ஜூன் முதல் நாளில் அதிர்ஷ்டமும் யோகமும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்குமாம்...

ஜூன் மாதத்தின் முதல்நாள் இந்த நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யாருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் யாருக்கு கிடைக்கும்.

ஜூன் மாதத்தின் முதல்நாள் இந்த நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யாருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் யாருக்கு கிடைக்கும். இந்த மாதத்தின் தொடக்கம் யாருக்கு அற்புதமாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? இன்றைய ராசிபலன்களை படிங்க உங்களோட கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஜூன் முதல் நாள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்னிக்கு உத்தியோகத்துல வேலை மற்றும் தகுதிக்கேற்ற மாதிரி இன்க்ரிமெண்ட்டும், ப்ரமோஷனும் கிடைக்கும். கூடவே ட்ரான்ஸ்ஃபரும் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள்ல வெற்றியும் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா எதிர்பாத்த உதவி, ஒத்தாசை தாமதமில்லாம கிடைக்கும். பிசினஸ்ல பார்ட்னரோட உதவியால, இதுவரைக்கும் இருந்து வந்த பிரச்சனை காணாம போயி இம்ப்ருவ்மெண்ட் இருக்கும். பிள்ளைங்களால சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். வருமானமும் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண் : 9

சாதகமான நேரம் : முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

இன்னிக்கு உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பிரயாணத்துனால நல்லது நடந்துடும். சொந்தக்காரங்க ஒத்தாசையா இருப்பாங்க. வேலை செய்யுற இடத்துல கூட வேலை பாக்குறவங்க கிட்ட கொஞ்சம் அனுசரணையா நடந்துக்குறது நல்லது. பிள்ளைங்களோட படிப்புல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பிசினஸ்ல இன்னிக்கு எதிர்பாத்த லாபம் கிடைக்குறதுல தடங்கல் உண்டாகும். சுபகாரிய முயற்சியும் கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 16

சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

இன்னிக்கு மதியத்துக்கு மேல, இழுபறியா இருந்து வந்த தொகை உங்க கைக்கு வந்து சேரும். பிள்ளைங்க வழியில தண்டச்செலவுங்க வந்துடும். நீங்க எடுக்குற முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்களோட சப்போர்ட் கிடைக்கும். வெளியூர் பிரயாணத்துனால அலைச்சல் இருந்தாலும், கடைசியில் உங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். பிசினஸ்ல எதிர்பாத்த கடன் கிடைக்குறதுல தடங்கல் உண்டாகும். உத்தியோகத்துல ஆஃபீஸ்ல வீண் பிரச்சனை வர வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

அதிர்ஷ்ட எண் : 48

சாதகமான நேரம் : இரவு 6:20 முதல் இரவு 8:20 மணிவரை

கடகம்

கடகம்

இன்னிக்கு பிசினஸ்ல கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை ரொம்ப சிறப்பா இருக்கும். சேமிப்பும் எதிர்பாத்த அளவு இருக்கும். பிசினஸ் இம்ப்ரூவ்மெண்ட்டுக்காக பேங்க் லோனுக்கு முயற்சி பண்ணினா இன்னிக்கு கிடைக்கும். வழக்குல வெற்றியும் கிடைக்கும். இன்னிக்கு எடுத்த காரியத்தை செவ்வனே செஞ்சி முடிப்பீங்க. உத்தியோகத்துல வேலைச்சுமை குறையும். சுபகாரிய முயற்சிகளும் கைகூடிவரும். பிள்ளைங்களால வீட்டுல மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துடும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

இன்னிக்கு பண வரத்து சிறப்பா இருக்கும். சுபகாரிய முயற்சிகள்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். வீட்டுலயும் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடந்துடும். பிசினஸ்ல வியாபாரம் பெருகி நல்ல லாபம் கிடைக்கும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா உதவி, ஒத்தாசை கிடைக்கும். பழைய கடனும் வசூலாகிடும். உத்தியோகம் சம்பந்தமா வெளியூர் பிரயாணம் போறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். ஹெல்த் கண்டிஷன்லயும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்

அதிர்ஷ்ட எண் : 7

சாதகமான நேரம் : இரவு 7:00 முதல் இரவு 9:25 மணிவரை

கன்னி

கன்னி

இன்னிக்கு உத்தியோகத்துல சிலருக்கு புதுசா பொறுப்புகள் தேடி வந்து சேரும். ஆடம்பரமான பொருட்களையும் வாங்குவீங்க. வருமானமும் கூடிடும். பேங்க் பேலன்ஸும் கூடும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்குர யோகம் உண்டாகும். இன்னிக்கு நீங்க எடுக்குற எல்லா முயற்சிகளுக்கும் நிச்சயமா வெற்றி கிடைக்கும். ஆஃபீஸ்ல கூட வேலை பாக்குறவங்க உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. ஹெல்த் கண்டிஷனும் ரொம்ப சிறப்பா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 21

சாதகமான நேரம் : மாலை 5:55 முதல் இரவு 8:15 மணிவரை

துலாம்

துலாம்

இன்னிக்கு பிசினஸ்ல கூட்டாளிங்களை கொஞ்சம் அனுசரிச்சி நடந்துக்குறது நல்லது. அதோட எதிர்பாத்த உதவி, ஒத்தாசை கிடைச்சி மனசும் நிம்மதியாகிடும். பிசினஸ்ல செலவுகளை சமாளிக்க கடன் வாங்குற நிலை வந்துடும். உத்தியோகத்துல வேலைச்சுமை குறையும். எந்த வேலையை செஞ்சாலும் கொஞ்சம் நிதானத்தோட நடந்துக்குறது நல்லது. கூடவே கோபத்தையும் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க. இன்னிக்கு அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களை அனுசரிச்சி நடந்துக்கிட்டா தேவையில்லாத பிரச்சனை வராம அவாய்ட் பண்ணிடலாம்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்

அதிர்ஷ்ட எண் : 4

சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்னிக்கு கடன் பிரச்சனை ஓரளவுக்கு குறையும். உத்தியோகத்துல ரொம்ப நாளா எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் இன்னிக்க கிடைக்கும். பிசினஸ்ல பணியாட்கள் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. சுபகாரிய முயற்சிகள்ல இருந்து வந்த தடங்கல், இடைஞ்சல் விலகிடும். சொந்தக்காரங்க கூட மனஸ்தாபம் வந்து போகும். சமூகத்துல பெரிய மனுஷங்களோட அறிமுகமும் கிடைக்கும். ஹெல்த் கண்டிஷனும் இன்னிக்கு சிறப்பா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

தனுசு

தனுசு

இன்னிக்கு கூடப்பொறந்தவங்களால அனுகூலம் நடந்துடும். கடன் பிரச்சனை குறையும். புதுசா எதுலயும் இன்வெஸ்ட் பண்றதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு பல தடவை நிதானமா யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. உத்தியோகத்துல கூட வேலை பாக்குறவங்க கூட இருந்துவந்த மனஸ்தாபம் மறையும். வண்டி வாகனத்தை பராமரிக்குறதுக்காக திடீர் செலவுங்க நேரலாம். ஹெல்த் கண்டிஷன்ல சின்னச்சின்ன பிரச்சனைங்க வரலாம், கவனமா இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 15

சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் இரவு 7:00 மணிவரை

மகரம்

மகரம்

இன்னிக்கு குடும்பத்துல தேவையில்லாததுக்கு பிரச்சனை உண்டாகலாம், கவனமா நடந்துக்கோங்க. பணப் பிரச்சனையினால குடும்பத்துல சண்டை சச்சரவு வரக்கூடும். கூடப்பொறந்தவங்களோட உதவி, ஒத்தாசை கிடைக்கும். பணத்தை எண்ணி எண்ணி செலவழிச்சா, கடன் வாங்குறதுல இருந்து தப்பிக்கலாம், கூடவே சேமிப்பும் கூடும். புது பிசினஸ்ல ஆரம்பிக்குற முயற்சியில தடங்கல் ஏற்படலாம். பிள்ளைங்களால வீண் பிரச்சனை உருவாகலாம். எச்சரிக்கையா இருந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 24

சாதகமான நேரம் : காலை 9:40 முதல் மாலை 5:30 மணிவரை

கும்பம்

கும்பம்

இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, மத்தவங்க விஷயத்துல தேவையில்லாம மூக்கை நுழைக்காதீங்க. மவுன விரதம் இருக்குறது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வேலையில கூடுதல் கவனம் செலுத்துறது நல்லது. வண்டி வாகனத்துல போகும்போது எச்சரிக்கையோட நடந்துக்கோங்க. குடும்ப உறுப்பினர்கள் கிட்ட தேவையில்லாத மனஸ்தாபம் வர வாய்ப்பிருக்கு. ஹெல்த் கண்டிஷனும் கொஞ்சம் மந்தமாவே இருக்கும் சாப்பாடு விசயத்தில கவனமாக இருங்க-

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 34

சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 4:25 மணிவரை

மீனம்

மீனம்

இன்னிக்கு பிசினஸ்ல எதிர்பாத்த லாபம் கிடைக்கும். வருமானமும் கூடிடும். சுபகாரிய முயற்சிகள்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான லேவா தேவி பரிவர்த்தனையில கொடுத்த வாக்குறுதிய காப்பாத்துவீங்க. பிசினஸ்ல புது கூட்டாளிங்களோட சப்போர்ட்டால லாபம் கிடைக்கும். உங்க வீட்டுல இன்னைக்கு மகிழ்ச்சி தாண்டவமாடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண் : 34

சாதகமான நேரம் : பிற்பகல் 2:00 முதல் மாலை 5:55 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, June 1, 2020, 6:00 [IST]
Desktop Bottom Promotion