Latest Updates
-
சந்திரன் மகர ராசிக்குள் நுழைவதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்தும், கஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
பெங்களூர் ஸ்டைல் இட்லி சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
சனிபகவான் மீன ராசியில் வக்ரமடைவதால் இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையாகப் போறாங்களாம் -
1/2 கப் கடலைப்பருப்பும், கீரையும் இருந்தா ஈவ்னிங் டைம் இந்த ஸ்னாக்கை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1000 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் எரியும் இந்தியாவின் மர்மமான கோவில் தீபம் - எந்த ஊரில் இருக்கு தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம்
இந்த 4 ராசிக்காரங்க வீட்ல இன்னைக்கு ஒரே ரொமான்ஸ் மழைதான்...
கொரோனா வைரஸ் பரவல் பீதியை கிளப்பினாலும் தென்மேற்கு பருவமழை பலரது மனதை குளிர்விக்கிறது. இதே போல பலர் வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருந்தாலும் சிலர் வீட்டில் சாரலாக ரொமான்ஸ் மழை பொழியும்.
கொரோனா வைரஸ் பரவல் பீதியை கிளப்பினாலும் தென்மேற்கு பருவமழை பலரது மனதை குளிர்விக்கிறது. இதே போல பலர் வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருந்தாலும் சிலர் வீட்டில் சாரலாக ரொமான்ஸ் மழை பொழியும். எந்த ராசிக்காரர்கள் வீட்டில் காதல் மழை பொழியப்போகிறது என்று இன்றைய ராசிபலனை படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன் எப்படி என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் அதிகரிக்கும் காதல் மழைதான். பிசினஸ்ல பெரிய மனுஷங்களோட அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். கடன்களும் பெருமளவு குறையும். பெத்தவங்களோட ஆசீர்வாதம் கிடைக்கும். உத்தியோகத்துல சிலருக்கு ப்ரமோஷன் கிடைக்கும். கல்யாணம், சுபகாரிய முயற்சியில நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். திடீர்னு வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். மனசளவுல நிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 35
சாதகமான நேரம் : விடிகாலை 5:05 முதல் பிற்பகல் 3:40 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு திடீர் பண வரத்து இருக்கும். சொந்தக்காரங்களால உண்டான பிரச்சனை இன்னிக்கு சரியாகிடும். ஆடம்பரமான பொருட்கள் வாங்கணும்கிற ஆசை நிறைவேறிடும். பிசினஸ் ரீதியா வெளியூர் போறதுனால ஆதாயம் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்களோட ஐடியாவால உங்க பிரச்சனை தீரும். உத்தியோகத்துல தெம்பா, சுறுசுறுப்பா வேலையை பாப்பீங்க. உங்க வீட்ல சின்ன சின்ன ஊடல் வந்தாலும் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சாரல் மழை போல ரொமான்ஸ் தெறிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு புதுசா பிசினஸ் தொடங்குற முயற்சியில உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைங்களோட ஹெல்த கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. சுபகாரிய முயற்சியில கொஞ்சம் இழுபறி நிலை தான் நீடிக்கும். பண வரத்து மந்தமா இருக்கும்கிறதுனால, ஆடம்பர செலவுகளை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிட்டா பணப்பிரச்சனை வராது. ஹெல்த் கண்டிஷன்லயும் சின்னதா பாதிப்பு வர வாய்ப்பிருக்கு. அதனால ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : காலை 7:30 முதல் நண்பகல் 2:00 மணிவரை

கடகம்
இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களோட ஐடியாவுனால வியாபாரம் பெருகி எதிர்பாத்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்களால வீண் பிரச்சனைகள் தலை தூக்க வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருக்குறது நல்லது. குடும்பத்துலயும் தண்டச்செலவுகள் வந்துடும். சுபகாரிய முயற்சியில தடங்கல் ஏற்படலாம் கவனமாக இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 3
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 11:05 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு பண வரத்து அதிகமா இருக்கும்கிறதுனால, கடன் சுமையும் கொஞ்சம் குறையும். கூடவே பேங்க் பேலன்ஸும் கூடும். உத்தியோகத்துல பொறுப்போட நடந்துக்கிட்ட உங்க மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டுல சுபகாரியங்கள் நடக்குறதுக்கான அறிகுறி தென்படும். சொந்தக்காரங்க வர்றதுனால குடும்பத்துலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். செலவுகளும் கண்ட்ரோல்ல இருக்கும். செய்யிற முயற்சியில வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் இரவு 9:00 மணிவரை

கன்னி
இன்னிக்கு நீங்க செய்ய நினைச்ச வேலையை வெற்றிகரமா செஞ்சி முடிப்பீங்க. மனைவி வழி சொந்தக்காரங்க மூலம் உதவி, ஒத்தாசை கிடைக்கும். பிள்ளைங்க மூலமா பெருமை வந்து சேரும். பிசினஸ்லயும் நல்ல முன்னேற்றம் வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு அதுக்கு வேலையாட்களும் சப்போர்ட்டா இருப்பாங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 8:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு கல்யாணம், சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக நடக்கும். வருமானம் ஏகத்துக்கு வர்றதுனால பேங்க் பேலன்ஸும் கூடும். உத்தியோகத்துல புது பொறுப்பு உங்களை தேடி வரும். பயன்படுத்திக்கோங்க. பிசினஸ்ல வியாபாரம் பெருகி, உங்களோட செல்வாக்கும் மதிப்பும் கூடும். குடும்பத்துல பெத்தவங்களோட சப்போர்ட் கிடைக்கும். பண வரத்தும் இன்னிக்கு தாராளமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : காலை 10:10 முதல் நண்பகல் 3:15 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல கொஞ்சம் எச்சரிக்கையோட பேசி பழகுறது நல்லது. வாய் வார்த்தையை விட்டா அப்புறம் உங்களுக்கு தான் சேதாரம் அதிகமா இருக்கும். கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. உத்தியோத்துல கூட வேலை பாக்குறவங்களால தேவையில்லாத வீண் பிரச்சனை உருவாகலாம். எச்சரிக்கையோட இருங்க. பண வரத்து இருந்தாலும் கூடவே அதுக்கேத்த மாதிரி செலவும் வந்துடும். சுபகாரிய முயற்சியில இழுபறி நிலை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 8
சாதகமான நேரம் : விடிகாலை 4:50 முதல் நண்பகல் 12:05 மணிவரை

தனுசு
இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த போட்டி பொறாமை குறையும். வியாபாரமும் பெருகும். பழைய ஃப்ரண்ட்ஸுங்களை மீட் பண்ணி பழைய நினைவுகளை அசை போட்டுக்குறதுனால மனசும் ரிலாக்ஸ் ஆகிடும். ஆடம்பர பொருட்களை வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். குடும்பத்துல பிள்ளைங்களால மகிழ்ச்சியும் பெருமையும் வந்து சேரும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப அற்புதமா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 5:20 முதல் இரவு 9:30 மணிவரை

மகரம்
இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க கூட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். அதோட உங்களோட மதிப்பும் மரியாதையும் கூடும். படிக்குற பசங்க தன்னோட திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். கூடப்பொறந்தவங்க மூலமா நல்ல செய்திகள் உங்க காதுக்கு வரும். இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்பவே சிறப்பா இருக்கும். உங்க பேச்சுலயும் தன்னம்பிக்கை வெளிப்படும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : காலை 7:45 முதல் மாலை 4:30 மணிவரை

கும்பம்
இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க உங்களை அனுசரிச்சி நடந்துக்குவாங்க. மதியத்துக்கு மேல நீங்க எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்கும். அதனால மனசு சந்தோஷத்துல துள்ளி குதிக்கும். குடும்பத்துல உள்ளவங்க கிட்ட தேவையில்லாததை பேசி சங்கடப்படுத்தாதீங்க. இன்னிக்கு பண வரத்து சுமாரா இருந்தாலும், பிள்ளைங்களால விரைய செலவுகள் வரும். இன்னிக்கு உங்க மனசு நிலையில்லாம அல்லாடும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 10:00 மணிவரை

மீனம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, தேவையில்லாத வார்த்தைகளை பேசுறதை அவாய்ட் பண்ணிடுங்க. வெளியில இருந்து வரவேண்டிய பாக்கித் தொகை வர்றதுல இழுபறி நிலை நீடிக்கும். மதியத்துக்கு மேல பணம் கொடுக்கல் வாங்கல்ல ரொம்பவே எச்சரிக்கையோட நடந்துக்கோங்க. சொந்தக்காரங்க கூட பேசும்போது ஜாக்கிரதையா பேசி பழகுறது நல்லது. பேசாம இன்னிக்கு மவுன விரதம் இருக்குறது நல்ல பலன் கொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 1
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் மாலை 6:00 மணிவரை



Click it and Unblock the Notifications