For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ராசிப்பலன் (01.05.2021): இன்று இந்த ராசிக்காரர்களின் உழைப்பிற்கேற்ற பலன் தேடி வரப்போகிறது…

இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 01 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 01 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Daily Horoscope For 1st May 2021 Saturday In Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்று பணத்தின் அடிப்படையில் நல்ல நாளாக இருக்கும். குறிப்பாக கடன் வாங்க நினைத்தால், இன்று நல்ல செய்தியைப் பெறலாம். வணிகர்கள் இன்று மிகவும் அவசரமாக செயல்பட வேண்டியிருக்கும். உங்கள் வேலைகளில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அது இன்று நிறைவடைய வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களின் நிலை அலுவலகத்தில் வலுவாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்பு அதிகரிக்கும். இன்று உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. உடல்நிலையைப் பொறுத்தவரை, மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9:15 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்று அலுவலகத்தில் நிலைமை கட்டுக்குள் இருக்கும். உங்கள் செயல்திறன் பாராட்டத்தக்கதாக இருக்கும். மேலும், முதலாளியுடனான நல்லுறவும் மேம்படும். வர்த்தகர்கள் நிதி தடைகளை சந்திக்க நேரிடும். பண பற்றாக்குறையால், சில வேலைகள் பாதியில் தடைப்பட வாய்ப்புள்ளது. விரைவில் பிரச்சனை முடிவடையும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் எந்த சுப நிகழ்ச்சியிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். வீட்டு உறுப்பினர்களுடன் இன்று உங்களுக்கு சிறந்த நேரம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:15 மணி முதல் இரவு 10:10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

உத்தியோகஸ்தர்கள் இன்று அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். இன்று வேலையை மாற்றும் திட்டம் குறித்து பரிசீலிக்கலாம். இருப்பினும், அத்தகைய முடிவுகளை அவசரமாக எடுக்கக்கூடாது. வணிகர்கள், தடைப்பட்ட வணிகத் திட்டத்தை மீண்டும் தொடங்க இன்று நல்ல நாள். பணத்தின் நிலைமை மேம்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், வீட்டின் சூழ்நிலை இன்று மிகவும் நன்றாக இருக்கும். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக நாளை கழிப்பீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல்நலம் பற்றி பேசுகையில், இன்று பற்கள் தொடர்பான எந்த பிரச்சனையும் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை

கடகம்

கடகம்

போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கடின உழைப்பின் நல்ல பலனை நிச்சயமாக பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பொறுமையுடன் பணியாற்றுவது நல்லது. நேரம் வரும்போது எதிர்பார்த்த பலன் நிச்சயமாக கிடைக்கும். ஆடை வணிகர்கள் இன்று நல்ல பொருளாதார நன்மைகளைப் பெற முடியும். உங்கள் வணிகம் வளரும். தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் செய்வோர் நல்ல லாபத்தைப் பெறலாம். தந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து கவலைப்படுவீர்கள். எனவே, அலட்சியமாக இருக்காமல் இருப்பது நல்லது. உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:45 மணி முதல் மாலை 4 மணி வரை

சிம்மம்

சிம்மம்

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சரியான வழிகாட்டுதல் கிடைக்கும். இன்று உங்கள் கடினமான பணிகளை எளிதாக முடிக்க முடியும். பொறுப்புகள் அதிகரித்து கொண்டிருந்தாலும், எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. வர்த்தகர்கள் இன்று கலவையான முடிவை பெறலாம். இன்று பெரிய பொருளாதார பரிவர்த்தனைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இன்று வீட்டின் சூழல் மன அழுத்தமாக இருக்கும். உடன்பிறப்புடன் ஒருங்கிணைப்பு பலவீனமடையக்கூடும். வீட்டின் அமைதியைக் காக்க முயற்சிப்பது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். அவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பண வரவு நல்ல நிலையில் இருக்கும். இன்று சில முக்கியமான பொருட்களை வாங்கலாம். இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்போர், அதிகமாக கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:05 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். எந்தவொரு மத நிகழ்ச்சியையும் வீட்டில் ஏற்பாடு செய்யலாம். அன்புக்குரியவர்களுடன் போதுமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் மனதை பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளலாம். இது உங்களை மிகவும் நன்றாக உணர வைக்கும். திருமணமானவர்கள் இன்று விவாதத்தைத் தவிர்த்திடவும். தேவையில்லாமல் உற்சாகமடைய வேண்டாம். பின்னர் எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டியிருக்கும். பணத்தின் நிலை திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். வர்த்தகர்கள் இன்று சில புதிய வணிகத் திட்டங்களை உருவாக்கலாம். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

துலாம்

துலாம்

இறக்குமதி ஏற்றுமதி வியாபாரம் செய்வோருக்கு இன்று ஒரு சவாலான நாள். பெரிய பொருளாதார இழப்புகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் போட்டி கணிசமாக அதிகரிக்கும். அத்தகைய சூழ்நிலையில், சிறந்ததை கொடுக்க முயற்சிக்க வேண்டும். பண நிலைமை நன்றாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வீட்டு இளைய உறுப்பினர்களுடன் சிறு தகராறுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் காதல் இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இன்று நீங்கள் முதுகுவலியால் கலங்கலாம். மேலும், வானிலை மாற்றம் காரணமாக சில சிக்கல்கள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 7 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்க விரும்பினால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். சில நல்ல வாய்ப்பு தேடி வரலாம். சிறு வணிகர்கள் தங்கள் முடிவுகளை சிந்தனையுடன் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அலுவலகத்தில் பெண் சகாக்களுடன் முறையாக நடந்து கொள்ளவும். தேவையற்ற மோதலைத் தவிர்க்கவும். இல்லையெனில் இழப்பு உங்களுக்கு தான். பண நிலைமை நன்றாக இருக்கும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சிந்திக்காமல் செலவு செய்தால், எதிர்காலத் திட்டங்கள் தடைபடக்கூடும். இன்று உங்கள் துணையுடன் மிகவும் காதல் நிறைந்த நேரத்தை செலவிடுவீர்கள். அதிகப்படியான அலைச்சல் காரணமாக இன்று நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை

தனுசு

தனுசு

வீட்டின் சூழல் இன்று நன்றாக இருக்காது. வீட்டு இளைய உறுப்பினர்களுடன் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோபத்தைக் கட்டுப்படுத்தி, புத்திசாலித்தனமாக விஷயத்தைத் தீர்க்க முயற்சி செய்யலாம். வர்த்தகர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மேலும் உங்கள் முக்கியமான எந்த வேலையையும் அவர்கள் தடுக்க முயற்சிக்கலாம். வேலை தேடுபவர்கள், இன்று சில நல்ல செய்திகளைப் பெறலாம். இன்று பணத்தின் அடிப்படையில் கலக்கப்படும். கடன் வாங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியமான சிலர் இன்று பலவீனமாக இருப்பார்கள். மன அழுத்தத்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:55 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

மகரம்

மகரம்

ஃபேஷன் தொடர்பான பணிபுரிவோருக்கு இன்று நல்ல நாள். ஒரு புதிய வாய்ப்பைப் பெறலாம். இது உங்கள் வாழ்க்கையை முன்னேற்றும். கூட்டு வர்த்தகர்கள் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது. இன்று உங்கள் நிதிப் பிரச்சனையும் தீர்க்கப்படும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு போதுமான நேரத்தை வழங்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு ஒரு பரிசை வழங்க நினைத்தால், இன்று அதற்கு நல்ல நாள். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள், உணவில் அதிக கவனம் செலுத்தவும். மன அழுத்தமில்லாமல் இருப்பதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:30 மணி முதல் மாலை 4 மணி வரை

கும்பம்

கும்பம்

வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். குறிப்பாக கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பணத்தின் அடிப்படையில் இன்று நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வருமான ஆதாரத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று உங்கள் பழைய கடனை திருப்பிச் செலுத்த முடியும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பெற்றோர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு சில சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் விரைவில் எல்லாம் சரியாகிவிடும். வேலை முன்னணியில் இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும் இன்று மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1:20 மணி வரை

மீனம்

மீனம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது. உங்கள் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். வணிகர்கள் சிந்தனையுடன் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். வணிகத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய விரும்பினாலும், அவசரத்தைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வீட்டு உறுப்பினர்களிடையே ஒருங்கிணைப்பு மோசமடையும். இன்று, உங்கள் மனதை வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் உங்களின் பல கேள்விகளுக்கு பதில்களையும் பெறலாம். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களுக்கு இன்று தலைவலி பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 1st May 2021 Saturday In Tamil

Check out the daily horoscope for 1st may 2021 saturday in tamil. Read on.
Story first published: Friday, April 30, 2021, 22:33 [IST]
Desktop Bottom Promotion