For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பார்வை இன்று எந்த ராசிக்காரங்களுக்கு சிறப்பா இருக்கு தெரியுமா?

சந்திரன் இன்றைய தினம் சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார் இந்த சஞ்சாரத்தினால் மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. சில ராசிக்காரர்கள் மவுன விரதம் இருப்பது நல்லது.

|

தினசரி ராசி பலன் சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுகிறது. அக்டோபர் 25 ஆம் தேதி உங்களின் நிதி நிலை வேலை, தொழில் உடல் நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். இன்றைக்கு உங்களின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கு ராசியான நிறம், நம்பர், நல்லநேரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு பாருங்க. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களை பார்க்கலாம்.

Daily Horoscope For 25th October 2019 Friday

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் யாருக்கு திருப்பு முனையை தரும் யாருக்கு சந்தோஷத்தை தரும் என்று பார்க்கலாம். உங்க உண்மையான உழைப்புக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும். இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மிகச்சிறந்த நல்ல நேரம் 9.15 முதல் 10.15 மணி வரைக்கும் மாலையில் 5.30 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் உள்ளது. 12 ராசிகள் 27 நட்சத்திர காரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும் தடைகள் விலகும். செய்யும் தொழிலில் பலன் கிடைக்கும். குல தெய்வ ஆசி அற்புதமாக கிடைக்கும்.சுக்கிரன் சூரியன் நிலை அற்புதமாக உள்ளது. குல தெய்வ வழிபாடு செய்யலாம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் முன்னோர்களுக்கு நல்லது கிடைக்க குல தெய்வ வழிபாடு செய்யலாம். நீண்ட நாள் உடல் உபாதை விலகும். பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். கோர்ட் கேஸ் சாதகமாக முடியும் வியாபாரத்தில் லாபம் செழிக்கும் மாணிக்க நிறம்.

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான நம்பர் : 11

ராசியான நேரம் : பிற்பகல் 2.00 மணி பிற்பகல் 4.00 மணி

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே.வெற்றிகள் தேடி வரும் சுகமான நாள். குருவின் அணுக்கிரகம் அற்புதமாக உள்ளது. குரு பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் பெண்களுக்கு உடல் நல பிரச்சினைகள் சரியாகும். உடல் நலத்தில் அக்கறை தேவை அரசு அலுவலகர்கள் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். ஆடை ஆபரண சேர்க்கை நடக்கும். நண்பர்களால் நல்லது நடக்கும் 5 இலைப்பச்சை வண்ணம்

ராசியான நிறம் : மஞ்சள்

ராசியான நம்பர் : 20

ராசியான நேரம் : காலை 8.00 மணி பிற்பகல் 12.30 மணி

மிதுனம்

மிதுனம்

தைரிய ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். ஆனந்தம் பெருகும். பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும் மகிழ்ச்சியான நாள். வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருங்க. பணவரவு இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கும் வியாபாரம் செழிக்கும் நல்ல நாள் இந்த நாள் மகிழ்ச்சியான நாள். உயர்வான நாள் நல்ல செய்தி தேடி வரும் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். காரியங்கள் வெற்றி பெற லக்கி எண் 5 ஆரஞ்சு நிறம்

ராசியான நிறம் : மெரூன்

ராசியான நம்பர் : 7

ராசியான நேரம் : மாலை 4.00 மணி இரவு 8.20 மணி

கடகம்

கடகம்

கடகம் ராசிக்கு தன வரவை தரும் நாள் காரணம் சிம்ம ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் நன்மை உண்டு. ஆதாய வரவுகள் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். குருவின் பார்வையும் உங்க ராசியின் மீது விழுவதால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். காரியங்கள் வெற்றி பெற விநாயகப்பெருமானை வணங்கவும்.

ராசியான நிறம் : பிங்க்

ராசியான நம்பர் : 30

ராசியான நேரம் : இரவு 12.20 மணி பிற்பகல் 03.00 மணி

சிம்மம்

சிம்மம்

வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் வரும். மூன்றாம் வீட்டில் சுக்கிரன், சூரியன் இருப்பது நல்ல அமைப்பு சகோதரர் உதவி கிடைக்கும். வம்பு வழக்குகளை தவிர்க்கவும். செல்வ செழிப்பு பெருகும். ஆதாய வரவு கிடைக்கும்.

ராசியான நிறம் : மஞ்சள்

ராசியான நம்பர் : 28

ராசியான நேரம் : காலை 11.00 மணி பிற்பகல் 12.05 மணி

கன்னி

கன்னி

மாற்றங்கள் முன்னேற்றங்கள் நிறைந்த நாள் இது. வெள்ளிக்கிழமையான இன்று மகாலட்சுமி வழிபாடு நன்மையை கொடுக்கும். ராசிக்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருக்கிறார் நல்ல விசயங்கள் நிறைய நடக்கும். அபிராமி அந்தாதி படியுங்கள் நல்லது நடக்கும். தன லாபம் உண்டு. இடம் மாற்றம் உண்டு சொத்து சுகம் வாங்கும் யோகம் உண்டு.

ராசியான நிறம் : பர்ப்பிள்

ராசியான நம்பர் : 19

ராசியான நேரம் : காலை 9.00 மணி மாலை 04.00 மணி

துலாம்

துலாம்

மனதில் உள்ள எண்ணங்கள் பூர்த்தியாகும். கோபம் வேண்டாம் அமைதியாக பேசுங்க. கண் திருஷ்டி அதிகம் இருக்கு அவசியம் தவிருங்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரம் வளர்ச்சி உண்டு. கல்வியில் கவனம் தேவை.

ராசியான நிறம் : க்ரீம்

ராசியான நம்பர் : 4

ராசியான நேரம் : பிற்பகல் 02.30 மணி மாலை 04.00 மணி

விருச்சிகம்

விருச்சிகம்

வேலை வாய்ப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. வெளிநாட்டு பயணம் வரும். தன வரவு தரும். வியாபாரத்தில் வெற்றி வரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். குருவின் நகர்வு உங்களுக்கு நல்லது நடக்கும். குடும்பத்தில் குதூகலம் கிடைக்கும். இன்றைக்கு நீங்க அம்பாளை வணங்க நல்லது நடக்கும்.

ராசியான நிறம் : ஆரஞ்ச்

ராசியான நம்பர் : 27

ராசியான நேரம் : பிற்பகல் 08.40 மணி பிற்பகல் 12.30 மணி

தனுசு

தனுசு

நன்மை தேடி வரும் நாள். குரு உங்களை நெருங்குகிறார். காரிய அனுகூலமான நாள். குரு பெயர்ச்சி பல நன்மைகளை தரும். பட்ட துன்பங்கள் விலகப்போகிறது. பிசினஸ்ல கூடுதல் லாபம் வரும். கல்யாண கனவுகள் நனவாகும். நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். உடல் உபாதைகள் நிவர்த்தியாகும்.

ராசியான நிறம் : அடர் நீலம்

ராசியான நம்பர் : 10

ராசியான நேரம் : பிற்பகல் 6.20 மணி பிற்பகல் 08.20 மணி

மகரம்

மகரம்

உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். சந்திரன் எட்டில் இருந்தாலும் கவலையில்லை. சனியால் மாற்றங்கள் ஏற்றங்கள் நடக்கும், வேலையில் இருந்த தடைகள் விலகும். பயணங்களில் கவனம் தேவை. வருமானம் பெருகும். அரசு அதிகாரிகளிடம் கவனம் தேவை. நண்பர்களிடம் ஜாக்கிரதை. வியாபாரம் நன்றாக இருக்கும்.

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான நம்பர் : 17

ராசியான நேரம் : இரவு 09.00 மணி பிற்பகல் 01.30 மணி

கும்பம்

கும்பம்

மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சந்தோஷம் கூடும். நீண்ட நாள் நோய்கள் விலகும். நல்ல நாள். கடன் வாங்க வேண்டாம். தன லாபம் அதிகரிக்கும். உடல் நல பிரச்சினைகள் சீராகும். லாப ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

ராசியான நிறம் : காவி

ராசியான நம்பர் : 9

ராசியான நேரம் : காலை 8.25 மணி பிற்பகல் 12.55 மணி

மீனம்

மீனம்

குருவை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே. உங்க ராசியின் மீது ராசி நாதன் குருவின் பார்வை விழுகிறது. நன்மைகள் நடக்கும் நாள். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பகைவர்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை. உடல் நலத்தில் அக்கறை தேவை. உயர் கல்வி, வேலைக்காக செய்யும் முயற்சி வெற்றியை தரும்.

ராசியான நிறம் : ப்ரௌன்

ராசியான நம்பர் : 2

ராசியான நேரம் : மாலை 5.30 மணி இரவு 9.50 மணி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 25th October 2019 Friday

Check out the daily horoscope for 25th October 2019 friday. Read on.
Story first published: Thursday, October 24, 2019, 23:26 [IST]
Desktop Bottom Promotion