக்கு இன்றைக்கு ரொம்ப முக்கியமான வேலைகள் இருக்கும் அதை ஈசியாக முடிப்பீங்க. திருமண வாழ்க்கையில நீங்க சந்தோஷமாக இருப்பீங்க தம்பதியர்களுக்கு இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிற்பகலுக்கு மேல் சின்னச் சின்ன பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். அதை ஈஸியாக சால்வ் பண்ணுவீங்க. அமைதியான முறையில பிரச்சினைகளை ஹேன்டில் பண்ணுங்க. உங்க கேள்விகளுக்கு விடை கிடைக்கும். உங்க அன்பானவர்கள் உங்களுக்கு நல்லதாக பரிசு கொடுப்பாங்க. இன்னைக்கு வேலை செய்யுற இடத்தில நீங்க செய்யுற வேலை வெற்றியை கொடுக்கும். ஆபிஸ்ல உங்க செயலுக்கு பாராட்டு கிடைக்கும். இன்னைக்கு உங்களுக்கு ஒரு நல்ல செய்தி தேடி வரும். வீட்டு சுற்றுச்சூழல் ரொம்ப அமைதியாகவும் நல்லாவும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி இரவு 7 மணி

சிம்மம்

சிம்மம்

இன்னைக்கு உங்களுக்கு நிறைய சேலஞ்ச் இருக்கும். வேலைகளை வெற்றிகரமாக முடிக்கணுமேன்னு உங்க மன அழுத்தம் அதிகமாகும். ஆபிஸ்லயும் அழுத்தம் அதிகமாகும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவீங்க. பொருளாதார ரீதியாக உங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன் கிடைக்கும். திருமண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். காதல் நிலவரம் அற்புதமாக இருக்கும். ரொமான்ஸ் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். உங்க அன்பானவரோட நீங்க அழகான இடத்திற்கு போவீங்க. நீங்க பயணம் செய்வதற்கு இது ரொம்ப நல்ல நாள் இல்லை. பயணத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி மாலை 4.20 மணி

கன்னி

கன்னி

இன்னைக்கு உங்களுக்கு வேடிக்கையான நாளாக இருக்கும். உங்க ப்ரண்ட்ஸ், குடும்பத்தோட நீங்க சந்தோஷமாக இருப்பீங்க. சமூக அக்கறையோட இருப்பீங்க. உங்க பழைய நண்பர்களை சந்திப்பீங்க. அது உங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும். உங்க கல்யாண வாழ்க்கையில நீங்க ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. வீட்ல உங்க குடும்பத்தோட மகிழ்ச்சியானதாக மாறும். உங்க நிதி நிலைமை ரொம்ப அற்புதமாக இருக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. உணவுல கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 45

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி இரவு 10.10

துலாம்

துலாம்

இன்றைக்கு உங்களுக்கு ரொம்ப நல்ல நாள். உங்க மூடு ரொம்ப நல்லா இருக்கும். உங்க குடும்பத்தோட சந்தோஷமாக இருப்பீங்க. பரிசுகள் கிடைக்கும். உங்க வாழ்க்கை துணையோட அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்க லவ் ரொம்ப பலமாக இருக்கும். அன்பா பேசுங்க உங்களைப்பற்றி உங்க அன்பானவருக்கு புரிய வையுங்க. உங்க நேசமானவரோட நேர்மையை சந்தேகப்படாதீங்க. வேலை செய்யுற இடத்தில உங்களுக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து வேலை செய்யுங்க. உங்க உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். இன்னைக்கு நீங்க ரொம்ப முக்கியமான முடிவுகளை எடுப்பீங்க.

ராசியான நிறம்: குங்குமப்பூ நிறம்

அதிர்ஷ்ட எண் : 38

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.15 மணி இரவு 7.20 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைக்கு நீங்க ரொம்ப ரிலாக்ஸ் ஆக இருப்பீங்க. பிசினஸ் செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு புதிய வேலையை தொடங்குவீர்கள். உங்க திருமண வாழ்க்கை சநதோஷமாக இருக்கும். இன்றைக்கு மேலும் வலுவடையும். குடும்பத்தில இருக்கிற பிரச்சினையை சால்வ் பண்ணுவீங்க. உங்க நிதி நிலைமையை கவனமாக கையாளுங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வருமானம் குறைவாக இருப்பவங்க அதை அதிகரிக்க ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க. வீட்டு பிரச்சினைகளை ஈஸியாக ஹேண்டில் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம்: க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நேரம் காலை 6.30 மணி மாலை 4.00 மணி

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே உங்களுக்கு இன்றைக்கு உற்சாகம் அதிகமாக இருக்கும். நீங்க எதிர்பார்த்தது மாதிரியான சம்பவங்கள் நடக்கும். இன்னைக்கு முக்கியமான வேலைகளை செய்வீர்கள். உங்க சீனியர்ஸ் கொடுக்கிற வேலைகளை செய்து முடிப்பீங்க. கல்யாணமான தம்பதிகளுக்கு ரொம்ப அற்புதமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் விறுவிறுப்பா செய்வீங்க. உங்க வாழ்க்கை துணையோட சேர்ந்து நீங்க வீட்டு பிரச்சினைகளை சால்வ் பண்ணுவீங்க. உங்க நிதிநிலைமை இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கும். சந்தோஷமாக ஷாப்பிங் போவீங்க. உங்க உடல் ஆரோக்கியம் இன்றைக்கு ரொம்ப அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 32

அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.30 மணி இரவு 8 மணி

மகரம்

மகரம்

இன்றைய தினம் உங்க குடும்ப வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் குழந்தைகளோட நேரத்தை செலவு பண்ணுவீங்க. குழந்தைகளோ கல்வியில அவங்க சாதனையில கவனம் செலுத்துவீங்க. உங்க அம்மாவோட ஆரோக்கியத்தில நீங்க அக்கறை செலுத்துங்க. உங்க கல்யாண வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. உங்க குடுத்தில இருக்கிறவங்க ரொம்ப சப்போர்ட் பண்ணுவாங்க. உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கக்கூடிய நல்ல நாள் இது.

அதிர்ஷ்ட நிறம்: ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம் : இரவு 4 மணி இரவு 9மணி

கும்பம்

கும்பம்

உங்களுக்கு நிதி நிலைமை தலைவலியை கொடுக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகளையும் அழுத்தங்களையும் சந்திப்பீங்க. பண விசயத்தில கவனமாக இருங்க. சில பிரசர்கள் வரலாம். வேலையில ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணுவீங்க. உங்க ரொமான்டிக் வாழ்க்கையில சில பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. உங்க உடல் ஆரோக்கியம் சுமாராகத்தான் இருக்கும். ரொம்ப ரெஸ்ட் லெஸ் ஆக ஃபீல் பண்ணுவீங்க

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி இரவு 8.20 மணி

மீனம்

மீனம்

வேலை செய்யிற இடத்தில இன்றைக்கு உங்களுக்கு ரொம்ப சாதகமாக இருக்கும். உங்க வேலைக்கு தகுந்த மாதிரி நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள் ரொம்ப முதலீடு பண்ணாதீங்க. உங்க குடும்ப வாழ்க்கையில பிரச்சினைகள் வரலாம். உங்க ஃபீலிங்க்ஸை வெளிப்படையாக உங்க பார்ட்னர் கிட்ட பேசுங்க. உங்க குடும்ப வாழ்க்கையில சில பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். உங்க அப்பா உடைய உடல்நலத்தில அக்கறை செலுத்துங்க. உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க பொருளாதார நிலமை நல்லா இருக்கும். ரொம்ப செலவு பண்ணாதீங்க. சேர்த்து வைத்த பணத்தை ப்ராடு பைனான்ஸ் கம்பெனியில முதலீடு பண்ணி ஏமாந்து போயிறாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் காலை 3.30 மணி இரவு 8 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, December 4, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion