Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
இன்று மௌன விரதம் இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?
சந்திரன் இன்றைய தினம் சந்திரன் கன்னி ராசியிலும் துலாம் ராசியிலும் சஞ்சரிக்கிறார் இந்த சஞ்சாரத்தினால் கும்பம் ராசிக்காரர்களுக்கும் மாலைக்கு மேல் மீனம் ராசிக்ககாரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளது.
சந்திரன் இன்றைய தினம் சந்திரன் கன்னி ராசியிலும் துலாம் ராசியிலும் சஞ்சரிக்கிறார் இந்த சஞ்சாரத்தினால் கும்பம் ராசிக்காரர்களுக்கும் மாலைக்கு மேல் மீனம் ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளது. நான்கு ராசிக்காரர்களும் மவுன விரதம் இருப்பது நல்லது. இன்றைய தினம் உங்க ராசிக்கு அதிர்ஷ்டமும் அற்புதமும் நடைபெறப்போகிறது.

உங்களோட வேலைகள் அனைத்தும் தடைகளின்றி நடைபெறும். பண்டிகை காலம் என்பதால் பதற்றமின்றி பத்திரமாக இருந்தால் பாதுகாப்பாக சந்தோஷமாக இந்த தினத்தை கடந்து விடலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம். இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகம் வரும் யாருக்கு திடீர் செலவு வரும். ரொமான்ஸ் உணர்வு யாருக்கு உற்சாகத்தை தரும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்று ஆறு மற்றும் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வாழ்க்கைத்துணையோடு நீங்க பெரிய சண்டை போடுவீங்க. பண்டிகையும் அதுவுமாக வாக்குவாதம் வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்துங்க. உங்க மன அமைதிக்காக தியானம் இருங்க. உங்க வேலையில் நிறைய நல்லது நடக்கும் ரொம்ப பாசிட்டிவ் ஆக இருப்பீங்க. பொழுது போக்கு விசயத்திற்காக நிறைய செலவு பண்ணுவீங்க. சேமிப்புல கவனம் செலுத்துங்க. மாலையில உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 42
ராசியான நேரம்: பிற்பகல் 1.05 மணி - மாலை 5 மணி

ரிஷபம்
இன்றைய தினம் ஒரு சவாலான நாள். சந்தோஷ தருணங்கள் மனதில் வந்து போகும் எந்த சூழ்நிலையையும் எளிதில் சமாளிப்பீர்கள். பொருளாதார சூழ்நிலை அற்புதமாக இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவீர்கள். சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க. திடீர் பயணங்கள் ஏற்படும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
ராசியான நிறம்: க்ரீம்
ராசியான எண்: 7
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 9 மணி

மிதுனம்
இன்றைய தினம் உங்க சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். பிசினஸ் விசயமாக நீங்க வெளியூர் போவீங்க. நிதி நிலை அற்புதமாக இருக்கும். உங்க வாழ்க்கை துணையோட உற்சாகமாக நேரத்தை செலவு பண்ணுவீங்க. இன்றைக்கு நீங்க முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ரொமாண்டிக்கான தருணங்கள் உங்களை சந்தோஷப்படுத்தும்.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 5
ராசியான நேரம்: பிற்பகல் 2.45 - 4 மணி

கடகம்
இன்றைக்கு உங்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நிலை சுமாராகவே இருக்கும். பொருளாதார நிலை உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். பண வரவு இருந்தாலும் செலவுகள் ஏற்படும். வயது மூத்தவர்களின் ஆலோசனையை கேளுங்கள். அலுவலகத்தில் கவனமாக இருங்க, இல்லாட்டி பிரச்சினை ஏற்படும். திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்க மனநிலை சந்தோஷமாக இருக்கும்.
ராசியான நிறம்: பச்சை
ராசியான எண்: 15
ராசியான நேரம்: பிற்பகல் 12.45 மணி - 5.20 மணி

சிம்மம்
மகிழ்ச்சியான தருணங்கள் உங்களுக்கு ஏற்படும். குடும்பத்தோடு நீங்க பண்டிகையை கொண்டாடுவீர்கள். உங்க வாழ்க்கைத்துணையோடு நீங்க சந்தோஷமாக காதலோடு இருப்பீர்கள். உங்க பார்ட்டனோடு நீங்க சந்தோஷமாக இருப்பீர்கள். அதிர்ஷ்டகரமான நாள் இது வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்க வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்க உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.
ராசியான நிறம்: இளம் சிவப்பு
ராசியான எண்: 6
ராசியான நேரம்: பிற்பகல் 1 மணி - மாலை 5 மணி

கன்னி
இன்றைய தினம் உங்களுக்கு பணவரவு இருக்கும். ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. வேலையில சந்தோஷமாக உற்சாகமாக வேலை செய்வீங்க. திருமண வாழ்க்கை உங்களுக்கு சந்தோஷமாக அமையும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். உங்க பிசினஸ்ல வேலை நல்ல இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். திருமண முயற்சிகள் நல்லதாக நடக்கும் வாழ்க்கை துணையுடன் உற்சாகமாக இருப்பீர்கள். சிறு பயணங்கள் செல்ல நல்ல நாள் இது.
ராசியான நிறம்: மெரூன்
ராசியான எண்: 25
ராசியான நேரம்: காலை 4.20 பிற்பகல் 12 மணி

துலாம்
இன்றைய தினம் பண விசயங்களில் சந்தோஷமாக இருப்பீர்கள். பணவிசயம் உங்களுக்கு நல்லது நடக்கும். உங்க வயிறு பிரச்சினை ஏற்படும். உணவு விசயத்தில கவனமாக இருங்க. ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. மனரீதியாக பிரச்சினை ஏற்படும். வேலையில கவனம் செலுத்துங்க. பயணம் செய்வீர்கள். பணரீதியாக பிரச்சினைகள் தீரும். உங்க வாழ்க்கைத்துணையோட அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். காதல் உணர்வுகள் ரொமான்டிக் நினைவுகள் உற்சாகத்தை தரும்.
ராசியான நிறம்: ப்ளூ
ராசியான எண்: 2
ராசியான நேரம்: காலை 7.15 மணி - மாலை 2.05 மணி

விருச்சிகம்
இந்த நாள் உங்க மனதளவில் தைரியமாக இருப்பீங்க. உங்க உடம்பும் அற்புதமாக இருக்கும். ரொம்ப உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவீங்க. தொழிலில் லாபம் வரும். உங்க வாழ்க்கைத்துணை உங்களுக்கு சந்தோஷமான தருணங்களை ஏற்படுத்தி தருவார். இருவருக்கும் இடையே ஒரு புரிதல் இருக்கும். உங்களுக்கு ரொமாண்டிக் ஆன நாள் இது உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஆலய தரிசனம் செல்வீர்கள்.
ராசியான நிறம்: வெள்ளை
ராசியான எண்: 18
ராசியான நேரம்: காலை 7.45 - 12 மணி

தனுசு
இன்றைய தினம் உங்க மனசு ரெஸ்ட் லெஸ் ஆக இருக்கும். அம்மாவின் உடம்பில் அக்கறை காட்டுங்க. திருமணமான தம்பதியருக்கு இன்று சந்தோஷமான நாள். உங்க வாழ்க்கை துணையிடம் இருந்து அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்க நிதி நிலைமை இன்று சீராக இருக்கும். உங்க பட்ஜெட்டிற்கு ஏற்ப செலவு பண்ணுங்க. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் மன நிலையோடு ஒத்துப்போவது நல்லது.
ராசியான நிறம்: மஞ்சள்
ராசியான எண்: 20
ராசியான நேரம்: மாலை 5 மணி - இரவு 10 மணி

மகரம்
இன்றைய தினம் பண்டிகை காலம் சந்தோஷமாக முடியும். மன மகிழ்ச்சியான தருணங்கள் உங்க துணையோடு உற்சாகமாக செலவு செய்வீர்கள். பணம் விசயத்தில் சிக்கனமாக இருங்க. சுப விரைய செலவுகள் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும் உங்க திட்டங்களில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். இன்றைக்கு முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். சின்னச் சின்ன சிக்கல்கள் ஏற்படும் அதை மன தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள்.
ராசியான நிறம்: ஆரஞ்ச்
ராசியான எண்: 14
ராசியான நேரம்: பிற்பகல் 12 மணி - இரவு 9 மணி

கும்பம்
இந்த நாள் உங்களுக்கு மாலை வரை சந்திராஷ்டமம் உள்ளது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும். உங்க வாழ்க்கைத்துணையுடன் நீங்க வீண் பேச்சுகள் பேசவேண்டாம். உங்க குடும்ப பிரச்சினையில் அடுத்தவரை தலையிட விட வேண்டாம். உங்க வேலைப்பளு அதிகரிக்கும். உங்க பொறுப்புணர்வு அதிகரிக்கும். பண விசயத்தில் கவனமான இருங்க. உங்க வாழ்க்கை துணையோட நீங்க முக்கியமான இடத்திற்கு போவீங்க. உங்க பெர்சனாலிட்டி அதிகரிக்கும்.
ராசியான நிறம்: ப்ரௌன்
ராசியான எண்: 37
ராசியான நேரம்: பிற்பகல் 4.30 மணி - இரவு 11 மணி

மீனம்
மீனம் ராசிக்கு சந்தோஷமான நாள் இது. வேடிக்கை விளையாட்டு என உற்சாகமாக இருக்கும். பயணங்கள் சந்தோஷமாக அமையும் நண்பர்கள் உறவினர்களுடன் பார்ட்டி என பண்டிகையை கொண்டாடுவீர்கள. பணவரவு அதிகமாக இருக்கும். இன்றைக்கு கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். சந்தோஷம் இரட்டிப்பாகும். உங்க வாழ்க்கை துணை உங்களை சந்தோஷப்படுத்துவார். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மொத்தத்தில் இந்த பண்டிகை நாள் உங்க மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
ராசியான நிறம்: சிவப்பு
ராசியான எண்: 22
ராசியான நேரம்: பிற்பகல் 1.30 9.15



Click it and Unblock the Notifications











