இந்த 4 ராசிக்காரரை தான் சனிபகவான் படாதபாடு படுத்துவாராம்.. உங்க ராசியும் அதுல இருக்கா?

இன்றைய கிரக நிலைகளின் அமைப்பைப் பொறுத்து, யாருக்கு செலவு அதிகமாக இருக்கும், யார் பண வரவை பெறுவார், யார் வாயை அடக்கி ஆள வேண்டும் போன்றவை முன்கூட்டியே தெரிந்து உஷாராகிக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்வதன் மூலம், அன்றைய தினத்தை திட்டமிட்டு விருப்பப்படி கொண்டு செல்லலாம். இன்றைய கிரக நிலைகளின் அமைப்பைப் பொறுத்து, யாருக்கு செலவு அதிகமாக இருக்கும், யார் பண வரவை பெறுவார், யார் வாயை அடக்கி ஆள வேண்டும் போன்றவை முன்கூட்டியே தெரிந்து உஷாராகிக் கொள்ளலாம்.

Daily Horoscope For 26th December 2019 Thursday In Tamil

அதுமட்டுமின்றி, 12 ராசிகளுக்குமான அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நேரம் போன்றவற்றை அறிந்து, அவற்றை பயன்படுத்துவதன் மூலம் வரக்கூடிய அபாயத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம். வாருங்கள் இன்றைய ராசிப்பலனைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று நீங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஒருவருடன் சண்டையிடலாம். இன்று நம்பிக்கையுடன் முன்னேறுவது நல்லது. ஆனால் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. வேலை முன்னணியில் நிலைமை சாதகமாக இருக்கும். இன்று, உங்கள் உயர் அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தும் எந்தவொரு முக்கியமான பணியையும் நீங்கள் மட்டுமே கையாள முடியும். நீங்கள் இன்று பயணம் செய்ய வேண்டியிருக்கும். இன்று எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் மற்றும் நீங்கள் அதை எதிர்பாராத விதமாக பெறுவீர்கள். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், உங்கள் மனைவியின் வார்த்தைகளை கவனமாகக் கேட்டு, அவர்களுக்கு முழு ஆதரவையும் கொடுக்க முயற்சிக்கவும். இன்று உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பீச்

அதிர்ஷ்ட எண் : 28

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 மணி முதல் மாலை 4.30 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று உங்கள் அலுவலகத்தில் துன்பங்களை சந்திக்க நேரிடும். தாமதமாக வரும் உங்கள் பழக்கத்தால் உங்கள் உயர் அதிகாரியின் கோபம் அதிகரித்து, அவர்களுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். இன்று வர்த்தகர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் புதிய வணிகம் தொடர்பான சில தகவல்களை ரகசியமாக வைத்திருங்கள். பணத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் மூதாதையர் சொத்து தொடர்பான சில நல்ல செய்திகளை இன்று பெறலாம். உறவினர்களுடனான நீண்டகால தகராறு சரியாக வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்கள் மனைவியுடன் ஒரு சிறந்த நேரத்தை பெறுவீர்கள். பொழுதுபோக்குக்காக, நீங்கள் இருவரும் ஒரு நடைக்கு செல்லலாம்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 15

அதிர்ஷ்ட நேரம் : இரவு 7.20 மணி முதல் மதியம் 3 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இன்று, மேம்பட்ட ஆரோக்கியத்துடன், உங்கள் ஆற்றல் நிலை நன்றாக இருக்கும். உங்கள் பணியிடத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் உங்கள் வேலையை முழு உற்சாகத்துடன் செய்வீர்கள். பொருளாதார முன்னணியில், இன்று சில சிரமங்கள் இருக்கலாம். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் பணத்தை வீணாக்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில், நீங்கள் வருத்தப்படுவீர்கள். இன்று வர்த்தகர்களுக்கு சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : காலை 8 மணி முதல் மதியம் 2.15 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேர்ந்தால், உங்கள் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் அனைத்து சிக்கல்களையும் நீங்கள் சமாளிக்க முடியும். இன்று அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரிகளின் அணுகுமுறை சரியாக இருக்காது. நீங்கள் நிறைய கடுமையான சொற்களைக் கேட்க வேண்டியிருக்கலாம். இன்று வணிகர்கள் பெரிதாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் பணத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாள். இன்று நீங்கள் வராது என்று நினைத்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பு மற்றும் நல்ல திட்டங்களின் விளைவாகும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2.30 மணி முதல் மாலை 6.40 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று பணத்தின் அடிப்படையில், உங்களுக்கு நல்லதாக இருக்காது. உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று மாணவர்கள் கடின உழைப்பின் சரியான முடிவுகளைப் பெறலாம். பிடித்த கல்லூரியில் சேர்க்கை பெறலாம். உங்கள் தனிப்பட்ட உறவில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வீட்டின் சூழல் கடந்த சில நாட்களாக சற்றே பதட்டமாக இருந்தது. ஆனால் இன்று எல்லோரிடமும் நிறைய தரமான நேரத்தை செலவிடுவீர்கள். குறிப்பாக உங்கள் பெற்றோரை மகிழ்விப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசும் போது, உங்கள் துணையின் நடத்தையில் மாற்றத்தைக் காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 34

அதிர்ஷ்ட நேரம் : காலை 11.50 மணி முதல் மதியம் 2.25 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இன்று அலுவலகத்தில் வேலை செய்வது போலவே நீங்கள் உணரமாட்டீர்கள். இன்று மிகவும் சோம்பலாக உணர்வதால் ஓய்வெடுக்க விரும்புவீர்கள். இன்று நீங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று வர்த்தகர்களுக்கு நன்மை பயக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பணத்தைப் பற்றி கூற வேண்டுமானால், இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பணம் தொடர்பான எந்தவொரு புதிய வேலையையும் தொடங்க நீங்கள் திட்டமிடலாம். பெரியவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது உங்கள் வார்த்தைகளை சிந்தனையுடன் பயன்படுத்தவும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அதிர்ஷ்ட எண் : 14

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2.20 மணி முதல் மாலை 4.30 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று நீங்கள் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் நிறைந்திருப்பீர்கள். நீங்கள் சில காலமாக அலுவலகத்தில் மிகவும் கடினமாக உழைத்தும் எதிர்பார்த்தபடி முடிவுகளைப் பெறவில்லையே என அவசரப்பட வேண்டாம். உங்கள் கடின உழைப்பை மட்டும் நம்புங்கள். நீங்கள் நிச்சயமாக பொருத்தமான முடிவைப் பெறுவீர்கள். பணம் தொடர்பான பிரச்சனை தீர்க்கப்படும். இன்று நெருங்கிய நண்பர்களிடமிருந்து நிதி உதவி பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இன்று எந்த புதிய வேலையையும் தொடங்க நாள் சாதகமாக இருக்காது. உங்கள் துணையின் மனநிலை இன்று சரியாக இருக்காது. உங்களுக்கு சிக்கல் இருக்கலாம். உடல்நலம் பற்றி பேசினால், நீங்கள் இன்று நன்றாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று, உங்களுடைய பழைய நண்பர் உங்களை தொடர்பு கொள்ளலாம். நீண்ட நேரம் கழித்து, நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவதன் மூலம் நன்றாக உணருவீர்கள். இதனுடன், உங்கள் பழைய நினைவுகள் பலவும் புதுப்பிக்கப்படும். இன்று உங்கள் தனிப்பட்ட உறவிலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் பிணைப்பு மேம்படும். இன்று நீங்கள் அவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். திருமணமாகாதவராக இருந்து திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், இன்று உங்கள் உறவை ஒரு படி மேலே கொண்டு செல்ல இன்று சிறந்த நாள். இந்த நாளில் நீங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். இது ஒரு வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று அவசரம் இருக்கும். இது உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். பணத்தின் அடிப்படையில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று யாராவது உங்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம். இன்று பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டால், உங்களுக்கு நல்ல நாள் அல்ல.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 16

அதிர்ஷ்ட நேரம் : காலை 11 மணி முதல் காலை 12.25 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இன்று உங்கள் மனதில் அதிருப்தியும் பயமும் அதிகமாக இருக்கும். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள். இன்று உங்கள் பெரும்பாலான நேரம் இந்த விஷயங்களை நினைத்து செலவிடப்படும். நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது. பொறுமை மற்றும் புரிதலுடன், நீங்கள் துன்பத்தை எதிர்கொள்ள முடியும். இன்று உங்கள் முக்கியமான சில வேலைகள் தடைபட்டிருக்கலாம். இன்று முழு உற்சாகத்துடன் முன்னேறுவீர்கள். உங்கள் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இன்று உங்கள் முதலாளி உங்களிடம் கோபப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 12

அதிர்ஷ்ட நேரம் : மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். இன்று விஷயங்கள் உங்களுக்கு ஆதரவாக மாறுவதைக் காணலாம். நீங்கள் கடினமாக உழைத்து முன்னேறுங்கள், நீங்கள் நிச்சயமாக வெற்றியைப் பெறுவீர்கள். இன்று, வணிகர்கள் எந்த முக்கியமான முடிவையும் எடுக்கலாம். இந்த முடிவு உங்கள் வணிகத்தில் பெரிய மாற்றத்திற்கு வழிவகுக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் சுதந்திரமாக செலவழிக்க முடியும், மேலும் புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்கவும். இந்த நேரத்தில் அவர்கள் உடல்நலம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில், அலட்சியம் ஆபத்தானது என்பதை நிரூபிக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், இன்று எந்தவொரு திருமண திட்டமும் உங்களுக்காக வரக்கூடும். இருப்பினும், இதுப்போன்ற சந்தர்ப்பங்களில் அவசரம் நல்லதல்ல. எனவே கவனமாக ஒரு முடிவை எடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நேரம் : காலை 11.30 மணி முல் மதியம் 3 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! சில காலமாக, உங்கள் நிதி நிலைமை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக உள்ளது, இதன் காரணமாக உங்கள் மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. செலவு பற்றிய கவலையை விட்டுவிட்டு, இன்று உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள். வேலை முன்னணியில், இன்று நல்ல முடிவுகளைப் பெறலாம். உங்கள் வேலையில் ஏதேனும் தடைகள் இருந்தால், உங்களுடைய இந்த சிக்கலை இன்று சமாளிக்க முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வு இருக்கும். அனைவரையும் ஒன்றாகப் பார்ப்பதில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள். நிதி பற்றிப் பேசினால், இன்று உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் கூடுதல் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பைப் பெறலாம்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! இன்று மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், உங்கள் கடின உழைப்பின் இனிமையான பலனைப் பெறலாம். இன்று நீங்கள் பணத்தின் அடிப்படையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் நிதி முயற்சிகள் பல வெற்றிகரமாக முடியும். ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப இயக்க வேண்டும். உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். வேலை செய்பவர்கள் இன்று அலுவலகத்தில் ஒரு பெரிய மரியாதை பெறலாம். இவை அனைத்தும் உங்கள் நேர்மையான கடின உழைப்பின் விளைவாகும். உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும், அமைதியும் இருக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு நிதானமான நாளைக் கழிப்பீர்கள். உங்கள் அன்பான நண்பருடன் மாலையில் நேரம் செலவிட ஒரு வாய்ப்பைப் பெறலாம். உங்கள் காதல் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் இன்று முடிவடையும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான தவறான எண்ணங்களும் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நேரம் : காலை 5.20 மணி முதல் மதியம் 12.20 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, December 26, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion