Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகுது...
எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சந்தோஷமாக இருக்கும் சில நாட்கள் சோகத்தை கொடுக்கும். இந்த நாள் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? பணம் வருமா? இந்த மாத சம்பளம் அக்கவுண்ட்ல கிரெ
எல்லா நாட்களும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நாட்கள் சந்தோஷமாக இருக்கும் சில நாட்கள் சோகத்தை கொடுக்கும். இந்த நாள் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? பணம் வருமா? இந்த மாத சம்பளம் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகுமா? விரைய செலவு வருமா என்று யோசிக்கிறீர்களா? இன்றைய ராசி பலனை படிங்க உங்களுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

மேஷம்
மேஷ ராசிக்காரங்களே, பண வரவை விட செலவு அதிகமாக வரும். பிள்ளைங்களால விரைய செலவுங்க ஏற்பட வாய்ப்பிருக்கு. அதனால குடும்பத்துலயும் தேவையில்லாத மனஸ்தாபம் வந்துடும். ப்ளான் பண்ணி செலவு செய்தால் பணத்தை மிச்சப்படுத்தலாம். பிசினஸ்ல கூட்டாளிங்களை கொஞ்சம் அனுசரிச்சி போனா, வியாபாரத்தில லாபம் அதிகமாக வரும்.
ராசியான நிறம் : சிவப்பு
ராசியான எண் : 9
ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு குடும்பத்துல நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போறது நல்லது. கணவன் மனைவிக்குள்ளாற சின்னச் சின்னதா மனஸ்தாபங்கள் வந்து போகும். இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனும் கொஞ்சம் சுமார் தான். வேலைச்சுமையும் அதிகமாக இருக்கும். இன்னைக்கு சுமாரான நாள்தான
ராசியான நிறம் : ரோஸ்
ராசியான எண் : 6
ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல புதுசா கூட்டாளிங்க வந்து ஜாய்ன் பண்ணிக்குவாங்க. உத்தியோகத்துல இருந்து வந்த மறைமுக எதிரிங்களோட தொல்லை கொஞ்சம் குறைய வாயப்பிருக்கு. திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். குடும்பத்துல பெரியவங்களோட மனசுல இடம் பிடிப்பீங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்.
ராசியான நிறம் : இளம் பச்சை
ராசியான எண் : 5
ராசியான நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்க மூலமா உங்களுக்கு உதவி கிடைச்சிடும். சொந்தக்காரங்களும் கூட உங்களோட வளர்ச்சிக்கு நல்ல பக்க பலமா இருப்பாங்க. பிசினஸ்ல போட்டி, நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்குற சூழ்நிலை ஏற்படலாம். எச்சரிக்கையா இருங்க. இன்னிக்கு உங்களுக்கு வரவை விட செலவுங்க ஜாஸ்தியா இருந்தாலும், கடன் பிரச்சனைங்க ஓரளவுக்கு கம்மியாகிடும்.
ராசியான நிறம் : இளம் மஞ்சள்
ராசியான எண் : 2
ராசியான நேரம் : மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ் வளர்ச்சிக்காக நீங்க எடுக்குற எல்லா முயற்சிங்களுக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். புதுசா நகை நட்டுன்னு வாங்குறதுக்கும் யோகம் இருக்கு. பெண்கள் தங்களோட பொறுப்பை புரிஞ்சி நடந்துக்குறதுனால, குடும்பத்துல ஒத்துமையும் சந்தோஷமும் கூடிடும். இன்னிக்கு மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற இனிப்பான செய்திங்க உங்க காதுக்கு வந்துடும்.
ராசியான நிறம் : பச்சை
ராசியான எண் : 7
ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க ஒத்தாசையால உங்களுக்கு இருந்த கடன் பிரச்சனை ஓரளவுக்கு கம்மியாகிடும். பிசினஸ்ல கூட்டாளிங்க ஒத்துமையா இருந்து வியாபாரம் செஞ்சா எதிர்பாத்த லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கு. பிள்ளைங்க படிப்பு விஷயத்துல கொஞ்சம் மந்தமா தான் இருப்பாங்க. எதிர்பாத்த உதவி கிடைக்குறதுல தடங்கள் வரலாம். வீட்டுலயும் திடீர் செலவுங்க வந்து கண்ணை கட்டும்.
ராசியான நிறம் : பச்சை
ராசியான எண் : 7
ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

துலாம்
துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு சுப காரிய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பிசினஸ்ல வேலையாட்கள் பொறுப்பா நடந்துகிட்ட வியாபாரம் பெருகி நினைச்ச லாபம் கிடைக்கும். குடும்பத்துல மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற மாதிரியான சம்பவங்கள் நடந்துடும். உத்தியோகத்துல சில பேருக்கு எதிர்பாத்த வெளியூர் ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கலாம். யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. ஹெல்த் கண்டிஷன் இன்னிக்கு அற்புதமா இருக்கும்.
ராசியான நிறம் : பிங்க்
ராசியான எண் : 6
ராசியான நேரம் : காலை 8 மணி முதல் காலை 11 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு பெரிய மனுஷங்களோட சப்போர்ட் உங்களுக்கு கிடைச்சிடும். ரொம்ப நாளா இழுபறியா இருந்த கடன் பாக்கியும் வசூலாகும். சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துல சந்தோஷம் கூடிடும். வேலை விஷயமா வெளியூர் போற ப்ளானை கொஞ்ச நாளைக்கு ஒத்திப்போடுறது நல்லது. புதுசா பிசினஸ் ஆரம்பிக்குற முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
ராசியான நிறம் : சிவப்பு
ராசியான எண் : 9
ராசியான நேரம் : காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு எதிர்பாத்துட்டு இருந்த உதவி, ஒத்தாசை கிடைக்கும். பெரிய மனுஷங்களோட சப்போர்ட்டும் கிடைக்கும். பிசினஸ்ல வேலையாட்களை கொஞ்சம் அனுசரிச்சி தன்மையா நடந்துகிட்டா பெரிய பிரச்சனைங்க வராம அவாய்ட் பண்ணலாம். இன்னிக்கு பிள்ளைங்களால மன உளைச்சல் உண்டாகலாம். அதனால குடும்பத்துலயும் நிம்மதியில்லாத சூழ்நிலை ஏற்படும்.
ராசியான நிறம் : மஞ்சள்
ராசியான எண் : 3
ராசியான நேரம் : இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, சாப்பாட்டு விஷயத்துல வாயை கட்டிப்போடுறது நல்லது. வண்டி வாகனத்துல வெளிய போகும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்தோட இருக்குறது நல்லது. இன்னிக்கு உங்களோட உழைப்புக்கேத்த பலன் கிடைக்குறது தாமதம் உண்டாகும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு கொஞ்சம் மந்தமா தான் இருக்கும். கவனமாக இருங்க சத்தானதா சாப்பிடுங்க.
ராசியான நிறம் : நீலம்
ராசியான எண் : 8
ராசியான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிடுவீங்க. குடும்பம் உங்களுக்கு குதூகலமாக இருக்கும். பிசினஸ்லயும் லாபம் அமோகமா இருக்கும். உத்தியோகத்துலயும் உழைப்புக்கேத்த இன்க்ரிமெண்ட், ப்ரமோஷன் கிடைக்குறதுக்கு அருமையான வாய்ப்பு இருக்கு. இன்னிக்கு எந்த ஒரு வேலையையும் ரொம்ப தைரியமா வெற்றிகரமா செஞ்சி முடிப்பீங்க.
ராசியான நிறம் : வயலட்
ராசியான எண் : 17
ராசியான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா வெளி வட்டாரத்துல இருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் கிட்ட வீடியோ கால் பண்ணி பேசுறதுனால மனசுக்கு இதமா இருக்கும். புது சாமான்களை வாங்குறதுல ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. சுபகாரிய முயற்சிகள்ல இருந்து வந்த பிரச்சனைங்க காணாமா போயிடும். இன்னிக்கு உங்களோட ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
ராசியான நிறம் : இளம் மஞ்சள்
ராசியான எண் : 12
ராசியான நேரம் : காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை



Click it and Unblock the Notifications