For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு யாருக்கு பணவரவு வரும், யாருக்கு திடீர் செலவு தெரியுமா?

தினமும் புதிதாய் பிறந்தோம்னு நினைக்கிற அளவுக்கு தினம் தினம் ஏதாவது நடக்குது. இன்றைக்கு புதிய நாள் என்ன பிரச்சினை வரும், அந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமான்னு நினைக்கிறீங்களா? இதோ இன்றைய ராசிபலனை பட

|

தினமும் புதிதாய் பிறந்தோம்னு நினைக்கிற அளவுக்கு தினம் தினம் ஏதாவது நடக்குது. இன்றைக்கு புதிய நாள் என்ன பிரச்சினை வரும், அந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமான்னு நினைக்கிறீங்களா? இதோ இன்றைய ராசிபலனை படிங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரங்க என்னதான் தைரியசாலிகளாக இருந்தாலும் ஏதாவது ஒரு கவலை மனசை பிசைஞ்சுக்கிட்டுதான் இருக்கும். உங்க அன்பானவர்கிட்ட நீங்க ஷேர் பண்ணிக்க நினைச்சாலும் மன அழுத்தம் உங்க உடம்பையும் பாதிக்கும். பொருளாதார நிலையும் இன்னைக்கு நார்மலாதாங்க இருக்கும். இருந்தாலும் பெரிய செலவு வந்து உங்க முன்னாடி நின்னு கவலைப்பட வைக்கும். எதுவுமே ப்ளான் பண்ண மாதிரியா நடக்குது. இருந்தாலும் பரவாயில்லை செலவுக்கு ஏற்ப பணவரவு அதிகப்படுத்திக்கலாம்னு நீங்க நினைப்பீங்க. வேலை செய்யிற இடத்தில நீங்க எப்பவுமே கில்லிதாங்க. உங்க சீனியர்ஸ் மனசு சந்தோஷப்படுற மாதிரி வேலையை செய்வீங்க. வீட்ல ரொம்ப அமைதியா இருங்க. வீட்டம்மா கடுப்பேத்தினாலும் கம்முன்னு இருங்க. வாயை திறந்தாலே வம்புதான் அப்புறம் என்ன அமைதியா இன்னைக்கு கடத்திருங்க மக்களே.

அதிர்ஷ்ட நிறம் ப்ளூ

அதிர்ஷ்ட எண் 41

அதிர்ஷ்ட நேரம் பிற்பகல் 1 மணி மாலை 3 மணி

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியா கொண்ட ரிஷப ராசிக்காரங்களே. நீங்க உங்க வேலையில சின்சியராக இருப்பீங்க. உங்க திறமையை நிரூபிப்பீங்க. உங்க வேலையை பார்த்து சீனியர்ஸ் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. ப்ளான் பண்ண மாதிரி வேலையை முடிப்பீங்க. என்னதான் வேலையில பிஸியா இருந்தாலும் உங்க வீட்லயும் குடும்பத்தோட நேரம் செலவு பண்ணுவீங்க. மனசு சந்தோஷமாக இருக்கும் உடம்பும் உற்சாகமாக இருக்கும். பண வருமானம் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கு கல்யாணமான தம்பதிகள் உற்சாகமாக இருப்பீங்க. தேவையில்லாத வம்பு பேச்சுக்களை பேச வேண்டாம். உங்க அன்பானவங்க மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட பேசுறப்ப சந்தோஷமா அன்பை மட்டுமே சொல்லுங்க. உங்களுக்கு இன்னைக்கு பாசிட்டிவ் ஆனா பதில்தான் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் 11

அதிர்ஷ்ட நேரம் பிற்பகல் 1.30 இரவு 8 மணி

மிதுனம்

மிதுனம்

உங்க ஃபைனான்சியல் பொசிசன் இன்னைக்கு நிலையில்லாம ஒரே ஊசலாட்டமா இருக்கும் மத்தியானத்துக்கு மேல உங்களுக்கு பண வருமானதும் வரும் அதே போல செலவும் அதிகமாக வந்து உங்க பட்ஜெட்டை பதம் பார்க்கும் இருந்தாலும் ரொம்ப சாமர்த்தியமாக மேனேஜ் பண்ணுவீங்க. போட்ட பிளான் எல்லாம் இப்படி பணால் ஆகுதேன்னு உங்களுக்கு மன அழுத்தம் வரும் இருந்தாலும் ஒருவழியாக ஹார்ட் ஒர்க் பண்ணி ஒருவழியாக சமாளிப்பீங்க. இன்னைக்கு உங்களுக்கு சோதனையான நாள். உங்களைப்பத்தி புறம் பேசுறவங்களை ஒதுக்கி தள்ளுங்க. வேலையிலயும் இன்னைக்கு சராசரியான நாள்தான். வேலை பிசினஸ் எதுவா இருந்தாலும் இன்னைக்கு சுமார்தான். சரி ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம்னு பார்த்தாலும் அதுக்கும் சரிபட்டு வராது உடம்பும் ஒத்துழைக்காது.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம் : காலை 4.10 மணி பிற்பகல் 12.20 மணி

கடகம்

கடகம்

இன்னைக்கு எந்த அதிர்ஷ்டமும் உங்களுக்கு கை கொடுக்காது, வேலையில கவனமா இருங்க. நிதி நிலமை உங்களுக்கு சுமாராகத்தான் இருக்கும். திடீர்னு பணம் லாஸ் ஆகலாம் கவனம். யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. பண வருமானத்திலமையும் இன்னைக்கு சிக்கல்தான். உங்க குடும்பத்தில பேசும் போது கவனமாக இருங்க. அவங்களை புரிஞ்சிக்கிட்டாவே போதும் வேலை செய்யிற இடத்தில சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும், நிறைய டாஸ்க் கொடுப்பாங்க, ஒரே நேரத்தில அதை எல்லாம் சமாளிப்பீங்க. அமைதியா இருந்தாலே போதும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை முடிச்சிரலாம்.

அதிர்ஷ்ட நிறம் பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.15 இரவு 7.20 மணி

சிம்மம்

சிம்மம்

சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்காரங்களே உங்க கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். உங்க வாழ்க்கை துணையோட நீங்க சந்தோஷமா இருப்பீங்க. ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து போவீங்க. உங்க பெற்றோர்களோட ஹெல்த் ரொம்ப நல்லா இருக்கும். பண வரவும் ரொம்ப நல்லா இருக்கும் நீங்க பட்ஜெட் போட்ட மாதிரி செலவும் உங்க கண்ட்ரோல்ல இருக்கும். இது உங்களுக்கு ரொம்ப நல்ல நாள் நண்பர்களோட ஜாலியா சந்தோஷமா இருப்பீங்க மனசளவில ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க. வேலை செய்யிற இடத்தில ரொம்ப வேகமா வேலைகளை செய்து முடிப்பீங்க. பிசினஸ்ல நல்லா லாபம் கிடைக்கும். டிரைவ் பண்ணும்போது கவனமாக இருங்க. உங்க இளைய சகோதரர் மூலமாக உங்களுக்கு நல்லது நடக்கலாம் நீங்க பேசுற வார்த்தையில கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் 7

அதிர்ஷ்ட நேரம் பிற்பகல் 3.30 மணி இரவு 10 மணி

கன்னி

கன்னி

இன்னைக்கு நீங்க ரொம்ப அமைதியாக இருக்கணும். வீட்ல பேசும் போதும் சரி வேகமா கோபமா பேசாதீங்க. சில விசயங்களில் நீங்க எச்சரிக்கையாக இருங்க. சிட்சுவேசன் புரிஞ்சு நீங்க பேசுங்க. இன்னைக்கு உங்க நிதி நிலமை நல்லா இருக்கும். இன்னைக்கு உங்களுக்கு சிலர் நல்ல கிப்ட் கொடுப்பாங்க. புது சொத்துக்கள் வாங்குவீங்க. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் சிவப்பு

அதிர்ஷ்ட எண் 9

அதிர்ஷ்ட நேரம் மாலை 4 மணி இரவு 8.45 மணி

துலாம்

துலாம்

இன்னைக்கு உங்க அம்மாவோட உடல் நலம் கவலைப்படுற மாதிரி இருக்கும். ரொம்ப கிரிட்டிக்கலா இருக்கும் அது உங்க மன அழுத்தத்தை அதிகமாக்கும். உங்க வீட்டு சூழ்நிலை இன்னைக்கு சொல்ற மாதிரி இருக்காது. உங்களுக்கு யாருமே சப்போர்ட் பண்ற சூழ்நிலையில இல்லை இதனால நீங்க ரொம்ப கவலைப்படுவீங்க. உங்களுக்கு பிரச்சினையான நேரத்தில உங்க வாழ்க்கை துணையோட ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல நாள் ரிசல்ட் ரொம்ப நல்லா வரும், வெற்றி கொண்டாட்டத்தில ஈடுபடுவீங்க. தவிர்க்கவே முடியாத செலவு வந்து உங்களை தாக்கும். உண்மையா காதலிக்கிறவங்க யாருன்னு உங்களுக்கு புரியுற நாள் இது. இன்னைக்கு நீங்க ஒரு கோவிலுக்கு போக வாய்ப்பு இருக்கு. சாமி தரிசனம் மன ஆறுதலை தரும்.

அதிர்ஷ்ட நிறம் பச்சை

அதிர்ஷ்ட எண் 32

அதிர்ஷ்ட நேரம் காலை 11.45 மணி இரவு 8.30 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த நாள் உங்களுக்கு ரொம்ப நல்ல நாள், பண விவகாரம் ரொம்ப அற்புதமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில இருந்து உங்களுக்கு பணம் வரும். முக்கியமான முடிவுகளை எடுப்பீங்க. உங்க குடும்பத்தில அமைதி நிலவும், ரொம்ப நாளைக்கு அப்புறம் குடும்பத்தோட உற்சாகமாக சந்தோஷமாக பொழுதை கழிப்பீங்க. ஷாப்பிங் போவீங்க. வேலை செய்யிற இடத்தில இருக்கிற பிரச்சினைகளை வீட்டுக்கு கொண்டுட்டு வராதீங்க. காதல் உற்சாகமாக இருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சு நடந்துக்குவீங்க. நண்பர்களோட உதவி கிடைக்கும். வேடிக்கை விளையாட்டுன்னு ஜாலியாக பொழுது போகும். ரியல் எஸ்டேட் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்

அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் 4

அதிர்ஷ்ட நேரம் காலை 11 மணி பிற்பகல் 3 மணி

தனுசு

தனுசு

இன்னைக்கு உங்க பேமிலி சிட்சுவேசன் டென்சனை அதிகமாக்கும். உங்களுக்கும் உங்க குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கும். எந்த முக்கிய முடிவோ தடாலடியான முடிவோ எடுக்காதீங்க உங்களை மனசளவில சில பிரச்சினை பாதிக்கும் உங்க வாழ்க்கை துணையோட உடம்புல வேற பிரச்சினை ஏற்படும். உங்களுக்கு அவங்களோட சப்போர்ட் கிடைக்கும். உங்க பொருளாதார சூழ்நிலை ரொம்ப நல்லா இருக்கும். ஏற்றுமதி இறக்குமதியில நல்ல லாபம் வரும். ஃபைனான்ஸ்ல லாபம் வரும். இன்னைக்கு சிறப்பான ஒருத்தரை பார்க்கப்போறீங்க. உங்க பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் ஒட உதவி கிடைக்கும் எல்லா வேலைகளையும் மடமடன்னு செய்து முடிச்சிருவீங்க.

அதிர்ஷ் நிறம் மெரூன்

அதிர்ஷ்ட எண் 27

அதிர்ஷ்ட நேரம் பிற்பகல் 4 மணி இரவு 10.45 மணி

மகரம்

மகரம்

இந்த நாள் உங்களுக்கு ரொம்ப நல்ல நாள் உங்களுக்கு நிறைய பணம் வரும் உங்க ஃபைனான்ஸ் நிலமையை ரொம்ப நல்லாவே இருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் கவனமாக இருங்க. கல்யாண வாழ்க்கையில இன்னைக்கு ரொம்ப நல்ல நாள், படிக்கிற மாணவர்களுக்கு இன்னைக்கு சுமாரான நாள்தான். இன்னைக்கு சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீங்க. மனசை அமைதியா வச்சிக்கங்க குடும்பத்தில அமைதியா இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களோட நீங்க சந்தோஷமா ஒற்றுமையாக இருப்பீங்க. உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் க்ரீம்

அதிர்ஷ்ட எண் 8

அதிர்ஷ்ட நேரம் காலை 9.30 மணி மாலை 6.30 மணி

கும்பம்

கும்பம்

வேலை செய்யிற இடத்தில பிரச்சினை வரலாம் உங்க வேலையை பார்த்து உங்க சீனியர்ஸ் உங்களை கடுப்பேத்துவாங்க. நேர்மையா வேலையை பாருங்க. வெற்றி உங்களுக்குத்தான் கிடைக்கும். நம்ம பிரச்சினையை சீனியர்ஸ் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்களே அப்படின்னு நினைப்பீங்க. புதிய பிசினஸ்க்கு இன்வெஸ்ட் பண்ணுவீங்க. ரொம்ப நாள் கழிச்சு உங்க குடும்பத்தோடு டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. பொறுப்புணர்வு அதிகரிக்கும். பணப்பிரச்சினைகள் தீரும். உங்க வேலைகளை ஈஸியாக முடிப்பீங்க. உங்க வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. பிசினஸ்ல சின்னதா முதலீடு பண்ணுங்க.

அதிர்ஷ்ட நிறம் பிங்க்

அதிர்ஷ்ட எண் 10

அதிர்ஷ்ட நேரம் பிற்பகல் 3.30 மணி இரவு 8 மணி

மீனம்

மீனம்

இன்னைக்கு நீங்க உங்க அன்பானவங்களோட சந்தோஷமா இருப்பீங்க. உங்க மனசும் சந்தோஷமா இருக்கும். உங்க குடும்பத்தில இருக்கிறவங்களோட உதவி கிடைக்கும். உங்க அன்பானவங்களோட நேரத்தை செலவு பண்ணுவிங்க. உங்க பெற்றோர்களோட ஆசி கிடைக்கும். உங்க ரொமன்டிக் லைப்ல நல்ல ரிசல்ட் கிடைக்கும். நீங்க சிங்கிளாக இருந்தா உங்களுக்கு காதல் மலரும். வேலை செய்யுற இடத்தில ரொம்ப பொறுப்போட இருந்து வேலைகளை முடிப்பீங்க. உங்க பொருளாதார நிலைமை ரொம்ப அற்புதமாக அருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் நல்லதே நடக்கும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்

அதிர்ஷ்ட எண் 20

அதிர்ஷ்ட நேரம் காலை 7 மணி பிற்பகல் 5 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 27th November 2019 Wednesday

Check out the daily horoscope for 27th november 2019 wednesday. Read on...
Story first published: Tuesday, November 26, 2019, 19:31 [IST]
Desktop Bottom Promotion