Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
இன்றைக்கு இந்த 4 ராசிக்காரங்க வீட்ல கவனமாக பேசுங்க இல்லாட்டி பிரச்சினை வரும்...
இன்னைக்கு எந்த ராசிக்காரங்க ஜெயிப்பாங்க, யாருக்கு இழப்பு ஏற்படும், பணவருமானம் யாருக்கு செலவு யாருக்கு வரும் அப்படின்னு நினைக்கிறீங்களா? இன்றைய ராசி பலன் பல தகவல்களை தரப்போகுது.
இன்னைக்கு எந்த ராசிக்காரங்க ஜெயிப்பாங்க, யாருக்கு இழப்பு ஏற்படும், பணவருமானம் யாருக்கு செலவு யாருக்கு வரும் அப்படின்னு நினைக்கிறீங்களா? இன்றைய ராசி பலன் பல தகவல்களை தரப்போகுது. நிதி நிலைமை, அன்பான உறவுகள், உடல் ஆரோக்கியம் இப்படி எத்தனையோ தகவல்களை பற்றி இன்றைய ராசி பலன்களைப் படிச்சு தெரிஞ்சுக்கங்க. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நடக்கப் போகுது என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்னிக்கு மதியத்துக்கு மேல சந்திரன் உங்க ராசிக்குள்ள வர்றதுனால மனசுல சின்னதா சஞ்சலம், குழப்பம் வரும். கவனமா இருக்க பாருங்க. உத்தியோகத்துலயும் உங்க உழைப்புக்கு ஏத்த சம்பளம், இன்க்ரிமென்ட் கிடைக்காது. அதுவே உங்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கிடும். பிசினஸ்ல இன்னிக்கு ஓரளவு இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். சமூகத்துல பெரிய மனுஷங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். இன்னிக்கு எந்த வேலையையும் துணிச்சலா செஞ்சா தான் ஜெயிக்க முடியும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 19
சாதகமான நேரம் : காலை 9:20 முதல் இரவு 10:20 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு பிள்ளைங்களோட படிப்புல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். வேலையில சீனியர் அதிகாரிங்களோட தொந்தரவு குறையும். வீட்டுல பெரியவங்களோட மனசுலயும் இடம் பிடிப்பீங்க. பிசினஸ்ல புதுசா கூட்டாளிங்க சேருவாங்க. இன்னிக்கு எதிர்பாக்காம பணவரத்து இருந்தாலும், மத்தியானத்துக்கு மேல தண்டச்செலவுங்க வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : காலை 6:00 முதல் முற்பகல் 11:25 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு உத்தியோகத்துல எதிர்பார்த்த ட்ரான்ஸ்பர் கிடைச்சாலும், இந்த சமயத்துல யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. பிள்ளைங்களும் உங்க பேரை காப்பாத்துறது மாதிரி நடந்துக்குவாங்க. பழைய கடன்களும் இன்னிக்கு வசூலாகிடும். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிடுவீங்க. வீட்டுலயும் சந்தோஷமான சம்பவங்களும் நடந்துடும். அதனால மனசும் ரிலாக்ஸ் ஆகிடும்.
அதிர்ஷ்ட நிறம் : லைட் பிங்க்
அதிர்ஷ்ட எண் : 5
சாதகமான நேரம் : காலை 9:00 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

கடகம்
இன்னிக்கு சொந்தக்காரங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைச்சிடும். பிசினஸ் சம்பந்தமா பெரிய மனுஷங்களை பாக்குறதுனால வியாபார வளர்ச்சிக்கும் உதவிடும். இன்னிக்கு பண வரத்து சுமாரா இருந்தாலும், கடன் பிரச்சனை ஓரளவுக்கு குறையும். இருந்தாலும் செலவுங்களை கண்ட்ரோல் பண்ணிக்குறது நல்லது. இன்னிக்கு பிள்ளைங்களால மன உளைச்சல் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண் : 43
சாதகமான நேரம் : காலை 7:00 முதல் இரவு 10:00 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு மத்தியானம் வரைக்கும் உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, பிசினஸ் சம்பந்தமா புதுசா எந்த முயற்சியும் எடுக்காம அமைதியா இருக்குறது நல்லது. அதோட, மத்தவங்க விஷயத்துலு அநாவசியமா தலையிடாம ஒதுங்கி இருக்குறது நல்லது. இல்லேன்னா மன உளைச்சல் ஏற்பட்டுடும். ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் மந்தமா தான் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 9
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் பிற்பகல் 2:30 மணிவரை

கன்னி
இன்னிக்கு உங்க ராசிக்கு மத்தியானத்துக்கு மேல சந்திராஷ்டமம் இருக்குறதுனால, எதுலயும் எச்சரிக்கையா இருக்கணும். அநாவசியாமா யார் கிட்டயும் வெட்டி பேச்சு பேசாம ஒதுங்கி இருக்குறது நல்லது. பிசினஸ்ல இருந்து வந்த எதிர்ப்புங்க காணாம போயி வருமானமும் கூடிடும். ரொம்ப நாளா எதிர்பாத்துட்டு இருந்த உதவி, ஒத்தாசை கிடைக்குறதுக்கு சந்தர்ப்பம் இருக்கு. புதுசா வேலை தேடுறவங்களுக்கு வேலை கிடைக்க சந்தர்ப்பம் இருக்கு. வீட்டுலயும் இன்னிக்கு சுபகாரிய செலவுங்க ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : பிற்பல் 3:00 முதல் மாலை 6:30 மணிவரை

துலாம்
இன்னிக்கு சொந்தக்காரங்க மூலமா நல்லது நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு. வீட்டுக்கு தேவையான புது சாமான்களையும் வாங்கிடுவீங்க. பிள்ளைங்க கூட இருந்து வந்த மனஸ்தாபம் மறையும். பிசினஸ்லயும் வேலையாட்கள் உங்களை புரிஞ்ச நடந்துக்குறதனால, எதிர்பாத்த மாதிரி வியாபாரம் நடந்து லாபம் அமோகமா இருக்கும். இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷனும் ரொம்ப நல்லா இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 22
சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 11:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு ஃப்ரண்ட்ஸுங்களை மீட் பண்றதுனால மனசு லேசாகிடும். சொந்தக்காரங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனும் கூடிடும். சுபகாரியம் சம்பந்தமா பேச்சு வார்த்தையில் யோசிச்சி பண்றது நல்லது. இன்னிக்கு ஹெல்த் கண்டிஷன் அக்கறை காட்டுங்க. இல்லேன்னா மருத்துவச் செலவுங்க வந்துடும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 23
சாதகமான நேரம் : பிற்பகல் 1:00 முதல் இரவு 9:00 மணிவரை

தனுசு
இன்னிக்கு கூடப்பொறந்தவங்க உங்களுக்கு ஒத்தாசையா இருப்பாங்க. வீட்டுலயும் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி நடந்துக்கிட்டா, அநாவசிய பிரச்சனைங்க வராம தவிர்த்துடலாம். இல்லேன்னா மனசுல நிம்மதியில்லாம போயிடும். பிசினஸ்ல எதிர்பாக்காம திடீர்னு தண்டச் செலவுங்க வந்துடலாம். இன்னிக்கு உங்களுக்கு தன வரத்தை விட தண்டச்செலவுங்க தான் ஜாஸ்தி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 29
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் பிற்பகல் 2:25 மணிவரை

மகரம்
இன்னிக்கு உங்களுக்கு இதுவரைக்கும் இருந்து வந்த கடன் பிரச்சனைங்க காணாம போகும். சேமிப்பும் கூடிடும். பெண்கள் வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குறதுல ஆர்வம் காட்டுவாங்க. குடும்பத்துலயும் எல்லோரும் ஒத்துமையா அமைதியா சந்தோஷமா இருப்பாங்க. உத்தியோக விஷயமா வெளியூர் பிரயாணம் பண்றதா இருந்தா, அவாய்ட் பண்ணிடுங்க. புதுசா தொழில் பண்ற முயற்சியில வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு பிள்ளைங்களால் வீட்டுல வீண் பிரச்சனைங்க வந்துடும். அதனா நீங்க கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போனா, பிரச்சனை பெருசாகாம அவாய்ட் பண்ணிடலாம். கோவில், குளம்னு ஈடுபாடு கூடிடும். உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு வருமானம் கூடுறதுக்கான வாய்ப்பு இருக்கு. நீங்க இன்னிக்கு எடுக்குற எல்லா முயற்சிங்களுக்கும் வெற்றி கிடைச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் நண்பகல் 12:20 மணிவரை

மீனம்
இன்னிக்கு தொழில் வளர்ச்சிக்காக நீங்க எடுக்குற எல்லா முயற்சிங்களுக்கும் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் பாக்குறவங்க சில பேருக்கு வெளியூர் பிரயாணம் பண்றதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும். இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்துல வெளியூர் பிரயாணம் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது. குடும்பத்துல ஒத்துமை கூடிடும். சுபகாரிய முயற்சிங்களும் கைகூடிடும். பிள்ளைங்களால மனசுக்கு சந்தோஷம் கொடுக்குற செய்தி உங்க காதுக்கு வந்துடும். பணத்தை யோசிக்காம செலவழிச்சா பட்ஜெட்ல துண்டு விழ வாய்ப்பிருக்கு. அதனால யோசிச்சி செலவழிங்க. ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு அவ்வளவு நல்லா இல்லை.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 8:05 மணிவரை



Click it and Unblock the Notifications