For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே?

By Mahibala
|
18-09-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள்.

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

வாகனங்களில் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள். வியாபாரங்ளில் தேவையில்லாத அலைச்சல்கள் வந்து போகும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சுப செய்திகள் வந்து சேரும். அதனால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கியப் பணியில் பொறுப்புகளில் இருப்பவர்கள் உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ளங்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்குச் சாதகமான முடிவை தருவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

MOST READ: இந்த வாரம் முழுக்க உங்கள் ராசிக்கான பலன்கள் எப்படியிருக்கும்? தெரிஞ்சிக்கங்க (செப்15-21)

ரிஷபம்

ரிஷபம்

புதிய நட்பு வட்டாரம் உUவாகும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் செல்லும் இடமெல்லாம் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். தொழில் பங்குதாரர்களுடன் இணைந்து செய்கின்ற செயல்கள் எல்லாமே லாபத்தையே தரும். மனதுக்குள் நினைத்து வைத்திருந்த காரியங்கள் நிறைவேற தேவையான அனுகூலமான விஷயங்கள் நடக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

உயர்கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். சர்வதேச பயணங்களின் மூலமாக உங்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீல நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

இன்பச் சுற்றுலா சென்று வருவதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். எந்த காரியமாக இருநு்தாலும் அதை கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செய்யுங்கள். வேலையிடத்தில் உங்களுக்கான புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கொஞ்சம் கேளிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொண்டு, சந்தோஷம் அடைவீர்கள். வீட்டில் உள்ளவர்குளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது தேவையில்லாத சங்கடங்களைத் தவிர்க்க உதவும். ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

உங்களுடைய சுயதொழிலை மேம்படுத்துவதற்கான புதிய யுக்திகளை மேற்கொள்வீர்கள். உடல் எடையைக் குறைப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். மனதுக்குள் தேங்கி குழப்பிக் கொண்டிருநு்த விஷயங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகின்ற ஆட்களுக்கு வெளியிடங்களில் இருந்து உதவிகள் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய காரயிங்களில் ஈடுபட்டு மனம் அமைதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். தொழிலில் பங்குதாரர்களுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகளும் மன வருத்தங்களும் உண்டாக வாய்ப்பு உண்டு. கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

ஆன்மீகம், நன்கொடை ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். மனம் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைவீர்கள். தொழிலில் பங்குதாரர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை மேலோங்கும். பழைய நண்பரைச் சந்திப்பீர்கள். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

MOST READ: புரட்டாசியில் சைவம் மட்டுமே கண்டிப்பாக சாப்பிடணும் - அறிவியல் உண்மைகள்

விருச்சிகம்

விருச்சிகம்

வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்க ஆரம்பிக்கும். விளையாட்டு சம்பந்தப்பட்ட துறைகளில் இருக்கின்றவர்களுக்கு கொஞ்சம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பயணங்களின் மூலமாக தொழிலில் மாற்றங்கள் உருவாகும். எந்த வேலை கொடுத்தாலும் அதை குறைவான நேரத்தில் வேகமாக செய்து முடித்து நன்மதிப்பை பெறுவீர்கள். மன தைரியமும் தன்னம்பிகையும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். தொழிலில் தேவையில்லாத அலைச்சல்கள் வந்து போகும். ஆனாலும் நல்ல செய்திகள் கொஞ்சம் காலதாமதமாக வந்து சேரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு பெரும் லாபம் உண்டாகும். உங்களுடைய சொந்த தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

கணினி தொடர்பான பணிகளில் இருக்கின்றவர்களுக்க பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் செய்யும் இடத்தில் புதுவிதமான அனுபவங்கள் தோன்றும். உறவினர்களைப் பார்ப்பதற்கான சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலை மேம்படுத்துவதற்கான கடன் வாங்கியாவது நிறைய புதிய முயற்சிகளை செயல்படத் திட்டமிடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்

கும்பம்

தொழில் சம்பந்தமாக சின்ன சின்ன அலைச்சல்கள் இருந்தாலும் அதனால் சாதகமான சூழல்களே உருவாகும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். தொழிலில் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் வர வேண்டிய பணவரவு கொஞசம் நிலுவையிலேயே இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

MOST READ: கண்கள் அடிக்கடி வறண்டு போய் எரிச்சல் எடுக்குதா?... முதல்ல இத செய்ங்க...

மீனம்

மீனம்

திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்து்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகளு உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் உங்களுடைய செல்வாக்கும் மதிப்பும் உயர்நு்து கொண்டே போகும். வீட்டில் பெற்றோர்களின் ஆசிர்வாதமும் அறிவுரையும் உங்களுடைய மனதுக்குள் தெளிவை உண்டாக்கும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எங்கு சென்றாலும் வெற்றியே உண்டாகும். நிர்வாகத் துறையில் இருக்கின்றவர்கள் சின்ன சின்ன மாறறங்கள் செய்வது நல்லது. தலைமைப் பொறுப்புக்கு செல்வதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 18th septempter 2019 Wednesday

Each horoscope article on the Boldsky astrology section will cover all aspects of your life, right from career, personal life, finances, health to even travel and education. While the daily horoscopes will provide you with all the information you need to know ahead of your day. It will also help you take busin 18th septempter 2019 wednesday
Story first published: Wednesday, September 18, 2019, 6:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more