Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சுக்கிர திசை இன்னைக்கு யாருக்கு அடிக்கப் போகுது தெரியுமா?
வெள்ளிக்கிழமை இன்றைக்கு சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் சிலருக்கு சுக்கிரன் தரும் யோகத்தால் வருமானம் அபரிமிதமாக வரும், சிலருக்கு செலவுகள்தான் வரும். சிலரது வீட்டில் ரொமான்ஸ் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை இன்றைக்கு சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில் சிலருக்கு சுக்கிரன் தரும் யோகத்தால் வருமானம் அபரிமிதமாக வரும், சிலருக்கு செலவுகள்தான் வரும். சிலரது வீட்டில் ரொமான்ஸ் அதிகரிக்கும். காதலோடு இந்த நாளை கடத்துவார்கள். இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று ராசி பலனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசி அன்பர்களே, இன்னிக்கு பணம் கொடுக்கல் வாங்கல்ல நன்மைகள் நடந்துடும். நீங்க நினைச்ச காரியம் நல்லவிதமா முடியும். பிசினஸ்ல வியாபாரம் பெருகி லாபம் கிடைக்கும். பிள்ளைங்களால உங்களுக்கு பெருமை வந்து சேரும். வீட்டுலயும் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந்து மனசுக்கு உற்சாகத்தை கொடுத்துடும். மொத்தத்துல இன்னிக்கு நீங்க நினச்சது நடந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம் : மாலை 1.30 மணி முதல் இரவு 8.05 மணி

ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே, இன்னிக்கு கல்யாண்ம், சுபகாரிய முயற்சிகள்ல நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு வீட்டுல வேலைச்சுமை குறையும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கூடுதல் அக்கறை காட்டுறது நல்லது. மனசளவுல ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க. அதனால எந்த வேலையையும் ரொம்ப ஈடுபாட்டோட செய்வீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.05 மணி முதல் 6.15 மணிவரை

மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே, இன்னிக்கு வேலை செய்யுற இடத்துல கூடுதல் கவனத்தோட நடந்துக்கணும். கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. கூடப்பொறந்தவங்களோட உதவி கிடைக்கும். வீட்டுலயும் திடீர் செலவு வந்துடும். ஹெல்த் கண்டிஷன் ரொம்பவே மந்தமா தான் இருக்கும். வீட்ல ரொம்ப ரொமான்டிக்கான சம்பவங்கள் நடக்கும். காதல் உணர்வுகளோட இன்னைக்கு கடந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 19
அதிர்ஷ்ட நேரம் : மாலை 5.20 மணி இரவு 11 மணி

கடகம்
கடக ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல புதுசா மாற்றங்களை செஞ்சி வியாபாரத்தை பெருக்கி லாபம் சம்பாதிப்பீங்க. கூடப்பொறந்தவங்களோட ஒத்தாசை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீங்க. லவ் பண்றவங்களுக்கு நடுவுல ரொமான்ஸ் நினைப்பு வந்துடும். கணவன் மனைவிக்கு மத்தியில அந்நியோன்யம் கூடும். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : காலை 8.30 மணி இரவு 7 மணி

சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே, இன்னிக்கு முதலீடு செய்யுற விசயத்துல கொஞ்சம் எச்சரிக்கையா நடந்துக்குறது நல்லது. பிள்ளைங்க மூலமா சுபச் செலவுகள் வந்துடும். உத்தியோகத்துலு கூட வேலை செய்யுறவங்களால உங்களுக்கு நன்மைகள் நடந்துடும். கணவன் மனைவிக்கு நடுவுல சொந்தக்காரங்க மூலமா வீண் பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையா இருங்க. தண்டச்செலவுகளால பேங்க் பேலன்ஸ் குறையலாம்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி மாலை 4.20 மணி

கன்னி
கன்னி ராசி அன்பர்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடும். பிள்ளைங்களால மனசுல சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும். பணத்தை ரொம்ப சிக்கனமா செலவு பண்ண பாருங்க. முக்கியமான வி.ஐ.பி.க்களோட அறிமுகம் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்களால நல்லது நடக்கும். குடும்பத்துலயும் ஒத்துமை கூடும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 45
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி இரவு 10.10

துலாம்
துலா ராசி அன்பர்களே, இன்னிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. பிசினஸ்ல அனுபவசாலிங்களோட ஆலோசனைகளை கேட்டு அதுப்படி நடந்துக்கிட்டா லாபம் பெருகும். ரொம்ப நாளா இழுபறியா இருந்த பணமும் இன்னிக்கு வந்து சேரும். பணவரத்தும் அதிகமா இருக்கும். அதோட கூடவே சுபச்செலவுகளும் வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ நிறம்
அதிர்ஷ்ட எண் : 38
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.15 மணி இரவு 7.20 மணி

விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே, இன்னிக்கு மனைவி வழி சொந்தக்காரங்க மூலமா நன்மைகள் நடந்துடும். பிசினஸ்லயும் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். உத்தியோகத்துல வேலைச்சுமை அதிகரிக்கும். கஷ்டப்பட்டு உழைச்சா தான் அதுக்கேத்த பலன் கிடைக்கும். எதற்கெடுத்தாலும் சண்டைக்கு நிற்காதீங்க. நிதானமாக பொறுமையாக பேசுங்க எந்த பிரச்சினையும் வராது.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 45
அதிர்ஷ்ட நேரம் : காலை 9 மணி இரவு 8.20 மணி

தனுசு
தனுசு ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல ரொம்பவே சுறுசுறுப்பா இறங்கிடுவீங்க. வயறு பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு. அதனால காரமான பதார்த்தங்களை சாப்பிடாதீங்க. அப்பாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. சுப காரிய பேச்சுவார்த்தையை தள்ளி வைக்குறது நல்லது. கடந்த ரெண்டு நாளா இருந்து மன உளைச்சல் சரியாகி, இன்னிக்கு மனசுல உற்சாகம் கொப்பளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 32
அதிர்ஷ்ட நேரம் : மாலை 3.30 மணி இரவு 8 மணி

மகரம்
மகர ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, செய்யுற வேலையில தடை, தாமதம், இடைஞ்சல்னு வரலாம். கவனமா இருக்க பாருங்க. குடும்ப உறுப்பினர்கள் கிட்ட பேசும்போது கொஞ்சம் பக்குவமா பேசி பழகுறது நல்லது. இல்லாட்டி தேவையில்லாத வாக்குவாதம் வந்து மனசங்கடப்பட நேரும். வண்டி வாகனத்துல போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம் : இரவு 4 மணி இரவு 9மணி

கும்பம்
கும்ப ராசி அன்பர்களே. இன்னிக்கு பிசினஸ் விஷயமா வெளியூர் பிரயாணம் போறனால நல்லது நடந்துடும். பெத்தவங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடும். பிள்ளைங்களாலயும் சந்தோஷம் கூடிடும். இன்னிக்கு மனசளவுல உற்சாகம் பீறிடும்.சுக்கிரன் தரும் யோகத்தாலே பண மழை இன்னைக்கு உங்களுக்கு கொட்டப்போகுது.
அதிர்ஷ்ட நிறம்: க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நேரம் காலை 6.30 மணி மாலை 4.00 மணி

மீனம்
மீன ராசி அன்பர்களே, இன்னிக்கு சுபகாரியம் சம்பந்தமா குடும்பத்தோட வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்து பத்துனால உங்களுக்கு லாபம் கிடைக்கும். பிசினஸ் ரீதியா ஃப்ரண்ட்ஸுங்க கூட இருந்து வந்த மனஸ்தாபங்கள் இன்னிக்கு மறையும். பண வரத்தும் இன்னிக்கு அமோகமா இருக்கும். இருந்தாலும், ஹெல்த் கண்டிஷன் உங்க மனசை பாதிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் காலை 3.30 மணி இரவு 8 மணி



Click it and Unblock the Notifications











