Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
இன்றைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாள் தெரியுமா?
சந்திரன் இன்றைய தினம் கடகம் ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இந்த சஞ்சாரத்தினால் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் வீண் பேச்சுக்களை தவிர்க்கவும்.
தினசரி ராசி பலன்கள் சந்திரனை அடிப்படையாக வைத்தே சொல்லப்படுகிறது. சந்திரன் இன்றைய தினம் கடகம் ராசியில் பயணிக்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசிபலன்களை பார்க்கலாம். இன்றைய தினம் பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கிறார்.

12 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டமான நிறம், அதிர்ஷ்டமான எண்களை பார்க்கலாம். இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு ரொமான்ஸ் ஆன நாட்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்
உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சந்திரன் பயணிக்கிறார். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பழைய நினைவுகளால் மனதில் இருந்துவந்த கவலைகள் மறையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். புதிய நண்பர்களிடம் பேசும்போது நிதானத்துடன் இருக்கவும். தொழில் தொடர்பான வாய்ப்புகளில் சாதகமான சூழல் அமையும். சுகமான நாள் என்றாலும் அம்மாவின் உடம்பில் கவனம் அவசியம். அதிர்ஷ்ட எண் 5, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

ரிஷபம்
சந்திரன் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் பயணிக்கிறார். இளைய சகோதரர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். தொழில் சார்ந்த அலைச்சல்களும், பதற்றமும் தோன்றி மறையும். பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அதிர்ஷ்ட எண் 7, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

மிதுனம்
சந்திரன் இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் வர்த்தகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பணி உயர்வு சாதகமாக அமையும். இன்றைக்கு உங்க பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும். ராசியான எண் 6, ராசியான எண்கள் வெள்ளை நிறம்.

கடகம்
உங்க ராசி அதிபதி சந்திரன் உங்க ராசியில் பயணிக்கிறார். போட்டிகளில் பங்கு பெற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். உடல் சோர்வும், மன அழுத்தமும் குறையும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவு கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் சாதகமாகும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். உங்க லக்கி நம்பர் 3, லக்கியான நிறம் இளம் பச்சை.

சிம்மம்
சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணிக்கிறார். பிள்ளைகளின் மூலம் பெருமைப்படக்கூடிய செயல்கள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தந்தை பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சிறு தூர பயணங்கள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தும், இன்றைக்கு விரைய செலவுகள் ஏற்படும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். ராசியான எண் 8, ராசியான நிறம் நீலம்.

கன்னி
சந்திரன் உங்க ராசிக்கு லாபத்தில் பயணிப்பதால் செய்யும் தொழிலில் லாபம் வரும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனக்கவலைகள் குறையும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டு பணிகளை இனிதே செய்து முடிப்பீர்கள். ராசியான எண் 4, ராசியான நிறம் ஊதா நிறம்.

துலாம்
சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணிக்கிறார். செய்யும் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களுடன் தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். ராசியான எண் 6, அதிஷ்ட நிறம் இளம் மஞ்சள்.

விருச்சிகம்
சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதால் வீட்டில் பயணிக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் பயணிக்கும் சந்திரனால் எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாது எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். வாகனப் பயணங்களால் மாற்றம் பிறக்கும். பதவியில் மாற்றம் சம்பள உயர்வுடன் கூடிய பதவியில் இடமாற்றம் ஏற்படும். ராசியான எண் 4, ராசியான நிறம் பச்சை.

தனுசு
சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணிக்கிறார். இன்றைக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மவுன விரதம் இருப்பது நல்லது. பேச்சுக்களில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். உத்தியோகம் சார்ந்த முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது தோன்றி மறையும். மன தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். மிளகு சேர்த்த உணவை சாப்பிடுங்கள்.

மகரம்
சந்திரன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணிக்கிறார். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். குடும்பத்தில் புதியவர்களின் அறிமுகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். ராசியான எண் 5 ராசியான நிறம் இளம் பச்சை.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணிக்கிறார். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். நண்பர்களுடன் இணைந்து விருந்துகளில் பங்கேற்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். ராசியான எண் 9, ராசியான நிறம் க்ரே.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணிக்கிறார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. உங்க பூர்விக சொத்துக்கள் மூலம் வருமானம் வரும். உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். நினைவாற்றல் மேம்படும். செயல்பாடுகளினால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும்.



Click it and Unblock the Notifications