Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க காதுக்கு சந்தோஷ செய்திகள் தேடி வரும்...
இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும் ஏப்ரல் மாதத்தின் இறுதி நாள் இந்த மாதம் எந்த வேலையும் இல்லை. வருமானமும் இல்லை ஒரே செலவுதான். வரப்போகிற நாட்களும் எப்படி இருக்குமோ என்று யோசிக்கிறீர்களா?
இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும் ஏப்ரல் மாதத்தின் இறுதி நாள் இந்த மாதம் எந்த வேலையும் இல்லை. வருமானமும் இல்லை ஒரே செலவுதான். வரப்போகிற நாட்களும் எப்படி இருக்குமோ என்று யோசிக்கிறீர்களா? ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள் யாருக்கெல்லாம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு எந்த வேலையையும் துணிச்சலா செஞ்சி முடிப்பீங்க. அரசு மூலமா எதிர்பாத்த சலுகை கிடைக்கும். கொடுத்த கடனும் இன்னிக்கு வசூலாகும். வீட்டுத் தேவைகளும் பூர்த்தியாகிடும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க வீட்ல சந்தோஷ சம்பவங்கள் நிறைய நடக்கும். இன்றைக்கு உங்களுக்கு காதலான நாள்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் பிற்பகல் 1:30 மணிவரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். சில பேருக்கு உத்தியோகத்துல ப்ரமோஷனும் கிடைக்க வாய்ப்பிருக்கு. அதோட வருமானமும் பெருகிடும். கல்யாண சுபகாரிய முயற்சிங்களுக்கு இன்னிக்கு வெற்றி கிடைக்கும். இன்னிக்கு நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : காலை 8:25 முதல் நண்பகல் 12:55 மணிவரை

மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ பொசிஷன் கொஞ்சம் கம்மி தான். நீங்க பணத்தை எண்ணி செலவு பண்ணுனா உங்களோட ஃபைனான்ஸ் பிரச்சனைங்க வராம தப்பிச்சிடலாம். குடும்பத்துல உள்ளவங்க கிட்ட அநாவசிய பேச்சுக்களை அவாய்ட் பண்ணிட்டா மனஸ்தாபம் வராம தப்பிக்கலாம். பிசினஸ்ல எதிர்பாக்காத பிரச்சனைங்களை சமாளிக்க வேண்டியதிருக்கும். வீட்ல எதற்காகவும் நீங்க வாயே திறக்காதீங்க மாட்டிக்குவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : காலை 10 மணி முதல் பிற்பகல் 01:55 மணிவரை

கடகம்
கடக ராசிக்காரடங்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்து மூலமா உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பிசினஸ்ல கூட்டாளிங்க உங்களை அனுசரிச்சி நடந்துக்குவாங்க. பிசினஸ் சம்பந்தமா எடுக்குற புது முயற்சிங்கள்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். குடும்பத்துல சொந்தக்காரங்க வர்றதுனால வீட்டுல மகிழ்ச்சி தாண்டவமாடும். பணவரத்தும் இன்னிக்கு அமோகமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் நண்பகல் 12:05 மணிவரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு தண்டச் செலவு பண்றதை அவாய்ட் பண்ணுனீங்கன்னா பணப் பிரச்சனை வராம தவிர்த்திடலாம். இல்லேன்னா செலவுக்கு மத்தவங்க கிட்ட கையேந்துற நிலைமை வரும். சொந்தக்காரங்க வழியில உதவி, ஒத்தாசை கிடைக்கும். ஹெல்த் கண்டிஷன் இன்னிக்கு கொஞ்சம் மந்த கதியா தான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 30
சாதகமான நேரம் : நண்பகல் 12:20 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கன்னி
கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிங்களும் நல்லவிதமா முடியும். பெரிய மனுஷங்களை சந்திச்சி பேசுறதுனால மனசுக்கு இதமா இருக்கும். கவர்மெண்ட் மூலமா எதிர்பாத்த ஹெல்ப் கிடைக்கும். வருமானமும கூடும். சொந்தக்காரங்களால சுபச் செலவுங்க வந்துடும். ஹெல்த் கண்டிஷன்ல இருந்த பிரச்சனை இன்னிக்கு சரியாகிடும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : காலை 8:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

துலாம்
துலாம் ராசிக்காரங்களே, இன்னிக்கு வேலையில இருக்குறவங்களுக்கு ப்ரமோஷன் சம்பந்தமா நல்ல செய்தி வரலாம். பிசினஸ்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பண வரத்து அமோகமா இருக்குறதுனால, பேங்க் பேலன்ஸும் கூடும். அதனால மனசுக்கு புது தெம்பு கிடைக்கும். வீட்ல ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் மாலை 4:00 மணிவரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு கொஞ்சம் கோவத்தை குறைச்சிகிட்டு நாக்கை கட்டிப்போடுறது நல்லது. வீட்டுல இருக்குறவங்களை கிட்ட கொஞ்சம் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து போறது நல்லது. பிள்ளைங்க கூட சின்ன சின்ன மனஸ்தாபம் வரலாம். பிசினஸ்ல எதிர்பாக்காத திடீர் செலவுங்க வர வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 10
சாதகமான நேரம் : மாலை 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

தனுசு
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, மத்தவங்க பிரச்சனையில மூக்கை நுழைக்காம ஒதுங்கி இருக்குறது நல்லது. வண்டி வாகனத்துல போகும்போது எச்சரிக்கையா இருங்க. இல்லேன்னா ஒரு ரெண்டு நாளைக்கு வீட்டுலயே முடங்கிக் கிடங்க. வெளியாட்கள் கிட்ட பேசும்போது கவனமா பேசுங்க. செய்யுற வேலையில தடை தாமதம்னு வர வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : மாலை 5:30 முதல் இரவு 9:50 மணிவரை

மகரம்
மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க கடன் சுமை குறையலாம். பிள்ளைங்க மூலமா சந்தோஷம் கொடுக்குற செய்திங்க வரலாம். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். வியாபாரத்தில லாபம் அமோகமா இருக்கும். மொத்தத்துல இன்னிக்கு சந்தோஷமான நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : மாலை 4:20 முதல் இரவு 6:20 மணிவரை

கும்பம்
கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் நல்ல லாபகரமா இருக்கும். வீட்டுக்கு தேவையான புது சாமான்களை வாங்கிடுவீங்க. சொந்தக்காரங்க மூலமா உதவி கிடைக்கும். புது பிசினஸ் தொடங்குற எண்ணம் ஈடேறும். உங்களுக்கு சந்தோஷம் கொடுக்கக்கூடிய நல்ல செய்தி உங்க காதுக்கு வரும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு ரொம்ப அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : காலை 8:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

மீனம்
மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு குலதெய்வத்தை கும்பிட்டா எல்லா பிரச்சனைங்களும் முடிவுக்கு வந்துடும். பிசினஸ்ல லாபம் சுமார் தான். கடன் பிரச்சனைங்களுக்கு இன்னிக்கு விடிவு காலம் பிறக்கும். குடும்பத்துல சின்னச்சின்னதா சண்டை சச்சரவு வரலாம். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:30 மணிவரை



Click it and Unblock the Notifications