For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

|

இன்றைய கிரக நிலைகளைப் பொறுத்தவரை, சிலருக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாகவும், இன்னும் சிலருக்கு சவால் நிறைந்த நாளாகவும் இருக்கும். உங்களது ராசிக்கான இன்றைய பலனை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள். கீழே ஒவ்வொரு ராசியின் இன்றைய பலன்கள் மட்டுமின்றி, அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட நேரம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இன்று வேலை முன்னணியில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இன்று அலுவலகத்தில், நீங்கள் சிக்கித் தவிக்கும் சூழ்நிலையை சந்திக்க நேரிடும். பணம் தொடர்பான விஷயங்களைப் பற்றி பேசினால், இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் எதிர்மறையான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களை கஷ்டப்படுத்தும். எனவெ உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இன்று உங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது, ஆனால் இது தொடர்பாக உங்கள் இருவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்கள் உடல்நல விஷயங்கள் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அதிர்ஷ்ட எண் : 17

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இன்று அலுவலக சூழல் திடீரென மோசமடையக்கூடும். இன்று உங்கள் சகாக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சொல்வது சரி என்றால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் நீங்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் உங்கள் கருத்தை முன் வைக்க வேண்டும். இன்று, உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். உங்கள் நிதி நிலைமையைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான எந்தவொரு கவலையும் நீங்கும். உங்கள் காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் துணையுடனான உறவு வலுவாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண் : 28

அதிர்ஷ்ட நேரம் : காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று ஒரு பெரிய பொருளாதார லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் முடிக்கப்படாத அனைத்து வேலைகளையும் சீராக முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணி எந்த இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். உங்கள் முதலாளி இன்று உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். அதே நேரத்தில், வணிகர்கள் தங்கள் கடின உழைப்பின் முடிவுகளையும் பெறுவார்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், திருமணமான தம்பதிகளுக்கு இந்நாள் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு, நீங்கள் ஒரு மறக்கமுடியாத நாளை உங்கள் துணையுடன் செலவிடுவீர்கள். இன்று கண்களை மூடிக்கொண்டு யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 19

அதிர்ஷ்ட நேரம் : காலை 10 மணி முதல் மாலை 6.20 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே! இன்று நீங்கள் மிகவும் பதற்றமாக இருப்பீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உங்கள் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கவும் விரும்பினால், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். மேலும், நீங்கள் எண்ணெய் அல்லது காரமான உணவை தவிர்க்க வேண்டும். இன்று நீங்கள் வணிகம் தொடர்பான விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு கண் வைத்திருங்கள். வேலை செய்யும் மக்களுக்கு இது ஒரு சாதாரண நாளாக இருக்கும். இன்று பணத்தின் அடிப்படையில் கலப்பு நாளாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 23

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இன்று உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கான எந்தவொரு முக்கியமான திட்டத்தையும் நீங்கள் செய்யலாம். உங்கள் முயற்சிகள் எதிர்காலத்தில் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தர வாய்ப்புள்ளது. நீங்கள் இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணத்தைப் பொறுத்தவரை இன்று ஒரு சிறப்பான நாள் அல்ல. நீங்கள் ஒரு புதிய திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால், கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்க்கை சாதாரணமாக இருக்கும், ஆனால் இன்று உங்கள் காதல் வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் இருக்கலாம். இன்று உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 10

அதிர்ஷ்ட நேரம் : காலை 9.45 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! பொருளாதார முன்னணியில், நாள் நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் சமநிலையை வைத்திருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் சச்சரவு இருக்கும். இன்று உங்கள் துணையுடன் நீங்கள் ஒரு பெரிய சண்டை போடலாம். பரஸ்பர புரிதல் இல்லாததால் உங்கள் உறவு பலவீனமடையக்கூடும். இன்று உங்கள் தாயின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். காதல் விஷயத்தில், இந்நாள் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். இந்த நாள் வேலை முன்னணியில் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். அதிக வேலை அழுத்தம் காரணமாக உங்கள் செயல்திறன் அளவு குறையக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 42

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இன்று உங்களுக்கு சாதாரணமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலைமை பற்றி பேசும் போது, பணம் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இருக்காது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் துணையின் உடல்நலம் கொஞ்சம் மோசமாக இருக்கலாம். இந்த நேரத்தில், அவர்கள் உடல்நலம் குறித்து கவனக்குறைவாக இருக்கக்கூடாது. வேலை செய்பவர்கள் தங்கள் உணர் அதிகாரிகளின் உதவியுடன் ஏதேனும் பெரிய பிரச்சினைகளில் இருந்து விடுபடுவார்கள். உங்கள் பணிகளில் உள்ள தடைகளை சமாளிக்க முடியும். வங்கி தொடர்பான பணிகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், இன்று நிறைவடையும். காதல் பற்றி பேசினால், நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண் : 34

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இன்று உங்கள் மனைவியுடன் முரண்பாடு ஏற்படலாம். உங்கள் பணியிடத்தில் சில சிக்கல்கள் இருக்கலாம். சில காரணங்களால் அலுவலகத்தில் உங்களது சில முக்கியமான பணிகள் இன்று நிறைவடையாது, இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் இன்று மிகவும் பிஸியாக இருப்பார்கள். பணத்தின் அடிப்படையில் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். மிக விரைவில் ஒரு புதிய வருமான ஆதாரத்தைப் பெறலாம். இன்று உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

அதிர்ஷ்ட எண் : 36

அதிர்ஷ்ட நேரம் : காலை 7.05 மணி முதல் மதியம் 12.10 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! பணியிடத்தில் நிலைமை சாதகமாக இருக்கும். உங்கள் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களை ஊக்குவிக்கும், இது உங்கள் செயல்திறனை இன்னும் மேம்படுத்தும். பொருளாதாரப் பக்கம் வலுவாக இருக்கும். திடீர் பண ஆதாயங்களுடன், புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பும் உள்ளது. இன்று வீடு தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் தீர்ப்பதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். இன்று உங்கள் வீட்டின் சூழல் அமைதியாகவும், சண்டைகள் இல்லாமலும் இருக்கும். இன்று, உங்கள் திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருக்கலாம். தேவையற்ற செலவு உங்கள் பட்ஜெட்டை குழப்பக்கூடும். ஆரோக்கியத்தின் முன்னேற்றத்துடன், உங்கள் முடிக்கப்படாத பணிகளை நீங்கள் முடிக்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 21

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 3.15 மணி முதல் இரவு 9.35 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களே! இன்று நீங்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்க மாட்டீர்கள். இன்று உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் சரியான உணவோடு போதுமான ஓய்வு எடுக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் லேசான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். இன்று நீங்கள் உங்கள் குழந்தையைப் பற்றி கவலைப்படுவீர்கள். அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு கண் வைத்திருப்பது நல்லது. நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறவில்லை என்றால், உங்கள் கடின உழைப்பைக் குறைக்காதீர்கள், உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். இன்று, உங்கள் துணையுடன் சில சிக்கல்கள் இருக்கும். மேலும் நிறைய செலவுகள் இருக்கும். இது உங்கள் நிதி நிலையையும் பாதிக்கும். மன அழுத்தமும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கோல்டன்

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம் : காலை 7.25 மணி முதல் மதியம் 12.40 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! பொருளாதார முன்னணியில், நாள் சரியாக இல்லை. செலவினங்களின் அதிகரிப்பு உங்கள் பட்ஜெட்டை அழித்துவிடும். வீட்டில் சிறிய வாதங்கள் இருந்தாலும் உங்கள் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீங்கள் மன அமைதியைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கையைப் பற்றி பேசினால், இன்று அதிகப்படியான பேச்சு உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். உங்கள் உடல்நலம் மேம்படும் என்பதால் நீங்கள் நன்றாக உணருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நேரம் : மாலை 4.20 மணி முதல் இரவு 10 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களே! பணத்தைப் பற்றி பேசினால், செலவுகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் நிதி விஷயங்கள் தொடர்பான முடிவுகளை கவனமாக எடுத்தால், நீங்கள் சிறிது லாபத்தைப் பெறலாம். இன்று, ஆரோக்கியத்தை புறக்கணிப்பது உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையை உண்டாக்கும். நீண்ட நேரம் வேலை செய்யும் உங்கள் பழக்கம் இன்று உங்களை சிக்கலில் சிக்க வைக்கக்கூடும். இன்று எந்த விதமான விவாதத்திலும் ஈடுபடாதீர்கள். உங்கள் துணையின் கவனக்குறைவு உங்கள் இருவருக்கும் இடையிலான தூரத்தை அதிகரிக்கும். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். உங்கள் பெற்றோரிடமிருந்து பாசம் பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று பணியிடத்தில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெளிரிய மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 21

அதிர்ஷ்ட நேரம் : மதியம் 2.05 மணி முதல் இரவு 8 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 19th January 2020 Sunday In Tamil

Check out the daily horoscope for 19th january 2020 sunday. Read on...
Story first published: Sunday, January 19, 2020, 6:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more