For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு பணவரவு இருக்கு - செலவு யாருக்கு?

|

இன்றைக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பொறுத்து, இன்னைக்கு நம்ம லைஃப்ல என்ன நடக்கும், கடவுளோட கருணை பார்வை நம்ம பக்கம் திரும்புமா? யாருக்கெல்லாம் நல்லா இருக்கு, பணவரவு யாருக்கு வரும். செலவு ஏதாவது வந்து கழுத்தை பிடிக்குமா? யாரெல்லாம் பிரச்சினையை சந்திப்பீங்க அப்படின்னு தெரிஞ்சுக்கணுமா? ராசிபலனை படிங்க உங்க கேள்விக்கு விடை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு பணவரவு நல்லா இருக்கும். அது மாதிரியே இன்னிக்கு உங்களோட வருமானமும் கூடும். அதனால உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்ப வலுவா இருக்கும்.உங்க ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு ஜோரா இருக்கும். மேரேஜ் லைஃப் ரொம்ப ஹேப்பியா இருக்கும். உங்க ஒய்ஃப நீங்க ரொம்ப ஆழமா லவ் பண்றீங்க. பழைய நினைவுகள்ள நீங்க அப்படியே மூழ்கி போயிடுவீங்க. அதே சமயத்துல உங்க குழந்தைங்க சைடுல இருந்து சில பிரச்சனைங்க வர வாய்ப்பிருக்குது. அவங்க உங்க பேச்சை கேட்கலைங்குறது உங்களுக்கு சங்கடமா இருக்கலாம். இருந்தாலும் கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. உங்க சொந்தக்காரங்க உங்களைப் பத்தி தப்பா நினைக்க வாய்ப்பிருக்குது. அதனால கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு உங்களுக்கு அருமையான நாளா அமையும். உங்களோட முன்னேற்றதுக்கு தடையா இருந்த எல்லா விஷயங்களும் இன்னிக்கு காணாம போயிடும். அந்த உற்சாகத்துல அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேணாம். ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு அருமையா இருக்கும். உங்க ஒய்ஃபுக்கு நீங்க திடீர்னு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒண்ணு கொடுக்க வாய்ப்பிருக்குது. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு அருமையான நாளா இருக்கும். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த பிரச்சனைங்க காணாம போயி சமாதானம் ஆகிடுவீங்க. ஃபேமிலி லைஃப் நல்லா இருக்கும். உங்க கூடப்பிறந்தவங்க பெருசா சாதிக்க வாய்ப்பிருக்குது. அது வீட்டு சூழ்நிலையையும் சந்தோஷமா மாத்திடும்.

அதிர்ஷ்ட நிறம் : சாஃப்ரூன்

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : பிற்பகல் 3:00 முதல் இரவு 9:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

ரொம்ப நாளா இழுபறியா இருந்து வந்த சட்ட சிக்கல் இன்னிக்கு முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். ஃபைனான்ஸ் பொசிஷனும் இன்னிக்கு நல்லா இருக்கும். புது பிசினஸ் அல்லது இன்வெஸ்ட்மெண்ட் நல்ல லாபத்தை கொடுக்கும். அதனால இன்னிக்கு ரொம்ப அதிர்ஷ்டகரமான நாளா ஃபீல் பண்ணுவீங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு சந்தோஷமான செய்தி வர வாய்ப்பிருக்குது. மேரேஜ் கப்பிள் வைராக்கியத்தோட லைஃபை நகர்த்துவீங்க. உங்க ஒய்ஃப் ரொம்ப உணர்ச்சிவசப்படுவாங்க. குடும்பத்துலேயும் அன்பும் அரவணைப்பும் கூடும். கோவில் குளம்னு போய்ட்டு வருவீங்க. சாயந்திர நேரத்துல ஃபேமிலியோட எங்கேயாவது வெளியில போய்ட்டு வரவும் வாய்ப்பிருக்குது.

அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : காலை 6:30 முதல் மாலை 4:00 மணிவரை

கடகம்

கடகம்

வேலை விஷயத்துல கவனமா இருக்க வேண்டிய நாள். கஷ்டப்பட்டு சின்சியரா வேலை பார்த்தால் தான் பாக்கி இல்லாம வேலையை முடிக்க முடியும். மேரேஜ் லைஃபும் ஆனந்தமா இருக்கும். கல்யாணம்கிறது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதுன்னு ஃபீல் பண்ணுவீங்க. ரொம்ப கஷ்டமான சூழ்நிலையிலையும் உங்க ஒய்ஃப் உங்களுக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பாங்க. ஆனாலும், குடும்பத்தில இருக்குற மத்தவங்க உங்களுக்கு தொந்தரவு கொடுத்துகிட்டே இருப்பாங்க. வீட்டு பெரியவங்க கிட்ட கொஞ்சம் உக்காந்து பேசி அப்புறமா எந்த முடிவையும் எடுக்குறது நல்ல பலனை கொடுக்கும். இல்லேன்னா சிக்கலாகிடும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் நல்லாவே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 22

சாதகமான நேரம் : நண்பகல் 1:00 முதல் இரவு 10:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

பண விஷயத்துல இன்னிக்கு கொஞ்சம் இழுபறி தான் இருக்கும். நிலத்தை தொடர்பான பணப் பரிவர்த்தனையில கொஞ்சம் கவனமா இருக்குறது நல்லது. இல்லாட்டி நீங்க ஏமாற வாய்ப்பிருக்குது. அதனால டாக்குமெண்ட்டை கொஞ்சம் கவனமா அலசி ஆராய்ஞ்சி அதுக்கப்புறமா முடிவெடுங்க. ஆஃபீஸ் வேலையும் இன்னிக்கு அவசர கோலத்துல தான் இருக்கும். காரணம் நேத்து வேலையை முடிக்காம விட்டது இன்னிக்கு தொந்தரவா இருக்கலாம். அதனால கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலையை முடிக்க பாருங்க. பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு கொஞ்சம் சிக்கல் ஏற்படலாம். இருந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாவே இருக்கலாம். வெளியில போகும்போது எங்காவது நடக்குற சண்டையை வேடிக்கை மட்டும் பாருங்க. அதுல போயி மூக்கை நுழைச்சீங்கன்னா உங்க மூக்குதான் உடையும். இன்னிக்கு அதிகமா வேலை பாக்குறதுனால கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 20

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 10:30 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் ஓரளவு திருப்தியாவே இருக்கும். எக்ஸ்ட்ரா வருமானமும் உங்களை தேடி வர வாய்ப்பிருக்குது. அதோட உங்க இன்வெஸ்ட்மெண்ட்ல இருந்து லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. ஆஃபீஸ் வேலையிலும் உங்களுக்கு இருந்து வந்த இடைஞ்சல் காணாம போயி மனசு நிம்மதியாகிடும். அதனால உங்க ஃபேமிலியோட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணவும் வாய்ப்பிருக்குது. அதோட உங்களைப் பத்தி ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களைப் பத்தி புரிஞ்சிக்கிற மாதிரி நடந்துக்கோங்க. உங்க கூடப்பிறந்தவங்க உங்களைப் பத்தி தப்பா புரிஞ்சுக்குவாங்க. அவங்க கூட உக்காந்து பேசி பிரச்சனையை சரி பண்ணுவீங்க. மேரேஜ் லைஃபும் ஹேப்பியா நகரும். அந்த சந்தோஷம் உங்க முகத்துலயே தெரியும். அதனால உங்க வேலையையும் சீக்கிரமா முடிப்பீங்க. ஹெல்த் கண்டிஷனைப் பத்தி கவலையே இல்லாம இருக்குறது நல்லதில்லை.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் மாலை 6:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு உங்களோட கோவத்தை கொஞ்சம் கண்ட்ரோல்ல வச்சிக்கோங்க. இல்லேன்னா சிக்கல்ல கொண்டு போய் விட்டுடும். உங்க டயத்தை தேவையில்லா சண்டை போட்டு வீணடிக்காதீங்க. அத்தோட ஆஃபீஸ்லயும் நீங்க தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்றதுனால, வேலையும் பெண்டிங்ல நிக்கும். அதனால கடுப்பாகிற உங்க சீனியர் உங்களை கண்டிக்கவும் வாய்ப்பிருக்குது. அதனால வேலையை சின்சியரா பாருங்க. ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு ஏத்த இறக்கமா தான் இருக்கும். உங்க வருமானம் எதிர்பார்த்த மாதிரியே இருக்கும். ஆனாலும் செலவும் அதுக்கேத்த மாதிரி கூடும். என்ன தான் கஷ்டமான சூழ்நிலை இருந்தாலும் உங்க ஒய்ஃப் உங்களுக்கு ரொம்ப சப்போர்டிவா இருப்பாங்க. அதுவே உங்களுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்கிறது நிச்சயம். ஏதாவது பிரச்சனை வந்தா கூட ரெண்டு பேரும் சேந்தே அந்த பிரச்சனையை சால்வ் பண்ணுவீங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 19

சாதகமான நேரம் : அதிகாலை 5:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

உங்களுக்கு இன்னிக்கு நாள் அவ்வளவு நல்லதா இல்லை. பழைய நினைவுகள் உங்க மனசை கொஞ்சம் சஞ்சலப்படுத்தலாம். ஃபைனான்ஸ் பொசிஷன் சாதாரணமாவே இருக்கும். திடீர்னு வந்து நிக்கிற பெரிய செலவுனால உங்க பட்ஜெட்டுல துண்டு விழ வாய்ப்பிருக்குது. ஃபேமிலியில எல்லோருமே ரொம்ப நிம்மதியா ஃபீல் பண்ணுவாங்க. அதனால நீங்க உங்க ஒய்ஃப் கூட கொஞ்சம் தனியா இருக்க ஆசைப்படுவீங்க. உங்க ஒய்ஃபும் உங்களை புரிஞ்சிகிட்டு ரொம்ப அனுசரனையா இருப்பாங்க. இதுல இருந்தே அவங்க உங்களை எவ்வளவு லவ் பண்றாங்கன்னு புரிஞ்சிக்கோங்க. அதனால அவங்ககிட்ட சண்டை போடாம அவங்களை புரிஞ்சி நடந்துக்க முயற்சி பண்ணுங்க. உங்க ஹெல்த் கண்டிஷனம் இன்னிக்கு அவ்வளவு நல்லா இல்லை.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : அதிகாலை 5:30 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு நீங்க பாக்குற வேலையில ஏகப்பட்ட இடைஞ்சல் ஏற்பட வாய்ப்பிருக்குது. அதோட உங்க சீனியரும் உங்களுக்கு குடைச்சல் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. அதனாலயும் நீங்க ரொம்ப டென்ஷனா இருப்பீங்க. அவசரப்பட்டு சில தப்பையும் செய்ய வாய்ப்பிருக்குது. கவனமா வேலை பார்க்காட்டி சிக்கலாகிடும். பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லாததுனால, பெரிய ரிஷ்க் எடுக்குறதை அவாய்ட் பண்றது நல்லது. எந்த முடிவை எடுக்குறதா இருந்தாலும் ஃபேமிலியில இருக்குற பெரியவங்ககிட்ட உக்காந்து பேசி அவங்களோட ஐடியாவை கேட்டு நடக்குறது நல்லது. இல்லேன்னா அவங்களை நீங்க மதிக்காம நடக்குறீங்கன்னு தப்பா புரிஞ்சிக்குவாங்க. உங்க லைஃப் பார்ட்னரும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. இதனால ரெண்டு பேருக்கும் நடுவுல அந்நியோன்யம் ரொம்ப ஜாஸ்தியாகிடும். சின்னதா பணப் பிரச்சனை வர வாய்ப்பிருக்கு. கவனமா இருக்குறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : மாலை 4:20 முதல் இரவு 8:30 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு நீங்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க. அதனால இந்த நாளை ரொம்ப என்ஜாய் பண்ணுவீங்க. அந்த சந்தோஷம் உங்களை சுத்தி இருக்குறவங்களையும் தொத்திக்கும். ஆஃபீஸ்ல சில இடைஞ்சல் இருந்தாலும், அதை எல்லாத்தையும் ஈசியா தாண்டி வேலையை முடிப்பீங்க. உங்க ஒய்ஃப் கூட கலந்து பேசி ஃப்யூச்சருக்கு தேவையான ப்ளான் பண்ணலாம். பணத்துக்கு இன்னிக்கு எந்த குறையும் இல்லை. முக்கியமான வேலையை முடிக்கிறதுக்கு திடீர்னு வெளியூர் பிரயாணம் பண்ண வாய்ப்பிருக்குது. இருந்தாலும் அதுனால உங்களுக்கு பெனிஃபிட் தான். இன்னிக்கு உங்க வாழ்க்கையில முக்கியமான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கு. இருந்தாலும் அது உங்களுக்கு நல்லதாவே இருக்கும். அதனால அஞ்சாதீங்க. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனம் ரொம்ப நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 2

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 10:30 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு உங்களுக்கு நாள் அருமையா இருக்கும். பிசினஸ் பண்றவங்களுக்கு எதிர்பாத்த லாபம் கைக்கு கிடைக்க வாய்ப்பிருக்குது. இன்னிக்கு புதுசா பிசினஸ் அக்ரீமெண்ட் போடவும் வாய்ப்பிருக்குது. அதே சமயத்துல பழைய பிசினஸ் விஷயத்துல யார்கிட்டயாவது சண்டை போடவும் வாய்ப்பிருக்கு, கவனமா இருக்க பாருங்க. இல்லேன்னா தேவையில்லாம சட்ட சிக்கல்ல போய் மாட்டிக்குவீங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க இன்னிக்கு கொஞ்சம் கவனமா பொறுப்போட வேலையை பாருங்க. வீட்டுலயும் அமைதியான சூழ்நிலை தான் இருக்கும். ஆனாலும், உங்க ஒய்ஃப் மட்டும் கொஞ்சம் கடுப்பா நடந்துக்க வாய்ப்பிருக்கு. அதனால அவங்களை கொஞ்சம் தாஜா பண்ணி நடந்துக்க பாருங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு சாதாரண நாள் தான். இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன் பரவாயில்லை.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 31

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 7:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு நாள் உங்களுக்கு அருமையா இருக்கம். மனசும் அமைதியா இருக்கும். ஃப்ரெஷ்ஷா ஃபீல் பண்ணுவீங்க. பெண்டிங்ல இருக்குற வேலையை முடிக்கிறதுனாலயும் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணுவீங்க. குடும்பத்துலயும் எல்லாருமே அமைதியாவும் சந்தோஷமாவும் இருப்பாங்க. இன்னிக்கு நீங்க உங்க ஃபிரண்ட்ஸையும் சொந்தக்காரங்களையும் மீட் பண்ண வாய்ப்பிருக்குது. உங்க அப்பா அம்மா கிட்ட இருந்து ஸ்பெஷலா ஒரு கிப்ட் கிடைக்க வாய்ப்பிருக்கு. மேரேஜ் லைஃப் ரொம்ப சந்தோஷமா நகரும். உங்க ஒய்ஃபும் உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு ஒரு நல்ல வாய்ப்பு காத்திட்டு இருக்கு. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு லாபம் அதிகமா கிடைக்கும். இன்னிக்கு நீங்க எடுக்குற முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்கிறதை நம்புங்க. ரிசல்ட்டும் நல்லதாவே கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : நண்பகல் 1:00 முதல் இரவு 8:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 22nd November 2019 Friday

Check out the daily horoscope for 22nd november 2019 thursday. Read on...
Story first published: Friday, November 22, 2019, 6:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more