இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வீட்டை விட்டு வெளியே வரவே வராதீங்க...

இன்றைய தினம் நமக்கு பணம் வருமா? இல்லை செலவு வருமா? ஆரோக்கியம் எப்படி இருக்கும். திடீர்னு நோய் வருமோ என்று பயப்படுகிறீர்களா? இன்றைக்கு உங்களுடைய கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்களை படிங்க விடை தெரியும்.

இன்றைய தினம் நமக்கு பணம் வருமா? இல்லை செலவு வருமா? ஆரோக்கியம் எப்படி இருக்கும். திடீர்னு நோய் வருமோ என்று பயப்படுகிறீர்களா? இன்றைக்கு உங்களுடைய கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்களை படிங்க விடை தெரியும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களுக்கு கூடப்பொறந்தவங்க பக்க பலமா இருப்பாங்க. சுபகாரிய பேச்சுவார்த்தைங்க நல்லவிதமா முடியும். கஷ்டமான வேலையை கூட ரொம்ப சுலபமா செஞ்சி முடிக்குற தைரியம், தன்னம்பிக்கை, எனர்ஜி உங்களுக்கு கிடைக்கும். அதனால செய்யுற வேலையை ஆத்ம திருப்தியோட செய்வீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம் : காலை 4.15 மணி மாலை 5 மணி

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க கூட பேசி பழகுறதுனால மனசுக்கு ஆறுதலாவும் சந்தோஷமாவும் இருக்கும். இன்னிக்கு குடும்பத்துல பிள்ளைங்க மூலமா சுபச் செலவுங்க வந்துடும். இருந்தாலும் பண வரத்து அதிகமா இருக்கும்கிறதுனால, கொஞ்சம் சேமிக்கவும் வழி பிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட நம்பர் 22

அதிர்ஷ்ட நேரம் : காலை 6.15 மணி பிற்பகல் 1.40 மணி

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்க உங்களுக்கு உதவி, ஒத்தாசை பண்ணுவாங்க. வண்டி வாகனத்துல போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையோட போறது நல்லது. இல்லேன்னா பேசாம வீட்டுலயே இருக்க பாருங்க. இன்னிக்கு பணவரத்து கொஞ்சம் சுமாராதான் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.30 மணி மாலை 6 மணி

கடகம்

கடகம்

கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் கிடைக்க வாய்ப்பிருக்கு. இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்துல நல்லா யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. வீட்டுக்கு தேவையான புது சாமான்களை வாங்குவீங்க. குடும்பத்துலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும். ரொம்ப நாளா எதிர்பாத்த ஒரு நல்ல காரியம் சுலபமா முடியும். பண வரத்து இன்னிக்கு ஓரளவு வரும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 20

அதிர்ஷ்ட நேரம் : காலை 10.35 மணி இரவு 7 மணி

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல வேலைப்பளு கொஞ்சம் கூடுதலா இருக்கலாம். பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். சொந்தக்காரங்க கூட தேவையில்லாத மனக்கசப்புங்க வர்றதுக்கு வாயப்பிருக்கு. விட்டுக்கொடுத்து போறது நல்லது. இன்னிக்கு எதிர்பாக்காத பணவரத்து உங்களை தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி இரவு 8.30 மணி

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்ததை விட லாபம் கூடுதலா இருக்கும். குடும்பத்துல சொந்தக்காரங்க மூலமா சுபகாரிய செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். அதனால வேலையை சந்தோஷமா உற்சாகமா செய்வீங்க. இன்னிக்கு பண வரத்தும் அமோகமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி இரவு 11 மணி

துலாம்

துலாம்

துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு பூர்வீக சொத்து பத்து மூலமா உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்துலயும் உழைப்புக்கு ஏத்த மாதிரி சம்பளம் கிடைக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குறதுல ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. சுபச் செய்திங்க தேடி வந்து உங்களுக்கு மன ஆறுதலையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நேரம் : மாலை 3 மணி இரவு 7 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல இருந்து வந்த பிரச்சனைங்க கனிசமா குறையலாம். பண வரத்தும் இன்னிக்கு சுமார் ரகம் தான். கொரோனா பீதி இருக்குற இந்த சந்தர்ப்பத்துல எதுக்காகவும் வீட்டை விட்டு வெளியில வராதீங்க. பிசினஸ்ல நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு சில தடைகள், இடைஞ்சல் வர வாய்ப்பிருக்கு. எச்சரிக்கையோட இருங்க. குடும்பத்துல பெரியவங்களோட சின்னதா மனஸ்தாபம் வர வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி இரவு 8 மணி

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, உத்தியோகம் பாக்குறவங்க இன்னிக்கு வேலையில மட்டும் கவனம் செலுத்துறது நல்லது. வீட்டுல இருந்து வேலை பாக்குறவங்க எதுக்காகவும் வீட்டை விட்டு வெளியில போக நினைக்காதீங்க. பிசினஸ் பண்றவங்க மத்தவங்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்குறதோ, புதுசா எந்த முயற்சியோ எடுக்காம அமைதியா இருக்க பாருங்க.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.20 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு பழைய கடன்கள் வசூலாகிடும். அதனால உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்ப சிறப்பா இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைங்க வெற்றிகரமா முடிஞ்சிடும். சொந்தக்காரங்க மூலமா எதிர்பாத்துட்டு இருந்த உதவி, ஒத்தாசை கிடைக்கும். நீங்க நெனைச்ச காரியம் நல்லபடியா முடியும்கிறதுனால குடும்பத்துலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி இரவு 11 மணி

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க கூட மனச விட்டு பேசுறது மனசுக்கு ரொம்பவே இதமா இருக்கும். பிசினஸ்லயும் எதிர்பாத்த லாபம் கிடைக்கும். குடும்பத்துல இருந்து வந்த மனஸ்தாபம் காணாம போயிடும். இன்னிக்கு உங்க வேலையை ரொம்பவே திறமையா செஞ்சி முடிச்சிடுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 31

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 மணி 9.30 இரவு

மீனம்

மீனம்

மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க உங்களுக்கு சப்போர்ட்டா இருக்குறதுனால மனசுக்கு ஆறுதலா இருக்கும். புதுசா எதுலயாவது இண்வெஸ்ட் பண்றதா இருந்தா ஒரு தடவைக்கு நாலு தடவை நல்லா யோசிச்சி முடிவெடுத்து செய்யுறது நல்லது. செலவுங்களை கண்ட்ரோல் பண்ணலைன்னா வெளியில கடன் வாங்குற நிலைமை வந்துடும். குடும்பத்துலயும் தேவையில்லாத பிரச்சனைங்க முளைக்கலாம். எச்சரிக்கையா இருக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம் : காலை 5 மணி மாலை 5 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, April 29, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion