Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பிசினஸ்ல லாபம் வரும் தெரியுமா?
இன்றைய தினம் ஒவ்வொருவரது ராசி பலன்களைப் பார்க்கும் போது, கிரகங்களின் நிலைகளைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும், யார் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..
இன்றைய தினம் ஒவ்வொருவரது ராசி பலன்களைப் பார்க்கும் போது, கிரகங்களின் நிலைகளைப் பொருத்து மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும், யார் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், யாருக்கு நல்ல நாள், இன்றைக்கு ஏதாவது திடீர் திருப்பங்கள் வருமா என்பன போன்ற கேள்விகளுக்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மத்தவங்க பேசுறது உங்க மனசை பாதிக்கலாம், இருந்தாலும் அதைப்பத்தி கவலைப்படாம உங்க வேலையை மட்டும் பாருங்க. மேரேஜ் லைஃப் ரொம்ப சந்தோஷமா நகரும். உங்க ஒய்ஃப் உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டா இருப்பாங்க. லவ் பண்றவங்க இன்னிக்கு ரொம்பவே சந்தோஷமா இருப்பாங்க. இன்னிக்கு ஃபைனான்ஸ் மேட்டர்ல ரொம்பவே கவனமா இருங்க. ஆக்கப்பூர்வ சிந்தனைங்க மனசுல உருவாகும். ரொம்பவே வெய்ட் போட்டிருக்கீங்க. அதனால, ஹெல்த் கண்டிஷனை கொஞ்சம் கவனிங்க.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

ரிஷபம்
ஆஃபீஸ்ல இன்னிக்கு வேலை மும்மரத்துல இருப்பீங்க. உங்க உழைப்பை பார்த்து உங்க சீனியர் பாராட்டுவாரு. மேரேஜ் லைஃப் ரொம்ப நிம்மதியா நகரும். இன்னிக்கு ரொம்பவே வித்தியாசமான அனுபவம் உங்களுக்கு மேரேஜ் லைஃப்ல கிடைக்கும். லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ரொம்பவே சாதகமான விஷயங்கள் நடக்கலாம். லவ் மேட்டர் சக்ஸஸ் ஆகுறதுக்கு வாய்ப்பிருக்கு. ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும். ரியல் எஸ்டேட் பிசினஷ் பண்றவங்களுக்கு இன்னிக்கு ஜெயிக்க வாய்ப்பிருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கும் இன்னிக்கு பெருசா லாபம் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு பண விஷயத்துல உங்களுக்கு நல்ல செய்தி வர்றதுக்கு சான்ஸ் இருக்கு. எக்ஸ்ட்ரா வருமானம் கிடைக்கலாம். அதனால குடும்பத்தோட வெளியில போயி செலவு பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். ஆஃபீஸ் வேலையில கவனமா இருங்க. யார் எதை சொன்னாலும் கோவப்படாம, உங்க வேலையை மட்டும் பாருங்க. உங்க ஒய்ஃப் கூட ரொம்ப நேரம் இருக்க முடியலையேங்குற கடுப்பு இருந்தாலும், குழந்தைங்க சைடுல இருந்து சந்தோஷமான செய்தி வந்து உங்களை சந்தோஷப்படுத்திடும். பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்
இன்னிக்கு உங்களோட நடவடிக்கைகளே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்திட வாய்ப்பிருக்கு. இதுல ஆஃபீஸ் வேலையும், குடும்ப பிரச்சனைகளும் சேர்ந்துகிட்டு உங்களை பாடா படுத்திடும். அதனால எந்த முடிவெடுக்குறதா இருந்தாலும் நல்லா யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. இல்லேன்னா பின்னாடி வருத்தப்படுவீங்க. மனசுல ஏதாச்சும் கவலை இருந்திச்சின்னா உங்க ஒய்ஃப் கிட்ட உக்காந்து மனசு விட்டு பேசுனா சரியாகிடும். பணவரவும் இன்னிக்கு நல்லா இருக்கும். புதுசா ஃபைனான்சியல் ப்ளான் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 1:00 மணிவரை

சிம்மம்
சமீப காலமா நீங்க எடுக்குற முயற்சிங்க தொடர்ச்சியா ஃபெய்லியர் ஆகுறதுனால ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆயிருக்கீங்க. ஆனாலும் மனசை தளரவிடாம கஷ்டப்பட்டு வேலை செஞ்சீங்கன்னா, நிச்சயமா ஒரு நாள் அதிர்ஷ்ட லட்சுமி உங்க வீட்டுக்கதவை தட்டுவா. மேரேஜ் லைஃப்லயும் சில சிக்கல் உண்டாகலாம். உங்க ஒய்ஃபும் உங்களை கடுப்படிப்பாங்க. அதனால அவங்ககிட்ட நேர்மையா நடந்துக்கோங்க. பணப்பிரச்சனையில இன்னிக்கு கவனமா நடந்துக்கோங்க. கை காசை செலவழிக்கிறதுக்கு முன்னாடி அந்த செலவு தேவையான்னு நிதானமா யோசிச்சி செலவழிக்குறது நல்லது. சாப்பாட்டு விஷயத்துல கவனமா இருங்க, ஹெல்த் கண்டிஷனும் நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் மாலை 6:00 மணிவரை

கன்னி
இன்னிக்கு மேரேஜ் லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போகும். ரெண்டு பேருமே ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க. இருந்தாலும் குடும்பத்துல இருக்குற மத்தவங்க உங்களை கடுப்படிப்பாங்க. இன்னிக்கு மத்தியானத்துக்கு மேல பணவரவு வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. லவ் பண்றவங்க கொஞ்சம் புத்திசாலித்தனமா நடக்க பாருங்க. மத்தவங்க சொல்றதை நம்பி லவ்வரை சந்தேகப்படாதீங்க. அப்புறம் லவ் புட்டுக்கும். ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

துலாம்
இன்னிக்கு பணவரவு அமோகமா இருக்கும். இருந்தாலும் உங்களோட செலவுங்களை ப்ளான் பண்ணி செஞ்சா நஷ்டம் வராம தவிர்க்கலாம். ஆஃபீஸ்ல வேலை ஜாஸ்தியா இருந்தாலும் டென்ஷன் ஆகாம பாருங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு நல்லதா இல்லை. அதனால எதை பேசுறதா இருந்தாலும் கவனமா பேசுங்க. மத்தியானத்துக்கு மேல நல்ல செய்தி வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. டென்ஷனை குறைக்குறதுக்கு யோகா, தியானம் பண்றது நல்லது
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் காலை 8:45 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு நீங்க ரொம்பவே டென்ஷனா இருப்பீங்க. நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு நீங்க எதிர்பாத்த ரிசல்ட் கிடைக்காததுனாலயே ரொம்ப விரக்தி ஆகிடுவீங்க. இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனும் டல்லா தான் இருக்கும். அதனால அனாவசிய செலவுங்களை அவாய்ட் பண்றது நல்லது. எதையும் யோசிக்காம பேசுறதோ செய்யுறதோ நல்லதுக்கில்லை. அதே மாதிரி உங்க விருப்பத்தை குடும்பத்துல இருக்குறவங்க மேல திணிக்காதீங்க. அவங்க இஷ்டத்துக்கு விட்டுடுங்க. அதுதான் உங்களுக்கு நல்லது. இன்னிக்கு ரொம்பவே டென்ஷனா இருக்குறதுனால ஹெல்த் கண்டிஷன் டல்லாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 7
சாதகமான நேரம் : மாலை 5:25 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு
இன்னிக்கு பணவரவு அமோகமா இருக்கலாம். திடீர்னு பல்க்கா பணவரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்கலாம். அதோட உங்க பணப்பிரச்சனையும் தீர்ந்துடும். குழந்தைங்க விஷயத்தை நினைச்சி ரொம்பவே கவலைப்படுவீங்க. இருந்தாலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி நடந்துக்கோங்க. சீக்கிரம் அவங்க உங்களை புரிஞ்சிக்குவாங்க. ஆஃபீஸ்ல வேலை ரொம்ப ஜாஸ்தி இருக்குறதுனால டென்ஷனாவே இருப்பீங்க. இருந்தாலும் கவனமா வேலையை பாக்குறது நல்லது. பிசினஸ் பண்றவங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்குறது நல்லது. மேரேஜ் லைஃப்லயும் சிக்கல் உண்டாக வாய்ப்பிருக்கு. அதனால கவனமா இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு நீங்க ரொம்பவே சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க. மேரேஜ் ஆனவங்க ஒய்ஃப் கூட ரொம்ப சந்தோஷமா வெளியில போய் என்ஜாய் பண்றதுக்கு வாய்ப்பிருக்கும். ஃபைனான்ஸ் பொசிஷன் நார்மலாவே இருக்கும். அதனால பட்ஜெட்டை மனசுல வச்சிக்கிட்டு செலவழிக்கிறது நல்லது. ரொம்ப நாளாவே டென்ஷனா இருந்தீங்கன்னா அது இன்னிக்கு காணாம போயிடும். தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுறதை விட்டுடுங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு நிலைமை இன்னிக்கு சாதகமாவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:30 மணிவரை

கும்பம்
இன்னிக்கு மனசளவுல ரொம்பவே ஸ்ட்ராங்க ஃபீல் பண்ணுவீங்க. ஒய்ஃப் கூட ரொம்பவே அன்பா அந்நியோன்யமா இருப்பீங்க. லவ் ஜோடிங்களுக்கும் இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். இன்னிக்கு ஆஃபீஸ்க்கு சீக்கிரம் கிளம்பி போயிடுங்க. ஆஃபீஸ் வேலை பெண்டிங்க இருந்திச்சின்னா இன்னிக்கு அதை முடிச்சிடுவீங்க. இன்னிக்கு குழந்தைங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்றதுக்கும் வாய்ப்பிருக்கும். ஃபைனான்ஸ் விஷயத்தை பொருத்த வரைக்கும் கவனமா இருந்து ப்ளான் பண்ணினா எதிர்காலத்துக்கு நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:30 மணிவரை

மீனம்
லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அற்புதமான நாளா அமையும். யார் கிட்டயாவது கடன் வாங்கி இருந்தா, அதை இன்னிக்கு திருப்பி கொடுத்திடுவீங்க. கூட்டு சேர்ந்துகிட்டு பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு பார்ட்னர் கிட்ட கொஞ்சம் கவனமா இருக்க பாருங்க. படிக்கிற பசங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். எக்ஸாம்ல பாஸ் பண்றதுக்கு வாய்ப்பிருக்கும். குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும். இன்னிக்கு ஒரு விஐவியை சந்திக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 9:00 மணிவரை



Click it and Unblock the Notifications











