For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு இந்த 3 ராசிக்காரர்களும் நெருக்கடியில் சிக்கி தவிக்கப் போறாங்க...

சந்திரன் ஆட்சி பெற்றிருக்கும் இந்த நாளில் புதனின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் புதன்கிழமையில் எந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார்கள், யாருக்கு நெருக்கடிகள் தீரும், மகிழ்ச்சி அதிகமாகும்

|

சந்திரன் ஆட்சி பெற்றிருக்கும் இந்த நாளில் புதனின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் புதன்கிழமையில் எந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பார்கள், யாருக்கு நெருக்கடிகள் தீரும், மகிழ்ச்சி அதிகமாகும் என்பதை ராசிபலன்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்னிக்கு வெளிவட்டார தொடர்பால உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீட்ல பெரியவங்க கூட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். குடும்பத்துலயும் சந்தோஷமான சம்பவங்கள் நடக்கும் அதுவே உற்சாகத்தை அதிகமாக்கும். வீட்ல ரொமான்ஸ் அதிகமாகும். பிசினஸ் விசயமா வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு வாய்ப்பு கிடைக்கும். வேலையில இருந்த பிரச்சினைகள் தீரும். உற்சாகமா வேலையை செய்வாங்க.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - 11:05 மணி

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே, இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்களோட ஆலோசனை பிசினஸுக்கு பக்க பலமா இருக்கும். நல்ல முன்னேற்றமும் இருக்கும். உத்தியோகத்துல சிலருக்கு வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு வாய்ப்பிருக்கு. கூடப்பொறந்தவங்க நல்ல ஒத்துமையா இருப்பாங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் நார்மலா இருக்கும்கிறதுனால எந்த வேலையையும் சுறுசுறுப்பா செய்வீங்க.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: இரவு 9:50 - பிற்பகல் 2:25

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே, இன்னிக்கு ஆஃபீஸ் உத்தியோகம் பாக்குறவங்களுக்கு கூட வேலை பாக்குறவங்க நல்ல சப்போர்ட்டா இருப்பாங்க. புதிய பொருட்களை வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். குடும்பத்துல பெரியவங்க கூட சின்னச் சின்னதா வாக்குவாதம் ஏற்படலாம். கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்துக்கோங்க. பிசினஸ்ல எதிர்பாக்காம திடீர் சிக்கல் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:00 - மாலை 6:30 மணி

கடகம்

கடகம்

கடக ராசி அன்பர்களே, இன்னிக்கு வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். புதுசா பிசினஸ் ஆரம்பிக்குற முயற்சியில நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரியோட சப்போர்ட் கிடைக்கும். பிள்ளைங்களும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. குடும்பத்துலயும் ஒத்துமை மேலோங்கி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 8:00 மணி

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சக ஊழியர்கள் உங்களுக்கு சப்போர்ட்டா நடந்துக்குவாங்க. பிசினஸ்ல இருந்து வந்த மந்த நிலை மாறிடும். ஆடம்பர பொருட்கள் வாங்குறதை அவாய்ட் பண்ணிட்டா பணம் மிச்சமாகும். இன்னிக்கு எந்த வேலையை செஞ்சாலும் நிதானமாவும், எச்சரிக்கையோடயும் இருந்துக்கோங்க. ஹெல்த் கண்டிஷன்ல சின்னதா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 8:00 மணி

கன்னி

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா பேங்க் லோன் கிடைக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. சொந்தக்காரங்களால உங்களுக்கு நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்துல உள்ளவங்க கூட ஒத்துமை கூடும். அதனால உங்க மன அமைதியும் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 50

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 - இரவு 10:00 மணி

துலாம்

துலாம்

துலா ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களோட அனுசரனையா நடந்துகிட்டா வியாபாரம் பெருகி லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனையும் சாதகமா இருக்கும். ஃப்ரண்ட்ஸுங்க உதவியும் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளும் கைகூடும். கூடப்பொறந்தவங்க உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. சொந்தக்காரங்க மூலமா சந்தோஷம் கொடுக்குற செய்திகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 3:00 - இரவு 7:15 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ் ரீதியா எடுக்குற முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து பத்து சம்பந்தமா உங்களுக்கு லாபம் கிடைக்கும். பழைய பாக்கியும் இன்னிக்கு வசூலாகும். சுப காரிய முயற்சிகள் தொடங்குறதுக்கு இன்னிக்கு அருமையான நாள். குடும்ப உறுப்பினர்களும் ஒத்துமையா இருப்பாங்க. குடும்பத்தோட வெளியூர் பிரயாணம் பண்றதுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:00 - இரவு 8:15 மணி

தனுசு

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனையில ரொம்பவே பொறுமையும் நிதானமும் அவசியம். வண்டி வாகனத்துல போகும்போது எச்சரிக்கை அவசியம். இன்னிக்கு மத்தவங்களோட வீண் பேச்சுக்கு ஆளாகக்கூடும். கவனமா இருந்துக்கோங்க. எதிர்பாக்காத பிரச்சனை உங்களை தேடி வரும். ஜாக்கிரதை.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 9:45 மணி

மகரம்

மகரம்

மகர ராசி அன்பர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல சிலருக்கு புது வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவசாலிகளோட ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெருசா உதவிடும். ஆடம்பர பொருட்கள் வாங்குறதுல ஆர்வம் உண்டாகும். சொந்தக்காரங்க மூலமா மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற செய்திகள் வந்து சேரும். குடும்பத்துலயும் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கு.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:30 - மாலை 3:00 மணி

கும்பம்

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, இன்னிக்கு பிசினஸ் விஷயமா எடுக்குற முயற்சிகளுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள்ல உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஃபைனான்ஸ பிரச்சனைகள் குறையும்கிறதுனால மனசுக்குள்ள மகிழச்சி தவழும். ஹெல்த் கண்டிஷன்ல் இருந்துவந்த பிரச்சனையும் குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 - மதியம் 2:45 மணி

மீனம்

மீனம்

மீன ராசி நேயர்களே, இது வரைக்கும் பிசினஸ்ல இருந்து வந்த பிரச்சனைகளோட பாதிப்பு இன்னிக்கு குறையும். சுபகாரிய முயற்சிகள்ல இருந்துவந்த முட்டுக்கட்டைகளும் விலகிடும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரிங்களோட சப்போர்ட் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைக்காம போகலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு மருந்து மாத்திரைன்னு செலவு பண்ண வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 - இரவு 8:00 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 27th May 2020 Wednesday In Tamil

Check out the daily horoscope for 27th may 2020 wednesday in tamil. Read on...
Story first published: Tuesday, May 26, 2020, 19:51 [IST]
Desktop Bottom Promotion