இந்த ராசிக்காரங்களுக்கு செலவு வீடு தேடி வரப்போகுது சிக்கனமாக இருங்க...

இன்றைய தினம் சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த பிரச்சினையிலும் தலையிட வேண்டாம் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே போக வேண்

இன்றைய தினம் சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். இன்றைய தினம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த பிரச்சினையிலும் தலையிட வேண்டாம் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே போக வேண்டாம். இன்றைக்கு யாருக்கு பணம் வரும், யாருக்கு செலவு வரும், யாருடைய உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கு இன்றைய ராசி பலன்களை படிங்க விடை தெரியும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களோட கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்திலும் மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற மாதிரியான தரமான சம்பவங்கள் நடந்துடும். குடும்பத்துலயும் குதூகலம் கூடிடும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் அதிகமாகிடும். அதனால மனசளவுள ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : பிற்பகல் 2:30 முதல் இரவு 7:30 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். பிசினஸ்லயும் வியாபாரம் பெருகி லாபம் அதிகமா கிடைக்கும். இன்னிக்க பணவரத்து தாராளமா இருந்தாலும், அதுக்கேத்த மாதிரி செலவுங்களும் லைனா வந்து நிக்கும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் மந்தமா இருக்குறதுனால சாப்பாட்டு விஷயத்துல வாயை கண்ட்ரோல்ல வச்சிக்கிறது நல்லது. குடும்பத்துல எல்லோரும் உற்சாகமா இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 1:30 முதல் மாலை 6:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு பிசினஸ்ல புதுசா ஃப்ரண்ட்ஸுங்க அறிமுகமாவாங்க. சுபச் செய்திங்க தேடிவந்து உங்க காதுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். குடும்பத்துலயும் எல்லோரும் நிம்மதியா இருப்பீங்க. இன்னிக்கு ரொம்ப கஷ்டமான வேலையை கூட ரொம்ப ஈஸியா செஞ்சி முடிப்பீங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு கண்ட்ரோல்ல இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : பகல் 12:30 முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல எதிர்பாக்காம திடீர் சிக்கல் உண்டாகலாம். எச்சரிக்கையா இருக்குறது நல்லது. பணவரத்து இன்னிக்கு குறைச்சலா இருந்தாலும், செலவுங்க வந்துட்டே இருக்கும். அதனால சிக்கனமா செலவழிச்சா, பணத்துக்கு தட்டுப்பாடு வராது. குடும்பத்துல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : மாலை 5:25 முதல் இரவு 9:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களுக்கு பணப்பிரச்சனை கொஞ்சம் குறையலாம். பிசினஸ்ல வியாபாரம் பெருகி லாபம் அமோகமா இருக்கும். கூடப்பொறந்தவங்க மூலமா நல்ல செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வீட்டுலயே ரெஸ்ட் எடுத்தா நல்லது. இன்னிக்கு நீங்க நெனச்ச காரியத்தை நல்லவிதமா செஞ்சி முடிப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகத்துல இருந்து வந்த சிக்கல்கள் குறையும்கிறதால ரொம்பவே உற்சாகமா இருப்பீங்க. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் நார்மலா இருந்தாலும், பணத்தை சிக்கனமா செலவழிச்சா உங்க பர்ஸ் காலியாகாது. பிள்ளைங்களால வீட்டுலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அதிர்ஷ்ட எண் : 5

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் மாலை 6:00 மணிவரை

துலாம்

துலாம்

துலா ராசிக்காரங்களே, இன்னிக்கு சுபகாரிய நிகழ்ச்சி எதையும் செய்ய வேணாம். திடீர்னு வெளியில இருந்து உதவி, ஒத்தாசை கிடைக்கும். அதனால பிரச்சனைங்களும் காணாம போயிடும். ஹெல்த் கண்டிஷன் ரொம்பவே மந்தமா இருக்கும். இன்னிக்கு உங்களோட பிரச்சனைங்களும் குறையலாம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க ரொம்பவே மனக்குழப்பத்தோடவே இருப்பீங்க. மத்தவங்க கிட்ட அநாவசியமா கோபப்படுறதை அவாய்ட் பண்ணுங்க. சந்திராஷ்டமம் இருக்குறதுனால, மத்தவங்க பிரச்சனையில மூக்கை நுழைக்காம உங்க வேலையில மட்டும் கவனம் செலுத்துறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 27

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 4:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு கவர்மெண்ட் மூலமா எதிர்பாத்த உதவி ஈசியா கிடைக்கலாம். சுபகாரியம் சம்பந்தமா பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம். வருமானமும் இன்னிக்கு அமோகமா இருக்கும். பிசினஸ்லயும் எதிர்பாத்த லாபம் கிடைக்கும். குடும்பத்துலயும் ரொம்ப சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். ஃபைனான்ஸ் பொசிஷனம் ரொம்பவே சிறப்பா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 1:00 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு புது நபரோட அறிமுகம் கிடைக்கும். எதிர்பாத்த பண வரத்து இருக்கும். எடுக்குற முயற்சிங்கள்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் ஏற்படும். வீட்டுக்கு தேவையான புது சாமான்களையும் வாங்குவீங்க. வெளியில இருந்து கடன் உதவியும் கிடைக்கும். வெளியூர் பிரயாணம் போறதுக்கு சந்தர்ப்பம் இருந்தாலும், அதை அவாய்ட் பண்றது நல்லது. பேங்க் பேலன்ஸும் கணிசமான அளவு கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை எடுத்துக்குறது நல்லது. உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்த வேலை நடக்காம போயிடும். பிள்ளைங்களால உங்களோட சந்தோஷம் குறையும். அதனால உங்க ஹெல்த்தும் பாதிக்கப்படலாம். கூடவே குடும்பத்துலயும் திடீர் செலவுங்க வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : மாலை 3:00 முதல் இரவு 7:00 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்க உங்களுக்கு ஒத்தாசையா இருப்பாங்க. சுபகாரிய முயற்சிங்கள்ல தடை, தாமதம்னு ஏற்படலாம். எதிர்பாக்காம திடீர் சிக்கல் உண்டாகலாம். உத்தியோகம் பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி போறது நல்லது. இன்னிக்கு பொருளாதார ரீதியா திடீர் நெருக்கடிங்க வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் காலை 8:45 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, April 28, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion