இன்னைக்கு இந்த ராசிக்காரங்க எல்லாம் ஆபிஸ்ல அசால்டா இருக்காதீங்க...

இன்னைக்கு நம்ம லைஃப்ல என்ன நடக்கும், கடவுளோட கருணை பார்வை நம்ம பக்கம் திரும்புமா? பணம் வருமா? செலவு ஏதாவது வந்து கழுத்தை பிடிக்குமா அப்படின்னு யோசிக்கிறீங்களா? இதோ இன்றைய ராசிபலன்களை படிங்க..

இன்னைக்கு நம்ம லைஃப்ல என்ன நடக்கும், கடவுளோட கருணை பார்வை நம்ம பக்கம் திரும்புமா? பணம் வருமா? செலவு ஏதாவது வந்து கழுத்தை பிடிக்குமா அப்படின்னு யோசிக்கிறீங்களா? இதோ இன்றைய ராசிபலன்களை படிங்க உங்களுக்கு எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு உங்களுக்கு நாள் அவ்வளவு நல்லா இல்லை. குறிப்பா ஆஃபீஸ்ல வேலை விஷயத்துல பெரிய சவால் காத்துகிட்டிருக்குது. அதனால எதுலயும் அலட்சியமா இருக்காதீங்க. இல்லேன்னா உங்க முதலாளி உங்களை கூப்பிட்டு வார்ன் பண்ற நிலைமை ஏற்படும் ஜாக்கிரதையா இருக்குறது நல்லது. அதனால பேசாம இந்த வேலையை விட்டுடலாமான்னு கூட தோணும். ஆனா அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் நார்மலாவே இருக்கும். இருந்தாலும் செலவு வந்து வரிசை கட்டி நிக்கும். அதனால எந்த செலவா இருந்தாலும் யோசிச்சி செலவு பண்ணுங்க. இல்லாட்டி பின்னாடி சிக்கலாகிடும். ஃபேமிலியிலயும் இன்னிக்கு பெருசா ஒரு பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பு இருக்குது. உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லோரும் உங்களுக்கு எதிராவே இருப்பாங்க. இருந்தாலும் உங்க ஒய்ஃப் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. அது உங்களுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் பாதிக்கப்படலாம். ஏகப்பட்ட டென்ஷன்னால சின்னதா தலைவலி கூட வர வாய்ப்பிருக்குது.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 8

சாதகமான நேரம் : அதிகாலை 4:20 முதல் நண்பகல் 12:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு உங்களுக்கு நாள் அமோகமா இருக்கும். வீட்டுக்கு தேவையான காஸ்ட்லியான பொருள் ஒண்ணு வாங்கலாம். அதனால ஃபேமிலியிலயும் எல்லோரும சந்தோஷமா இருப்பாங்க. எல்லோருமே அந்நியோன்மா ஒற்றுமையா இருப்பாங்க. ஃபேமிலி சம்பந்தப்பட்ட முக்கியமான வேலையையும் இன்னிக்கு நீங்க முடிச்சிடுவீங்க. உங்க ஒய்ஃபும் உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க. அதுவே உங்களுக்கு கூடுதல் சந்தோஷத்தை தரும். முக்கிய வேலையை முடிக்க உங்க ஒய்ஃபும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. படிக்குற பசங்க இன்னிக்கு படிப்புல கவனம் செலுத்தாம சுத்துனா, எக்ஸாம்ல பாஸ் பண்ண முடியாதுங்கிறதை மனசுல நெனச்சிக்கிட்டு படிங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 10

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 9:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு நீங்க ஃபைனான்ஸ் மேட்டர்ல ரொம்ப அக்கறை காட்டுவீங்க. திடீர்னு ஏற்படுற செலவுனால பட்ஜெட் தாறுமாறா எகிறும். அதை நினைச்சி கவலைப்பட்டுகிட்டு இருக்காதீங்க. நீங்க பிசினஸ் பண்றவரா இருந்தா, இன்னிக்கு புதுசா எந்த ஒரு வேலையையும் ஆரம்பிக்காதீங்க. அதே சமயம் வேலை பாக்குறவங்க வேலையை ஒழுங்கா பாருங்க. இல்லேன்னா வேலையில சிக்கல் உண்டாகிடும். ஃபேமிலி லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போகும். இன்னிக்கு உங்க ஒய்ஃப் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வாய்ப்பிருக்குது. ரொம்ப காலமா இருந்துவந்த தாத்தா காலத்து சொத்து பிரச்சனை இன்னிக்கு முடிவுக்கு வரும். ஒருவேளை அது உங்களுக்கு பாதகமா வந்தா கவலைப்பட்டோ, ஆத்திரப்பட்டோ வார்த்தையை விட்டுறாதீங்க. அப்புறம் பிரச்சனை பெருசாகிட வாய்ப்பிருக்குது. இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனும் கொஞ்சம் டல்லா தான் இருக்குது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 30

சாதகமான நேரம் : மாலை 5:50 முதல் இரவு 8:00 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க தன்னோட டேலண்ட்டை நிரூபிக்க சந்தர்ப்பம் கிடைக்கும். உங்க முதலாளி உங்களுக்கு தனிப்பட்ட முறையில ஒரு வேலையை உங்ககிட்ட ஒப்படைக்கலாம். அதை நல்லவிதமா முடிச்சி கொடுத்தீங்கன்னா உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு காத்துக்கிட்டு இருக்கு. வேலையில ப்ரமோஷன் கிடைக்கலாம். மேரேஜ் லைஃப்ல இன்னிக்கு சில சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்குது. அதனால உங்க நாக்கை கொஞ்சம் கண்ட்ரோல பண்ணி வச்சிக்கோங்க. இல்லேன்னா உங்க ஒய்ஃப் கூட சின்னதா வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதனால அவங்க என்ன நெனைக்கிறாங்கன்னு மொதல்ல புரிஞ்சி நடந்துக்கோங்க. இன்னிக்கு செய்யுற வேலையை முழுமூச்சோட நம்பிக்கையோட செஞ்சீங்கன்னா வெற்றி உங்களுக்கு தான். இன்னிக்கு கூடுமானவரை முக்கியமான முடிவுகளை நீங்களே எடுங்க. ஹெல்த் கண்டிஷன் நல்லா இருக்கு.

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 23

சாதகமான நேரம் : காலை 9:10 முதல் நண்பகல் 12:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு நீங்க ரொம்ப நல்ல மூடுல இருப்பீங்க. ஃப்ரண்ட்ஸ் கூட ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. அதுக்கா உங்க கைகாசையும் செலவு பண்ணுவீங்க. உங்க ஒய்ஃப் கூட ரிலேசன்ஷிப் ஸ்மூத்தா நகரும். உணர்ச்சிவசப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காதீங்க. அப்படி வாக்குறுதி கொடுத்தீங்கன்னா அப்புறம் பின்னாடி வருத்தப்படுவீங்க. இன்னிக்கு ஃபைனான்ஸ பொசிஷன் நல்லா இருக்கும். திடீர்னு எங்க இருந்தாவது பணம் வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. அதனால ஃபேமிலி டென்ஷனும் குறைஞ்சி வீட்டுல அமைதியான நிலைமை இருக்கும். ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்கும். வேற வேலைக்கு ட்ரை பண்ணி நினைச்சா இன்னிக்கு முயற்சி பண்ணி பாருங்க. ஜெயிக்க சான்ஸ் இருக்கு. படிக்குற பசங்களுக்கு இன்னிக்கு நாள் அமோகமா இருக்கு. பரீட்சையில ஜெயிக்கவும் வாய்ப்பிருக்குது.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் மாலை 6:00 மணிவரை

கன்னி

கன்னி

பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் நல்லா இருக்குது. இன்னிக்கு பிசினஸ்ல ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சி நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கு. அதனால தவறாம அந்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோங்க. இன்னிக்கு உங்க ஹெல்த்ல அக்கறை காட்டுறது நல்லது. மேரேஜ் லைஃப்ல சில நல்ல விஷயம் நடக்க வாய்ப்பிருக்குது. ரொம்ப நாளா உங்க ஒய்ஃப் கூட இருந்த சண்டை இன்னிக்கு முடிவுக்கு வரும். ஊடல் குறைஞ்சி கூடல் ஜாஸ்தியாகும். லவ் பண்றவங்க சந்தேகப்படுறதை அவாய்ட் பண்ணுங்க. லவ்வுக்கு முக்கியம் நம்பிக்கை தான்கிறதை புரிஞ்சி லவ் பண்ணுங்க. பணவரவு இன்னிக்கு நல்லா இருக்கும். இருந்தாலும் செலவு பண்ணும்போது, அந்த செலவு அவசியமான்னு யோசிச்சி செலவு பண்றது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : காலை 7:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு ஆஃபீஸ்ல உங்களுடைய நிலைமை கொஞ்சம் ஏறுக்கு மாறா தான் இருக்கு. இருந்தாலும் கொஞ்சம் கவனமா இருந்து கஷ்டப்பட்டு வேலையை முடிச்சி டார்கெட்டை அச்சீவ் பண்ற வழியை பாருங்க. கிரக நிலையும் உங்களுக்கு சாதகமாவே இருக்கு. அதனால எதுக்கும் கவலைப்படாதீங்க. மேரேஜ் லைஃப்ல இன்னிக்கு கொஞ்சம் சவால் இருக்கு. உங்க ஒய்ஃப் கூட சின்னதா வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பிருக்கு. இது உங்களோட டென்ஷனை இன்னும் கூட்டும். ஃபைனான்ஸ் பொசிஷன் இன்னிக்கு ரொம்ப நல்லா இருக்கும். அதனால பணத்தை பத்தின கவலை வேண்டாம். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷனம், மென்ட்டல் டிப்ரஷன் இல்லாம நார்மலா இருக்கும். அதனால ரொம்ப சுறுசுறுப்பா இருந்து எது வந்தாலும் ஒரு கை பாத்துடலாம்கிற துணிச்சலோட இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 26

சாதகமான நேரம் : காலை 10:30 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

நீங்க பிசினஸ் பண்றவரா இருந்தா இன்னிக்கு உங்களுக்கு கொழுத்த லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. இதனால நீங்க முன்னாடியே ப்ளான் பண்ணி வச்சிருக்குற வேலையையும் முடிக்க உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். ஃபேமிலியிலயும் இன்னிக்கு நிலவரம் உங்களுக்கு சாதகமா இல்லைன்னு தெரியுது. ஃபேமிலி மெம்பர்ஸும் உங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி தெரியலை. குறிப்பா உங்க ஒய்ஃப் உங்களை வச்சி செய்யுறதுக்கு வாய்ப்பிருக்குது. கவனமா இருங்க. அதனால உங்க ஒய்ஃப் கூட உக்காந்து பேசி பிரச்சனையை முடிக்க பாருங்க. லவ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் சுமாரா தான் இருக்கு. அதனால ரெண்டு பேரும் உக்காந்து பேசி ரெண்டு பேரும் என்ன நினைக்கிறீங்கன்னு மனசு விட்டு பேசங்க. பண விஷயத்துல கொஞ்சம் அக்கறை காட்டுங்க. இல்லாட்டி உங்களை சிக்கல்ல கொண்டு போய் விட்டுடும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : காலை 10:00 முதல் இரவு 7:00 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு ஃபைனான்ஸ் பொசிஷனை பொறுத்த வரை, திடீர்னு எங்கிருந்தாவது பணம் வர்றதுக்கு சான்ஸ் இருக்குது. இருந்தாலும் செலவு அதுக்கு மேல வந்து உங்க பட்ஜெட்டை பதம் பாக்கும். அதனால பண்ற செலவை யோசிச்சி பண்றது நல்லது. உங்க வேலை பிஸியில உங்க ஒய்ஃபை கண்டுக்காம விட்டீங்கன்னா, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சிக்கல் உண்டாகிடும். அதனால கொஞ்சம் கவனமா இருங்க. எங்கயாவது வெளியில கூட்டிட்டு போய் அவங்களை சந்தோஷப்படுத்துங்க. அப்புறம் ரொம்ப கூல் ஆகிடுவாங்க. வீட்டு பொறுப்புகள் உங்களுக்கு டென்ஷன் உண்டாக்கலாம். இருந்தாலும் உங்க ஒய்ஃப் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பாங்க. இன்னிக்கு உங்களோட சாப்பாட்டு விஷயத்துல கொஞ்சம் கவனம் செலுத்துங்க. இல்லாட்டி பெட்டுல படுக்கவேண்டியதிருக்கும். அதனால நேரத்துக்கு நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு உடம்பை கவனிச்சிக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 16

சாதகமான நேரம் : காலை 7:15 முதல் பிற்பகல் 2:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு நீங்க வேலையில ஒழுங்கா கவனம் செலுத்த மாட்டீங்க. ஆஃபிஸ்ல ஏதாச்சும் பிரச்சனை இருந்தா உங்க சீனியர் கூட உக்காந்து பேசி பிரச்சனையை சரி பண்ற வழியை பாருங்க. அவங்க உங்களுக்கு நிச்சயமா ஹெல்ப் பண்ணுவாங்க. ரொம்ப ஓவரா திங்க் பண்ணுனீங்கன்னா அப்புறம் சிக்கல்ல மாட்டிக்குவீங்க. இந்த மாதிரியான சந்தர்ப்பத்துல கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசனை பண்ணி தைரியத்தோட வேலையை பாருங்க. இன்னிக்கு உங்களோட ஃபைனான்ஸ் பொசிஷனும் நல்லாவே இருக்கும். பணம் வர்ற வழியில எந்த சிக்கலும் ஏற்படாது. அதனால வர்ற பணத்தை உருப்படியா எதுலயாச்சும் இன்வெஸ்ட் பண்ற வழியை பாருங்க. ஃபேமிலி லைஃப் ரொம்ப நார்மலா நகரும். உங்க ஒய்ஃப் கிட்ட கூடல் ஜாஸ்தியாகும். இன்னிக்கு உங்க ஹெல்த் கண்டிஷன் நல்லா இருந்தாலும் மனசுல ஏதோ ஒரு பாரம் வந்து அழுத்திக்கிட்டே இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : காலை 7:45 முதல் நண்பகல் 12:00 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு நீங்க பண விஷயத்துல கொஞ்சம் கண்ட்ரோலா இருக்க பாருங்க. உங்க தாராள மனசை அவங்களுக்கு சாதகமா பயன்படுத்த பார்ப்பாங்க. அதுக்கு இடம் கொடுத்துடாதீங்க. எந்த முடிவை எடுத்தாலும் நீங்களே எடுங்க. யார் என்ன ப்ரஷர் கொடுத்தாலும், அதையெல்லாம் மனசுல வச்சிக்காம உங்க முடிவுல உறுதியா இருங்க. இன்னிக்கு வேளி வேலையில கொஞ்சம் பிஸியா இருப்பீங்க. பார்ட்னர்ஷிப் பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு நாள் பிரயோஜனமா இருக்கும். உங்க தனிப்பட்ட பிரச்சனையை பிசினஸ் பிரச்சனையோட சேத்து குழ்ப்பிக்காதீங்க. இல்லேன்னா பெரிய பிரச்சனையில கொண்டுட்டு போய் விட்டுடும். இன்னிக்கு மத்தியானத்துக்கு அப்புறமா நாள் ரொம்ப நல்லா இருக்கும். நடக்குற எல்லா விஷயங்களும் உங்களுக்கு ஃபேவராவே நடந்து எல்லாமே சக்ஸஸ்ஃபுல்லா முடியும். நீங்க கஷ்டப்பட்டு வேலை செய்யுறது வீண் போகாதுங்கிறது உறுதி. ஹெல்த் கண்டிஷனம் நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 18

சாதகமான நேரம் : காலை 8:30 முதல் மாலை 6:00 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு சின்னசின்ன விஷயங்களும் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். நீங்க கஷ்டப்பட்டு வேலை பாக்குறதை உங்களோட முதலாளியும் பாத்துக்கிட்டுதான் இருக்காரு. உங்களோட வேலை அவரை ரொம்ப இம்பரஸ் பண்ணிடும். அதனால அவர் ஒரு முக்கியமான பொறுப்பையும் உங்ககிட்ட ஒப்படைக்கலாம். அந்த வேலை ஆரம்பத்துல சின்னதா சிக்கலை உண்டாக்கினாலும் பின்னாடி போகப்போக வெற்றி உங்களுக்கு தான். பிசினஸ் பண்றவங்க இன்னிக்கு நாள் நல்லா இருக்கும்னு எதிர்பார்க்கலாம். புதுசா பிசினஸ் ஆரம்பிக்க நினைச்சா, இன்னிக்கு தாராளமா ஆரம்பிக்கலாம். அதுல நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. அதனால உங்களோட பிசினஸும் நல்லா டெவலப் ஆகிடும். ஃபைனான்ஸ் பொசிஷனும் ஸ்ட்ராங் ஆகிடும். மேரேஜ் லைஃப் ரொம்ப ஹேப்பியா நகரும். ஒய்ஃப் கூட நெருக்கம் ஜாஸ்தியாகிடும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 33

சாதகமான நேரம் : நண்பகல் 1:05 முதல் மாலை 5:00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, November 21, 2019, 6:00 [IST]
Desktop Bottom Promotion