Latest Updates
-
வெந்தய கஞ்சியும்.. கறிவேப்பிலை துவையலும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-புதன்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாக் அடிக்கப்போகுது.. -
Tamil Nadu Election 2026: தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏன் ஜிகர்தண்டாவை அவசியம் குடிக்கணும் தெரியுமா? -
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது..
இன்றைய ராசிப்பலன் (18.01.2021): இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 18 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஜனவரி 18 ஆம் தேதி திங்கட்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...


மேஷம்
இன்று உங்கள் மனநிலை மிகவும் நன்றாக இருக்கும். மேலும், உங்கள் நாளை மேலும் சிறப்பாக்க சில நல்ல திட்டங்களை தீட்டலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்க வேண்டுமென்றால், பிறர் மனம் புண்படும்படி எந்த காரியத்தையும் செய்யக்கூடாது. பெற்றோரின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள். தந்தையிடமிருந்து நிதி ரீதியான உதவியை பெற்றிடலாம். உடன்பிறப்புகளுடனான உறவு வலுப்பெறும். உங்களது சிறப்பான செயல்திறனால் வெற்றி கிட்டும். அலுவலக பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் நிதி ரீதியாக பயனடைவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் 12:25 மணி வரை

ரிஷபம்
இன்று முக்கிய விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறுவதைக் காணலாம். உங்கள் திட்டங்கள் அனைத்தும் திட்டத்தின் படி செய்ய முடியும். வணிகர்கள் ஒரு பெரிய பலனைப் பெற்றிடலாம். நீண்ட காலமாக காத்திருந்த வாய்ப்பு கிடைக்கப்பெறுவீர்கள். அலுவலகத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். வெளிநாடு செல்ல விருப்புவோரின் கனவு விரைவில் நிறைவேறும். வேலை தொடர்பான பயணம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். இந்த பயணத்திலிருந்து நல்ல நிதி நன்மை கிடைக்கும். பதவி உயர்வை பெறவும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்துவந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். இன்று நீங்கள் சிறந்த மனநிலையில் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 36
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை

மிதுனம்
உடல்நலம் மீதான உங்களது கவனக்குறைவு உங்களை சில பெரிய சிக்கல்களில் சிக்க வைக்கும். உடல்நிலை சரியில்லை என்றால், உடனடியாக நல்ல மருத்துவரை அணுக வேண்டும். ஆரோக்கியமாக இருப்பதன் மூலம் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று தனிப்பட்ட வாழ்க்கையில் சில மன அழுத்தங்கள் சாத்தியமாகும். உடன்பிறப்புகளுடன் கருத்தியல் வேறுபாடுகள் ஏற்படலாம். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். இன்று வாழ்க்கைத் துணையுடன் மிகவும் மறக்கமுடியாத நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களது செயல்திறனை பார்த்து, அனைவரும் உங்களைப் புகழ்வார்கள். உங்கள் வேலையில் உயர் அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சியடைவர்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 மணி முதல் மாலை 5:30 மணி வரை

கடகம்
வேலை முன்னணியில் இன்று அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால், வேலையில் கவனம் செலுத்த முயற்சிக்கவும். உங்கள் அலட்சியத்தால், நீங்கள் வேலையை இழக்க நேரிடும். எனவே, செய்யும் வேலையில் கவனமாக இருந்தால் நன்றாக இருக்கும். நிதி ரீதியாக, இந்த நாள் உங்களுக்கு சில சிறந்த வாய்ப்புகளைத் தரும். உங்கள் செயலால் உங்களது வாழ்க்கைத் துணை மனச்சோர்வடையக்கூடும். நடத்தை மற்றும் சொற்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அன்புக்குரியவரிடம் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும். உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 22
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாகவும், நிதானமாகவும் செயல்படவும். நீங்கள் மாணவராக இருந்தால், உயர்கல்விக்கான உங்களது தொடர்ச்சியான முயற்சிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் படிக்க விரும்பினால், இன்று நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம். நிதி நிலைமை பற்றி பேசினால், இன்று சில பெரிய நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களது பழைய முதலீட்டிலிருந்து இரட்டை லாபத்தைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வயதிலிருக்கும் உங்களது பிள்ளைக்கு ஒரு நல்ல வரன் தேடி வரக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சேர்ந்து பணியாற்றும் திறனை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். வணிகர்கள் எதிர்பார்த்தபடி நல்ல முடிவுகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4:00 மணி வரை

கன்னி
இன்று நீங்கள் மிகவும் தனிமையாகவும் மனச்சோர்வாகவும் உணருவீர்கள். பல வகையான கவலைகள் உங்கள் மனதில் இருக்கும். மேலும், சில முக்கியமான முடிவுகளை எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கும். எனவேஇ இன்று எந்த முக்கியமான முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவில் வெளிப்படையாக இருங்கள். நீங்கள் பழைய சொத்தை விற்க நினைத்தால், இன்று வெற்றியைப் பெறலாம். பணத்தின் அடிப்படையில் இன்று ஒரு நல்ல நாள். வேலை முன்னணியில் சாதாரணமாக இருக்கும். இன்று அலட்சியம் காரணமாக சில உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 18
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:40 மணி வரை

துலாம்
இன்று உங்களுக்கு சற்று கடினமான தினமாக இருக்கும். எனவே, நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சனைகளால் மன அழுத்தம் அதிகரிக்கும். எந்தவொரு சர்ச்சைக்குரிய பிரச்சனையை பற்றியும் வீட்டில் விவாதிப்பதைத் தவிர்க்கவும். இதனால் வீட்டின் அமைதி கெடவும் வாய்ப்பு உள்ளது. வேலையைப் பற்றி பேசினால், இன்று நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையின் தொல்லைகளால் வேலையில் கவனம் செலுத்த முடியாது. வணிகர்கள் இன்று கொஞ்சம் இழப்பைச் சந்திக்க நேரிடும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். பெரிய செலவுகளை இன்றைய தினம் தவிர்த்திடவும். இன்று உடல்நலம் குறையக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் இரவு 7:00 மணி வரை

விருச்சிகம்
பணத்தைப் பொறுத்தவரை இன்று நாள் நன்றாக இல்லை. செலவினங்களில் திடீரென அதிகரிக்கும் செலவுகளால் பிரச்சனைகளும் அதிகரிக்கும். நீங்கள் வீட்டை விட்டு விலகி இருப்போர், இன்று நிறைய சிக்கல்களையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும். உங்கள் விலைமதிப்பற்ற பொருளை இழக்க வாய்ப்பு உள்ளது அல்லது திரடு போகலாம். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் அதிக அழுத்தத்தை உணருவோருக்கு, இன்று ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடலாம். எதிர்காலம் குறித்த எந்தவொரு முக்கியமான திட்டங்கள் பற்றி இன்று பெற்றோருடன் விவாதிக்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: இரவு 7:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை

தனுசு
கடந்த கால விஷயங்களை மறந்து ஒரு புதிய தொடக்கத்தை நீங்கள் செய்ய வேண்டும். கடந்த கால நினைவுகள் உங்களை முன்னேற முடியாது. இந்த நேரத்தில், அனைத்து வேலைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்களை ஒதுக்கி வைக்கவும். மன அழுத்தமில்லாமல் இருப்பதன் மூலம் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். பணத்தின் அடிப்படையில் இன்று ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலைமையை பலப்படுத்தப்படும். வியாபாரிகள், இன்று உங்கள் பணி தொடர்பான எந்த முக்கியமான முடிவையும் எடுக்கலாம். திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள் இருந்தால், அதனை சரிசெய்ய உடனே முயற்சிக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் உறவில் கசப்பை அதிகரிக்கக்கூடும். அதிகப்படியான கவலையால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை

மகரம்
உங்கள் இயல்பில் ஏற்படும் சிறிய மாற்றம் பல சிக்கல்களை நீக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் தகராறு இன்று முடிவடையும். அன்புக்குரியவர்களுடன் வலுவான உறவைப் பேண விரும்பினால், உங்கள் நடத்தையை சீரானதாக வைத்திருங்கள். உங்கள் குழந்தைகள் மீது இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. சரியான வழிபாட்டுதல் இல்லாவிட்டால், இலக்கிலிருந்து விலகக்கூடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டிய நாள். வேலை முன்னணியில் நிலைமை சாதகமாக இருக்கும். பணத்தின் அடிப்படையில் இன்று நல்ல நாள். சில அவசர செலவுகள் வரக்கூடும். அதனால் எவ்வித நிதி பிரச்சனையும் இருக்காது.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை

கும்பம்
அன்பான தம்பதிகளுக்கு இடையே இன்று காதல் மிகுந்த நாளாக இருக்கும். நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சிறிது நேரம் செலவிடுவீர்கள். திருமணமானவர்களுக்கு இன்று ஒரு அற்புதமான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று நிதி ஆதாயம் சாத்தியமாகும். இன்று நீங்கள் ஆலய வழிபாடு, பூஜைகள், நன்கொடைகள் போன்றவற்றுக்காகவும் கொஞ்சம் பணம் செலவழிக்கலாம். பாதியில் சிக்கிய வேலை மீண்டும் தொடங்கப்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதகமாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண்: 47
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:20 மணி முதல் மாலை 3:30 மணி வரை

மீனம்
இன்று, வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மாலைக்குள், அனைத்து கோபமும் அடங்கி, இயல்பு நிலைக்கு திரும்பும். பணத்தைப் பற்றி பேசினால், இன்று செலவுகள் அதிகரிக்கக்கூடும். தேவையற்ற விஷயங்களுக்காக அதிக பணம் செலவிடலாம். இன்று வேலை முன்னணியில் ஒரு நல்ல நாளாக இருக்கும். உங்கள் பணிகள் அனைத்தும் எந்தவித இடையூறும் இல்லாமல் முடிக்கப்படும். இன்று, நீங்கள் உங்கள் வேலையை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்க முடியும். கூட்டு வியாபாரம் செய்வோருக்கு அதிக நன்மை பயக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:40 மணி முதல் மாலை 5:30 மணி வரை



Click it and Unblock the Notifications











