For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (29.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் நிறைய அவஸ்தைப்பட போறாங்க…

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஏப்ரல் 29 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வேலை முன்னணியில் ஒரு முக்கியமான முடிவை எடுக்கப் போகிறீர்கள் என்றால், மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறீர்கள். அதீத நம்பிக்கையுடன் எந்த தவறான முடிவையும் எடுக்க வேண்டாம். வர்த்தகர்கள் புதிய பங்குகளை வாங்க இன்று நல்ல நாள். இன்று, நீங்கள் மருந்துகளை கையாளும் போது, கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று பண வரவு நன்றாக இருக்கும். நெருங்கிய ஒருவரிடமிருந்து நிதி உதவி பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வீட்டு பெரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் போட்டி தேர்விற்கு தயாராகி வரும் மாணவராக இருந்தால், இன்று கடினமாக உழைக்க வேண்டும். சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று வணிகர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். ஆனால், பணத்தின் அடிப்படையில் இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். கூட்டு வர்த்தகம் செய்வோர் தங்கள் கூட்டாளருடனான உறவை மேம்படுத்த வேண்டும். விவாதம் உங்களுக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும். பரபரப்பான நாளில் உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைச்சுமை இருக்கும். குறிப்பாக வங்கித் துறையுடன் தொடர்புடையோர் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், வாழ்க்கைத் துணையுடனான சிறந்த பரஸ்பர புரிதலால் பெரிய பிரச்சனை இருக்காது. இன்று வாகனம் ஓட்டும்போது அவசரப்படுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:05 மணி முதல் மாலை 6:45 மணி வரை

மிதுனம்

மிதுனம்

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த பலன் கிடைக்கும். அலட்சியம் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது நிலுவை பணிகளின் பட்டியலை அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகர்கள் இன்று நல்ல பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். மேலும், இன்று அவசரப்படுவதைத் தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவு இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று உங்கள் துணைக்கு அதிக நேரம் ஒதுக்க முடியும். திருமண வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்திருக்கும். உடல்நலம் பற்றி பேசும்போது, திடீரென நாள்பட்ட வலியால் அவதியுறலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:15 மணி வரை

கடகம்

கடகம்

அலுவலக வேலையை வீட்டிற்கு எடுத்து வராமல் இருப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் அது இன்று சிக்கலை உருவாக்கலாம். வணிகர்கள் பொருளாதார நிலை பாதகமாக இருக்கக்கூடும். இந்த இழப்பை விரைவில் ஈடுசெய்திடலாம். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருக்கும். குடும்ப உறுப்பினருடன் பேசும்போது, கோபத்தைக் கட்டுப்படுத்தவும். இன்று வாழ்க்கைத் துணையின் ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். விவாதங்களினால் ஏற்படும் சண்டை உங்களிடையே கசப்பை உருவாக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். இன்று பெரிய செலவு செய்ய நினைத்தால் அதை தவிர்க்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் சாத்தியமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 41

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்று ரியல் எஸ்டேட்டில் பணிபுரிவோருக்கு மிக முக்கியமான நாளாக ருக்கப்போகிறது. லாபம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பைப் பெறலாம். அலுவலகத்தில் முதலாளியின் சொற்களை புறக்கணிக்கும் தவறை செய்யாதீர்கள். சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றினால் நன்மை கிடைக்கும். பணத்தைப் பொறுத்தவரை இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். வீட்டு செலவுகள் அதிகரிக்கக்கூடும். வீட்டு உறுப்பினர் ஒருவரின் ஆரோக்கியத்தில் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று மிகவும் சோர்வாகவும் சிக்கலாகவும் உணர முடியும். உங்களுக்காக பரபரப்பான வழக்கத்திலிருந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க ஒதுக்குவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கன்னி

கன்னி

வாழ்க்கைத் துணையுடனான மோசமான உறவு சரிசெய்ய இன்று முயற்சிக்கவும். தேவையற்ற பேச்சு உங்கள் உறவில் கசப்பை ஏற்படுத்தக்கூடும். இது உங்கள் குழந்தைகளுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். இன்று உங்கள் முதலாளியும் மிகவும் புகழ்வார். இருப்பினும், பொறாமை கொண்ட சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். வணிகர்கள் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பைப் பெறலாம். உங்கள் வணிகம் வளர வாய்ப்புள்ளது. நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். இன்று உங்களுக்காக சில பொருட்களை வாங்கலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அதிகப்படியான கோபத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 11:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை

துலாம்

துலாம்

இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருக்கலாம். சிறிதும் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. வேலை என்று வரும்போது, உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்கவும். அலுவலக நேரத்தில் மட்டும் வேலையை செய்ய முயற்சிக்கவும். வியாபாரிகள் இன்று பெரிய பொருளாதார பரிவர்த்தனைகள் எதுவும் செய்யாவிட்டால் நல்லது. தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோருக்கு எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் அன்பு மற்றும் ஆதரவால் உங்கள் மன உறுதி அதிகரிக்கும். பணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும். நேரம் வரும்போது உங்கள் பிரச்சனை நிச்சயமாக தீர்க்கப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 3:15 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் வணிகத்தை மேலும் மேம்படுத்துவது குறித்து இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். சில பெரிய வாடிக்கையாளர்களின் தொடர்பு கிடைக்கலாம். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளைப் பெறலாம். சிறந்ததை வழங்க முயற்சிக்கவும். பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்லதாக இருக்காது. இன்று கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் கடுமையான அணுகுமுறை சில உறுப்பினர்களை புண்படுத்தக்கூடும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். வேலையுடன் சேர்த்து குடும்பத்திற்கும் சம அளவு முக்கியம் தர வேண்டும். ஆரோக்கியமாக இருக்க தினமும் நல்ல உணவு, உடற்பயிற்சி செய்ய வேண்டும். தூய்மைக்கும் முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் மாலை 6:20 மணி வரை

தனுசு

தனுசு

வணிகர்களின் பொருளாதார பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு காண முடியும். நீங்கள் ஒரு சிறிய முதலீடு செய்ய விரும்பினால், இன்று அதற்கு சாதகமானது. திடீரென்று அலுவலகத்தில் ஒரு முக்கியமான கூட்டம் நடைபெறலாம். எனவே, முன்கூட்டியே சிறப்பாக தயாராகவும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சிப்பவர்கள், தங்கள் முயற்சியை துரிதப்படுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையின் இயல்பில் கடுமை மற்றும் எரிச்சல் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு சர்ச்சைக்குரிய பிரச்சனையை பற்றியும் அவர்களுடன் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வீட்டின் அமைதி பாதிக்கப்படலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள், இன்று அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் 9:30 மணி வரை

மகரம்

மகரம்

வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள், இன்று தங்கள் வேலையில் கொஞ்சம் அலட்சியமாக இருக்க வேண்டாம். மிகச்சிறிய பணியைக் கூட கவனமாக சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். தவறு செய்தால், உங்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான பொறுப்பு திரும்பப் பெறப்படலாம். ரியல் எஸ்டேட்டில் பணிபுரிவோருக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு பெரிய நிதி இழப்பு ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, வீட்டுச் சூழலில் முன்னேற்றம் காண்பீர்கள். வீட்டிலுள்ள பெரியவர்களுடன் முக்கியமான கலந்துரையாடலை நிகழ்த்தலாம். நிதி நிலை பற்றிப் பேசும்போது, உடன்பிறப்பிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று கலக்க வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கும்பம்

கும்பம்

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் உதவியுடன், பணிகள் அனைத்தும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். உங்கள் கடின உழைப்பால் உயர் அதிகாரிகளின் மனதை வெல்வதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பணி உணவகம் தொடர்புடையதாக இருந்தால், சுகாதாரத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளவும். இல்லையெனில், நிதி இழப்புகள் ஏற்படக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இன்று அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். வாழ்க்கை துணையுடன் சிறந்த புரிதல் இருக்கும். உங்கள் உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று மிகவும் புத்துணர்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

மீனம்

மீனம்

வீட்டின் சூழல் இன்று நன்றாக இருக்காது. சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்களை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் பிரச்சனை கணிசமாக அதிகரிக்கக்கூடும். வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிவோர் இன்று சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியும். எனவே, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் வேலைக்கே ஆபத்து ஏற்படலாம். பங்குச் சந்தையில் பணிபுரிவோர் நிதி ரீதியாக பயனடையலாம். நிதி நிலைமையைப் பற்றிப் பேசினால், நிதி அடிப்படையில் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். விரைவான லாபம் ஈட்ட, எந்த குறுக்குவழிகளை பின்பற்றுவதைவும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பெரிய சிக்கலில் சிக்கக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்ப்பதோடு, முகக்கவசங்களை முறையாக பயன்படுத்துங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 37

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:25 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 29th April 2021 Thursday In Tamil

Check out the daily horoscope for 29th april 2021 thursday in tamil. Read on.
Story first published: Thursday, April 29, 2021, 5:00 [IST]