Latest Updates
-
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்!
சுக்கிரனின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை தான்...
வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானின் ஆசியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமழை பொழியப்போகிறது. பணம் வருமானம் சிலருக்கு அபரிமிதமாக இருக்கும். சிலருக்கு திடீர் செலவுகளும் வரும்.
வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானின் ஆசியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமழை பொழியப்போகிறது. பணம் வருமானம் சிலருக்கு அபரிமிதமாக இருக்கும். சிலருக்கு திடீர் செலவுகளும் வரும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு திடீர் யோகம் வரும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ், வியாபாரம் சம்பந்தமா வெளியாட்கள் கிட்ட பேசும்போது கொஞ்சம் பக்குவமா, நிதானமா பேசி முடிக்குறது நல்லது. காரசாரமான உணவு பதார்த்தங்களை அவாய்ட் பண்ணிடுங்க. லவ் பண்றவங்க எச்சரிக்கையோட பழகுறது நல்லது. இன்னிக்கு பண வரத்து கூடுதலா இருந்தாலும், அதை விட செலவு ரெட்டிப்பா இருக்கும். உங்க பேச்சுக்கு சமுதாயத்துல நல்ல மதிப்பு இருந்தாலும், எதையும் யோசிக்காம பேசி மத்தவங்க மனசை புண்படுத்த வேணாம்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம் : மாலை 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்னிக்கு சொந்தக்காரங்க கூட பேசும் போது கொஞ்சம் பக்குவமா பதில் சொல்ல பழகுறது நல்லது. கணவன் மனைவிக்கு நடுவுல சின்னதா மன வருத்தம் வந்து போகும். குடும்பத்துல இருக்குறவங்க கூட சண்டை சச்சரவுகள் வரலாம். கவனமா இருங்க. உத்தியோகத்துல வேற ஒருத்தர் செஞ்ச தப்புக்கு நீங்க பழி ஏத்துக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். எச்சரிக்கையா இருக்குறது நல்லது. இன்னிக்கு தாராள பண வரத்து இருக்கும். மனசு சஞ்சலப்பட்டாலும், ஹெல்த் கண்டிஷன் இன்னிக்கு சிறப்பா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 9.20 மணி வரை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்னிக்கு உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க கிட்ட கொஞ்சம் தன்மையா பேசி பழகுறது நல்லது. எதையுமே எடுத்தேன், கவிழ்த்தேன்னு இல்லாம நல்லா யோசிச்சி பேசுங்க. வெளியூர் பிரயாணத்துனால வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்களோட பொருட்களை பத்திரமா பாத்துக்கோங்க. பிசினஸ்ல வருமானம் அதிகரிக்கும். இன்னிக்கு உங்க வரவுக்கு ஏத்த மாதிரி செலவும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6 மணி இரவு 11 மணி

கடகம்
கடக ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்பத்துல இருக்குறவங்க கூட பேசும்போது விட்டுக்கொடுத்து தன்மையா நடந்துக்குறது நல்லது. கணவன் மனைவிக்கு நடுவுல வீண் வாக்குவாதம் வரலாம். நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்துக்கோங்க. வியாபாரத்துல லாபம் அதிகமா இருக்கும். இன்னிக்கு வரவுக்கு ஏத்த செலவும் வந்துடும். நம்மால எதையும் சாதிக்க முடியும்கிற தன்னம்பிக்கையும், உறுதியும் இருக்குறதுனால, மன தைரியம் கூடும். எடுக்குற முயற்சிகளும் இன்னிக்கு வெற்றிகரமா முடியும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம் : காலை 4.15 மணி மாலை 5 மணி

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, புது வேலை தேடுறுவங்களுக்கு நல்ல இடத்துல வேலை கிடைக்கும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரிகள் கூட வீண் வாக்குவாதங்களை அவாய்ட் பண்றது நல்லது. அதே மாதிரி உங்களுக்கு கீழ வேலை பாக்குறவங்க பண்ற தப்பை பாத்து கடுப்பானாலும், தன்மையா பேசி எடுத்து சொல்லுங்க. பழைய கடன் பாக்கிகளை வசூலிக்கிறதுல இன்னிக்கு கூடுதல் முனைப்பா இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட நம்பர் 22
அதிர்ஷ்ட நேரம் : காலை 6.15 மணி பிற்பகல் 1.40 மணி

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்க கூட வீண் சண்டை சச்சரவுகள் வரலாம். கொஞ்சம் எச்சரிக்கையா நடந்துக்கோங்க. லவ் பண்றவங்க பேசும்போது பழைய நினைவுகளை பேசி அசை போடுவீங்க. அப்பா மற்றும் பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது. கணவன் மனைவிக்கு நடுவுல அந்நியோன்யம் கூடும், ஆனாலும் திடீர்னு சண்டை, சச்சரவுன்னு வரலாம். கவனமா இருங்க. எதிர்பாக்காம திடீர் செலவு வரலாம்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.30 மணி மாலை 6 மணி

துலாம்
துலா ராசி நேயர்களே, இன்னிக்கு வீட்டுலயும், ஆஃபீஸ்லயும் கொஞ்சம் அமைதியா நடந்துக்குறது நல்லது. கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல வீட்டை விட்டு வெளிய போகாம இருக்க பாருங்க. உத்தியோகத்துல சில பேருக்கு வெளியூருக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைக்கலாம். உஷ்ணம் சம்பந்தமான நோய் வரலாம். எச்சரிக்கையா இருங்க. சரியான டயத்துக்கு சாப்பிடுங்க. இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, அநாவசிய அலைக்கழிப்புகள் வரலாம். பணம் கொடுக்கல் வாங்கல்ல கூடுதல் எச்சரிக்கையா நடந்துக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நேரம் : காலை 10.35 மணி இரவு 7 மணி

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்னிக்கு குடும்ப வாழ்க்கை கலகலப்பா நகரும். உத்தியோகத்துல வேலைச் சுமை அதிகமா இருக்கும். கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு இனிமையான நாளா இருக்கும். பிசினஸ் சம்பந்தமா வெட்டி அலைச்சல் ஏற்படலாம். கவனமா இருந்துக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி இரவு 8.30 மணி

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்னிக்கு பண விவகாரத்துல கொஞ்சம் எச்சரிக்கையா நடந்துக்கோங்க. வெளியூர் பிரயாணத்துனால வீண் அலைச்சலும் ஹெல்த் ப்ராப்ளமும் ஏற்படலாம். கவனமா இருங்க. ஃப்ரண்ட்ஸுங்க கூட பேசம்போது கொஞ்சம் நிதானமா பேசி பழகுங்க. சாமர்த்தியமா பேசி பழகுனா உங்களுக்கு தான் லாபம். கடன் பிரச்சனையும் இன்னிக்கு காணாம போகும். கணவன் மனைவிக்கு நடுவுல உண்டான பிரச்சனை சரியாகிடும். குடும்பச் செலவுகளும் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
அதிர்ஷ்ட நேரம் : மாலை 3 மணி இரவு 7 மணி

மகரம்
மகர ராசி நேயர்களே, இன்னிக்கு பிசினஸ், வியாபாரத்துல நல்ல லாபமும் இம்ப்ரூவ்மெண்ட்டும் உண்டாகும். சொந்தக்காரங்க மூலமா மனசு சந்தோஷப்படுற மாதிரியான தரமான சம்பவங்கள் நடந்துடும். நகை நட்டு, வண்டி, வாகனம் வாங்குற யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களை விக்குறதுக்கு இன்னிக்கு முயற்சி பண்ணினா வெற்றி கிடைக்கும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 23
அதிர்ஷ்ட நேரம் : காலை 5 மணி மாலை 5 மணி

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இன்னிக்கு வேலை தேடுற முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். மத்தவங்களால முடியாத வேலையை ரொம்ப கஷ்டப்பட்டு திறமையா செஞ்சி முடிப்பீங்க. குடும்பத்துலயும் மகிழ்ச்சி தாண்டவமாடும். பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்கு தேவையான பண உதவியும் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்துல இருந்து வந்த வேலைச்சுமை இன்னிக்கு குறையும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. இல்லேன்னா மருந்து மாத்திரைன்னு செலவழிக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 35
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 மணி 9.30 இரவு

மீனம்
மீன ராசி நேயர்களே, இன்னிக்கு உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கூடிடும். குடும்பத்துலயும் சுப காரிய நிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்ப வாழ்க்கையில எல்லோரும் சந்தோஷமா இருப்பீங்க. வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்குவீங்க. கணவன் மனைவிக்கு நடுவுல இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். உங்களோட தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். மொத்தத்துல இன்னிக்கு வெற்றிகரமான நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 3 மணி இரவு 9 மணி



Click it and Unblock the Notifications











