இந்த 2 ராசிக்காரங்களுக்கு தேவையில்லாத பிரச்சினை வருமாம்.. ஜாக்கிரதை!

சனிக்கிழமை இன்று சனிபகவான் ஆதிக்கம் நிறைந்த நாள். சனிபகவான் மகரம், கும்பம் ராசிக்கு சொந்தக்காரர். இப்போது தனது ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.

சனிக்கிழமை இன்று சனிபகவான் ஆதிக்கம் நிறைந்த நாள். சனிபகவான் மகரம், கும்பம் ராசிக்கு சொந்தக்காரர். இப்போது தனது ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். சனிபகான் இன்றைக்கு சில ராசிக்காரர்களுக்கு யோகங்களையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறார். சந்திராஷ்டமம் இருப்பதால் துலாம் ராசிக்காரர்கள் எச்சரிக்கியாக இருக்க வேண்டும் தேவையில்லாத பிரச்சினை வரும் ஜாக்கிரதை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களே, இன்னிக்கு லவ் மேட்டர்ல உங்களுக்கு சாதகமான செய்தி வரலாம். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களோட சப்போர்ட் கிடைக்கும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வர்றதுனால வீடே கலகலப்பா மாறிடும். நீங்க விருப்படுற சாமான்களை வாங்கி சந்தோஷப்பட்டுக்குவீங்க. வெளிவட்டாரத்துலயும் உங்களுக்கு கவுரவம் கிடைக்கும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 28

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களே, இன்னிக்கு நீங்க ரொம்பவே குழப்பமான மனநிலையில இருந்தாலும் கூட, வேலை விஷயத்துல ரொம்பவே உற்சாகமா நடந்துக்குவீங்க. கார்த்திகை, ரோகிணி நட்சத்திரத்துல பொறந்தவங்க கொஞ்சம் கோவத்தை கண்ட்ரோல் பண்ணிக்கிறது நல்லது. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் அற்புதமா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 14

சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரங்களே, இன்னிக்கு பணம் நகையை கையாள்றவங்க ரொம்பவே எச்சரிக்கையோட நடந்துக்குறது நல்லது. கணவன் மனைவி ரெண்டு பேரும் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போறது நல்லது. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும், ஃபைனான்ஸ பொஷிசனும் ரொம்பவே அற்புதமா இருக்கும். அதனால மனசளவுல ரொம்ப உற்சாகமா இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரங்களே, இன்னிக்கு கணவன் மனைவிக்குள்ள அந்நியோன்யம் கூடிடும். குடும்பத்துலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும். அதனால ரொம்பவே உற்சாகமா வேலை செய்வீங்க. பிசினஸ்ல வியாபாரம் அமோகமா நடந்து லாபமும் பெருகிடும். உத்தியோகத்துலயும் உங்களோட திறமை பளிச்சின்னு தெரியும். இருந்தாலும், எந்த டாக்குமெண்ட்மையும் ரொம்ப கவனமா படிக்க வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 17

சாதகமான நேரம் : காலை 9:20 முதல் நண்பகல் 1:30 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்களைப் பத்தி தப்பான வதந்திங்க வரலாம், எச்சரிக்கையா இருக்க பாருங்க. ஆஃபீஸ்லயும் உங்க மேல மரியாதை கூடிடும். பழைய கடன் பாக்கி பிரச்சனை தீந்திடும். கூடப்பொறந்தவங்க உங்க மேல அக்கறையா இருப்பாங்க. கொரோனா பிரச்சனையினால பிரிஞ்சி இருக்குற லவ்வர்ஸுக்கு பிரிவுத் துயர் வாட்டும். இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனும், ஹெல்த கண்டிஷனும் மந்தமாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 1:25 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களே, இன்னிக்கு ஆஃபீஸ்ல பறிகொடுத்த வேலை திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும். கூடவே வேலைச் சுமையும் கூடிடும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். வெளியில கேட்ட இடத்துல இருந்து பண வரத்து தாராளமா வரும். சொந்தக்காரங்க உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. லவ் பண்றவங்களுக்கு நடுவுல நெருக்கம் கூடிடும். ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுனா இன்னிக்கு உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள் தான்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 5:20 மணிவரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரங்களே, இன்னிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால ரொம்பவே எச்சரிக்கையோட நடந்துக்குறது நல்லது. உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்துக்கோங்க. கணவன் மனைவிக்குள்ளாற சின்னச் சின்ன சண்டை சச்சரவுங்க வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து போறது நல்லது. அநாவசியமா வீட்டை விட்டு வெளிய போறதை அவாய்ட் பண்ணிடுங்க. இன்னிக்கு மனசுல கவலை இருக்குறதுனால எதையோ பறிகொடுத்த மாதிரி இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 13

சாதகமான நேரம் : மாலை 4:15 முதல் இரவு 10:20 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரங்களே, இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்களுக்கு புதுசா சலுகைங்க கிடைக்கலாம். கணவன் மனைவிக்குள்ளாற நெருக்கம் கூடிடும். பிள்ளைங்க மூலமாவும் சொந்தக்காரங்க மூலமாவும் ஆதாயம் கிடைக்கும். மனைவி வழியில சப்போர்ட் கிடைக்கும். வண்டி வாகனத்தை சரி பண்ணுறதுக்கு இன்னிக்கு வாய்ப்பு கிடைக்கும். லவ் பண்றவங்க சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து திக்குமுக்காட வைப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 6

சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் மாலை 5:00 மணிவரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரங்களே, இன்னிக்கு உங்க நாக்கை கண்ட்ரோல்ல வச்சிக்கிறது நல்லது. யார் கிட்டயும் தடித்த வார்த்தையை விட்டுறாதீங்க. இல்லாட்டி பிரச்சனையில மாட்டிக்குவீங்க. அதே மாதிரி வீட்டுலயும் எல்லோர் கிட்டயும் தன்மையா பேசிப் பழகுங்க. அதனால வீட்டுல உங்க மேல மதிப்பு மரியாதை கூடிடும். வெளியில சுபகாரிய நிகழ்ச்சியில கலந்துக்குவீங்க. சில பேர் உங்ககிட்ட ஒத்தாசை கேட்டு வருவாங்க. யோசிச்சி செய்யுங்க. பணவரத்தும் இன்னிக்கு அமோகமா இருக்கும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரங்களே, இன்னிக்கு வேலை விஷயத்துல ரொம்பவே கவனமா பொறுப்பா நடந்துக்குறது நல்லது. புது பொறுப்புங்க உங்களை தேடி வரும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமா நகரும். லவ் பண்றவங்க பழைய நினைவுகள்ல மூழ்கிடுவீங்க. மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு ரொம்பவே உற்சாகமான நாளா அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:05 மணிவரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரங்களே, இன்னிக்கு உத்தியோகம் பாக்குறவங்களுக்கு புது வாய்ப்புங்க தேடி வரும். வீட்டுக்கு சொந்தக்காரங்க வருவாங்க. தாய் வழி சொந்தக்காரங்களால தண்டச் செலவுங்க வந்து கையை கடிக்கும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. எதுக்கும் ஒரு தடவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் காட்டுறது நல்லது. லவ் பண்றவங்க ரொம்பவே உணர்ச்சிவசப்படுவீங்க. மொத்தத்துல இன்னிக்கு சந்தோஷம் கொடுக்கக்கூடிய நாளா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 3:45 மணிவரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரங்களே, இன்னிக்கு கூடப்பொறந்தவங்க மூலமா நல்லது நடந்துடும். பிசினஸ் பண்றவங்க வேலையாட்களை அனுசரிச்சி தட்டிக்கொடுத்து வேலை வாங்குனா வியாபாரம் பெருகி லாபம் கூடும். உத்தியோகம் பாக்குறவங்களுக்கு வேலைக்கு ஏத்த அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில இன்னிக்கு ரொம்பவே சிறப்பான நாளா இருக்கும். இன்னிக்கு நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெருன்

அதிர்ஷ்ட எண் : 11

சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, April 25, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion