For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (23.06.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்…

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜூன் 23 ஆம் தேதி புதன்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று ஒரு பெரிய வெற்றி உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக தடைப்பட்ட வேலை இன்று நிறைவடைய வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் வேலையை முழு கவனத்துடனும், அர்ப்பணிப்புடன் செய்யவும். விரைவில் முன்னேறலாம். வணிகர்களின் பொருளாதார நிலையில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். கடின உழைப்பு நல்ல பலனளிக்கும். இன்று நீங்கள் மிகப்பெரிய நிதி லாபத்தை ஈட்ட வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். தந்தையிடமிருந்து சில முக்கியமான ஆலோசனைகளைப் பெறலாம். ஆரோக்கியத்தில் ஏற்படும் முன்னேற்றத்தால் இன்று மிகவும் நன்றாக இருப்பீர்கள். வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:05 முதல் மதியம் 1 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ஆரோக்கியத்தின் மீதான அலட்சியம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும், குறிப்பாக இன்று வயிறு தொடர்பான நீண்டகால பிரச்சனை உருவாக வாய்ப்புள்ளது. உணவில் அதிக கவனக்குறைவாக இல்லாமல் இருப்பது நல்லது. வேலையை மாற்றுவது பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம். வணிகர்கள் இன்று நிதி இழப்பை சந்திக்க நேரிடும். ஒரு புதிய வணிக முன்மொழிவைப் பெற்றால், சிந்திக்காமல் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். சமீபத்தில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்கினால், உங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அதிகம் கவனித்துக் கொள்ளவும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் பாசத்தையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:20 மணி முதல் இரவு 10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

வீட்டின் சூழல் நன்றாக இருக்கும். இன்று குடும்ப உறுப்பினர்களுடன் அற்புதமாக நேரத்தை செலவிடுவீர்கள். வீட்டின் பெரியவர்களுடன் ஒரு முக்கியமான கலந்துரையாடலைக் கொண்டிருக்கலாம். வேலையைப் பற்றி பேசினால், அலுவலகத்தில் உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கூட்டு வியாபாரம் செய்வோர், தங்கள் கூட்டாளருடன் நல்லுறவைப் பேண வேண்டும். பண விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையை பராமரிக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டால், சில அனுபவமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற வேண்டும். உடல்நலம் பற்றிப் பேசும்போது, சுகாதாரத்தைக் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக, வெளி உணவைடத தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 முதல் மதியம் 12 மணி வரை

கடகம்

கடகம்

உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் உயர் பதவியில் பணிபுரிகிறீர்கள் என்றால், இந்த நாளில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவையற்ற கோபம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். வணிகர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. ஒரு புதிய வணிகத்தை கூட்டாக தொடங்க விரும்பினால், இன்று உங்கள் திட்டம் முன்னேறலாம். உங்கள் நிதிப் பிரச்சனையும் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் சில சர்ச்சைகள் இருக்கும். வீட்டு உறுப்பினருடன் வாக்குவாதம் செய்யலாம். கோபத்தில் தவறான சொற்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் குடும்பத்தின் ஒற்றுமை கலங்கக்கூடும். பணத்தைப் பற்றி பேசினால், சிந்திக்காமல் தேவைக்கு அதிகமாக செலவிடுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் சரிவு சாத்தியமாகும். உடலின் எந்தப் பகுதியிலும் திடீர் வலி ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை

சிம்மம்

சிம்மம்

திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஆழமடையக்கூடும். இன்று துணையின் நடத்தையில் கடுமையான தனம் இருக்கலாம். அமைதியான முறையில் மன கசப்பை விரைவில் குறைக்க முயற்சிப்பது நல்லது. வேலையைப் பற்றிப் பேசினால், உத்தியோகஸ்தர்கள் இன்று நல்ல பலனைப் பெறலாம். அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். வியாபாரிகள், தங்கள் நீண்ட கால வேலை ஒன்றை இன்று முடிக்க வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், இதற்காக நீங்கள் மிகவும் கடினமாக போராட வேண்டியிருக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், உங்களுக்கு கர்ப்பப்பை வாய் தொடர்பான பிரச்சனை இருந்தால், கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4:20 மணி முதல் மாலை 3 மணி வரை

கன்னி

கன்னி

நிதி முன்னணியில் இன்று உங்களுக்கு ஒரு கலவையான நாளாக இருக்கக்கூடும். அதிகரிக்கும் செலவுகளால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் நல்லது. சேமிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இதன்மூலம், உங்கள் கடன்களை விரைவில் செலுத்தலாம். வேலையைப் பற்றி பேசும்போது, முதலாளியின் பார்வை அலுவலகத்தில் உங்கள் மீது இருக்கும். இன்று வேலையில் சிறிதும் கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள். உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். வணிகர்கள் பெரிய இலாபத்திற்காக தங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இன்று அவசரம் மற்றும் பீதியைத் தவிர்க்கவும். கீழே விழுந்து காயமடைய வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

துலாம்

துலாம்

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் போட்டி அதிகரிக்கும். நீங்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று சக ஊழியர்களுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். இவை, உங்கள் வேலையை பாதிக்கும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை முன்னேற்றுவதற்கான நல்ல வாய்ப்பைப் பெறலாம். தங்கம் மற்றும் வெள்ளி தொடர்பான பணி புரிவோருக்கு இன்று சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் பதட்டமாக இருக்கும். வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். உடல்நிலையைப் பொறுத்தவரை, உங்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்கள் பொறுமை காக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கடின உழைப்பின் நல்ல பலனை நீங்கள் நிச்சயமாகப் பெறுவீர்கள். வணிகம் தொடர்பான நபர்களின் எந்தவொரு முக்கியமான வேலையும் குறுக்கிடப்படலாம். நிதி இழப்பையும் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்கவும். வீண் சண்டையைத் தவிர்க்கவும். அம்மாவின் உடல்நிலை நன்றாக இருக்காது. நீங்கள் அவர்களை மன அழுத்தத்திலிருந்து விலக்கி வைத்திருந்தால் நல்லது. பணத்தின் நிலை திருப்திகரமாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும். உடல்நலம் பற்றிப் பேசினால், உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால், உங்கள் வழக்கத்தை ஒழுங்கமைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 10 மணி வரை

தனுசு

தனுசு

பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல அறிகுறிகள் தென்படும். நீங்கள் எந்த பழைய கடனிலிருந்தும் விடுபடலாம். இன்று நீங்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்கலாம். வேலை பற்றி பேசினால், அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். ஆன்லைனில் வியாபாரம் செய்வோர் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். சிறு வணிகர்களும் எதிர்பார்த்த பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டின் அனைத்து உறுப்பினர்களுடனான உறவில் அன்பும் இனிமையும் இருக்கும். உடல்நலம் பற்றிப் பேசினால், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நீங்கள் மிகவும் வலிமையாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் 2 மணி வரை

மகரம்

மகரம்

உத்தியோகஸ்தர்களுக்கு திடீரென்று அலுவலகத்தில் ஒரு முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பு வரக்கூடும். இதற்கு நீங்கள் முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது. இன்று சிறிய வேலையையும் கவனமாக செய்ய வேண்டும். வணிகர்கள் இன்று பெரிய நிவாரணத்தைப் பெறலாம். நிதி சிக்கலை தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். உங்கள் நடத்தை நன்றாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். அன்புக்குரியவரின் உணர்வுகளை மதிக்க வேண்டும். நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று குடும்பத்தின் வசதிக்காக எந்தவொரு பொருளுக்கும் நிறைய பணம் செலவிடலாம். உடல்நலம் பற்றிப் பேசும்போது, பான், குட்கா, சிகரெட் போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்று உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் நீங்கள் இன்று ஒருவருடன் சண்டையிடலாம். இதுபோன்ற தொல்லைகளில் சிக்கி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். முக்கியமான பணிகளில் கவனம் செலுத்தினால் நல்லது. வேலையைப் பற்றி பேசினால், வேலையாக இருந்தாலும், வியாபாரமாக இருந்தாலும், இன்று கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். விற்பனை தொடர்பான வேலை செய்வோர், தங்கள் இலக்கை நிறைவேற்றுவதில் இன்று பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வர்த்தகர்கள் எந்தவொரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு முன்பு பழைய வேலையை முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சாதாரணமாக இருக்கும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:50 முதல் மாலை 4:20 மணி வரை

மீனம்

மீனம்

பணத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் கடன் வாங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில், உங்கள் மீதான அழுத்தம் வரும் நாட்களில் நிறைய அதிகரிக்கும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் வேலையில் அதிக மன அழுத்தத்தை எடுக்கக்கூடாது. அத்தகைய சூழ்நிலையில், வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. உங்கள் மனதை அமைதியாக வைத்திருப்பது மற்றும் நேர்மறையுடன் முன்னேறுவது நல்லது. வணிகர்கள் இன்று விவாதத்திலிருந்து விலகி இருப்பது நல்லது, இல்லையெனில், நீண்ட கால சட்ட சிக்கலில் சிக்கிக்கொள்ளலாம். உங்கள் மன அமைதியை பராமரிக்க விரும்பினால், தினமும் தியானம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 23rd June 2021 Wednesday In Tamil

Check out the daily horoscope for 23rd june 2021 wednesday in tamil. Read on.
Story first published: Wednesday, June 23, 2021, 5:00 [IST]